screw driver ஸ்டோரீஸ்
"தேங்க்ஸ் அசோக்.. ஆனா.. எனக்கு ரொம்பலாம் இ..இன்ட்ரஸ்ட் இல்லடா..!!"

"இன்ட்ரஸ்ட் இல்லையா..? அப்புறம் எதுக்கு வந்த..?"

"சும்மா.. உன்கூட கொஞ்சம் வெளில சுத்தலாமேன்னு..!! வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடக்க ரொம்ப போரடிக்குதுடா..!!"

சொல்லிவிட்டு அவன் சோகமாக தலையை கவிழ்த்துக் கொண்டான். அவனுடைய சோகத்தின் அர்த்தம் எனக்கு புரியும். நான் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தேன். பின்பு அவனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

"டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணி.. அவ மூஞ்சில விட்டெறிஞ்சிட்டேன்..!!"

"ஓ.. எப்போ..?"

"ரெண்டு நாளாச்சு..!! இனிமேயும் அவ திருந்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல.. போய்த்தொலைன்னு விட்டுட்டேன்..!!"

"ம்ம்.. குட்.. அதுவும் நல்லதுக்குத்தான்..!! ஆனா.. அதையே நெனச்சுட்டு இருக்காத அன்பு.. வேற ஏதாவது..."

"எப்டிடா நெனைக்காம இருக்க முடியும்.. கோர்ட்ல வச்சு.. என்னை எவ்ளோ கேவலப் படுத்தினான்னு உனக்கு தெரியும்ல..? அப்டியே நாக்கை புடுங்கிட்டு சாகலாம் போல..."

"டேய்..." நான் சற்று அதட்ட,

"எப்டிடா நெனைக்காம இருக்க முடியும்..? கண்ணை மூடினா.. அந்த தே.. அவதான் வந்து நிக்கிறா..!! அவளை எவ்ளோ லவ் பண்ணினேன்னு தெரியுமா அசோக்..? எவ்ளோ ஆசை ஆசையா மேரேஜ் பண்ணிக்கிட்டேன் தெரியுமா..? எல்லாமே போச்சு..!!!!"

அவன் சொல்லிவிட்டு உடைந்து போய் அழ ஆரம்பித்தான். நான் அவனை தடுக்கவில்லை. அழட்டும் என விட்டுவிட்டேன். கொஞ்ச நேரம் விசும்பினான். அப்புறம் மூன்றாவது லார்ஜ் விஸ்கியை, மிக்சிங் கலக்காமல் அப்படியே வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டான். திடீரென சத்தமாக சொன்னான்.

"மனைவி அமைவதெல்லாம்... இறைவன் கொடுத்த வரம்...!!!!!!"

"ஏய்.. அன்பு.. உனக்கு ஓவராயிடுச்சு.. உளற ஆரம்பிச்சுட்ட.."

"இது உளறல் இல்லை அசோக்.. உண்மை..!! நல்ல பொண்டாட்டி அமைய.. எந்த ஆம்பளையும் கொடுத்து வச்சிருக்கனும்டா.. என் விஷயத்துல கடவுள் காலை வாரிட்டான்... என் வாழ்க்கையே நாசமா போயிடுச்சு..!! ஆனா.. ஆனா... நீ அந்த விஷயத்துல ரொம்ப அதிர்ஷ்டசாலிடா.."

"டேய்.."

"நெஜமா அசோக்..!!! என் மனசுல பட்டதை சொல்றேன்.. அகல்யா.. தேவதை மாதிரி ஒரு பொண்ணுடா.. அந்த மாதிரி ஒரு பொண்ணு பொண்டாட்டியா அமையுறதுக்கு.. நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. அவளை நல்லா வச்சுக்கோ அசோக்..!! அவளுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்கோ..!!"

அப்புறம் அவன் எதுவும் பேசவில்லை. 'அவளுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்கோ..!!' என்று அன்பு சொன்ன வார்த்தைகள் என் மனதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தன. நான் பொறுமையாக அந்த பீரை முடித்தேன். நடுவில் அவன் டாய்லட் சென்ற போது, அந்த நாலாவது லார்ஜ் விஸ்கியில் இரண்டு தூக்க மாத்திரைகளை பொடி செய்து போட்டேன். ஸ்டிர் செய்து விட்டேன். திரும்ப வந்து அவன் அதை எடுத்து குடித்ததும், அங்கிருந்து கிளம்பினோம். இப்போது நான் காரை ஓட்டினேன். அவன் அருகில் அமர்ந்து புலம்பிக் கொண்டே வந்தான்.

ஒரு பத்து நிமிடத்தில், மனோதத்துவ கருத்தரங்கு நடக்கும் அந்த ஆடிட்டோரியத்தை அடைந்தோம். காரை பார்க்கிங் செய்துவிட்டு, நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். பெரிய ஆடிட்டோரியம். ஆனால் காத்தாடிக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். நாங்களும் ஒரு மூலையில் சென்று அமர்ந்தோம்.

கொஞ்ச நேரத்திலெல்லாம் கருத்தரங்கு ஆரம்பமானது. வெள்ளை நிற தாடியில் இருந்த, புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் ஒருவர் உரையாற்ற ஆரம்பித்தார். 'இல்லற வாழ்க்கையில் மனோதத்துவம்' என்ற தலைப்பில் பேசினார். எடுத்ததுமே 'கணவன் மனைவி உறவு.. ஒரு புனிதமான உறவு...!!!' என்று ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் அவருடைய பேச்சை சுவாரசியமாக கேட்ட நான், அப்புறம் பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். அன்பு தூங்க ஆரம்பித்திருந்தான். அவனுடைய தோளை குலுக்கி.. மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்திருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமே என்னை கவனியாத ஒரு தருணத்தில், மெல்ல நழுவி ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தேன். மழை இப்போது ஓரளவு ஓய்ந்திருந்தது. மெலிதான தூறல் மட்டும்..!! நான் செல்போனை எடுத்து அந்த நம்பரை தட்டினேன். பிக்கப் செய்யப்பட்டதும்,

"ரெடி.. எங்க வரணும்..?" என்றேன்.

"திருவள்ளூர் ஹை-ரோட் ஜங்க்ஷன் தெரியுமா..?" கேட்டது மறுமுனை குரல்.

"ம்ம்.."

"அங்க வந்துடு.. இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள நான் அங்க இருப்பேன்..!!"

அவ்வளவுதான்..!! காலை கட் செய்தேன். இப்போது நான் பேசி முடித்தது அழகு நாயகத்திடம்..!! என்னுடைய பழைய கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர். அவருடைய கம்பெனியில்தான் ஐந்து வருடங்களாக ஃபைனான்ஸ் டிப்பார்ட்மன்ட்டில் வேலை செய்தேன். இரண்டு வாரங்கள் முன்பு, அழகு நாயகம் என் வேலையை பறித்தார். எனக்கு வேலை போன விஷயம் மட்டுந்தான், அகல்யாவுக்கு தெரியும். அதன் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியும், சதியும் அவளுக்கு தெரியாது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 16-02-2019, 10:42 AM



Users browsing this thread: 1 Guest(s)