screw driver ஸ்டோரீஸ்
"ஏன் அப்டி பாக்குற..?"

"இல்ல.. நைட்டுலாம் இல்லாத வெக்கம்.. பகல்ல மட்டும் எங்க இருந்து வருதுன்னு பாக்குறேன்..!!" சொல்லிவிட்டு நான் கண்ணடிக்க,

"ச்சீய்...!!!!!!!!!"

அகல்யா வெட்கத்துடன் சொன்னவாறே என்னை வெளியே தள்ளினாள். கதவை சாத்திக் கொண்டாள். அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் சிரிப்பும், மலர்ச்சியுமாய் இருந்த என் முகம் பட்டென மாறியது. ஒரு வித சீரியஸ்னஸ் வந்து குடிகொண்டது. இன்ஸ்டன்டாய் சுறுசுறுப்பானேன். அடுத்த ரூமுக்கு சென்று.. பீரோ திறந்து.. என் வாட்ச், மோதிரம், செயின், பாக்கெட்டில் இருந்த தேவையான, தேவையற்ற காகிதங்கள் எல்லாம் அள்ளி உள்ளே போட்டு மூடினேன். சில நூறு ரூபாய்கள் எடுத்து பர்ஸில் வைத்துக் கொண்டேன். பர்ஸை பின்புற பேன்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன். அலமாரி சென்று தூக்க மாத்திரைப் பட்டை தேடி, நான்கைந்தை பிய்த்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். ஹேங்கரில் தொங்கிய ரெயின் கோட் எடுத்து அணிந்து கொண்டேன்.

சேரை நகர்த்திப் போட்டு ஏறி, மேலே கை விட்டு, ஸ்லாபில் இருந்து அந்த காட்டன் பாக்ஸை எடுத்தேன். நேற்று பாண்டிபஜாரில் ரோட்டோர கடையில் வாங்கிய அந்த புது ஷூவை, அந்த பாக்ஸில் இருந்து எடுத்தேன். அவசரமாக அணிந்து கொண்டேன். பின்பு, அகல்யா இருந்த அறையை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு, அந்த காட்டன் பாக்சுக்குள் கைவிட்டு அந்த கத்தியை எடுத்தேன். அரையடிக்கு சற்று அதிகமான நீளத்தில், பளபளவென்று கூர்மையாக மின்னியது. இதுவும் நேற்று பாண்டி பஜாரில் வாங்கிய ஐட்டம்தான். உடலில் பாய்ந்து.. உயிரை பறிக்கும்.. உலோக எமன்..!! கத்தியை உறைக்குள் போட்டு, காலுக்கு பக்கவாட்டில் சாக்சுக்குள் செருகினேன்.

"என்னப்பா.. வெளில கெளம்பிட்டியா..?" திடீரென அகல்யாவின் குரல் கேட்டு நான் சற்று அதிர்ந்து போனேன்.

"ஆ..ஆமாண்டா ..!!" என்றேன் சமாளித்தவாறு.

"இன்டர்வியூவா..?"

"இல்லை.. என் ஃப்ரண்ட் அன்பு இருக்கான்ல.. அவனை பாக்க போறேன்..!!"

"ஓஹோ..? எப்போ வருவ..?"

"நைட்டு ஆயிடும்னு நெனைக்கிறேன்..!!"

"சரிப்பா.. பத்திரமா போயிட்டு வா..!!"

கனிவுடன் சொன்ன என் மனைவியையே நான் கொஞ்ச நேரம் காதலாக பார்த்தேன். அப்புறம் பட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன். அவளது நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். என் கண்களில் ஒரு துளி நீர் துளிர்த்தது. அதை அவளுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டேன். அவளுடைய காதோரமாக மெல்லிய குரலில் சொன்னேன்.

"ஐ லவ் யூ டி அம்மூ..!!"

"ஐ லவ் யூ ப்பா..!!"

வீட்டை விட்டு வெளியே வந்தேன். மழையில் அதிகம் நனைந்து விடாமலே, ஆட்டோ ஒன்று கிடைத்தது. அன்புவின் வீடு மதுரவாயலில் இருக்கிறது. வளசரவாக்கம் வாட்டர் டேங்கில் இருந்து கிளம்பிய ஆட்டோ, ஆலப்பாக்கம் வழியாக மதுரவாயலை அடைய கால் மணி நேரம் பிடித்தது. அன்பு எனக்காக காரில் காத்திருந்தான். ஆட்டோவில் இருந்து அவனுடைய காருக்கு மாறினேன். அன்பு காரை ஓட்டினான். மழையில் மெல்ல ஊர்ந்துகொண்டிருந்த காரை, மதுரவாயல் ஃப்ளை ஓவர் ஏறி, பூந்தமல்லி சாலையில் செலுத்தியதும் விரட்டினான். வேலப்பன் சாவடியை நெருங்கும்போது..

"ட்ரிங்க்ஸ் சாப்பிடனும் போல இருக்குடா அன்பு..!! சாப்பிடலாமா..?" என்றேன் நான்.

"ஹாஹா.. தண்ணியடிக்கிறதுக்கு நான் என்னைக்கு நோ சொல்லிருக்கேன்.. போலாம்..!!"

அவன் நோ சொல்லமாட்டான் என்று எனக்கு நன்றாக தெரியும். அன்பு ட்ரிங்க்ஸ் சாப்பிடுவது எனது திட்டத்தின் மிக முக்கியமான எலிமன்ட்..!!! பூந்தமல்லிக்குள் என்டர் ஆகும் முன்பே, ஹைவேயில் காட்சியளித்த அந்த பாருக்குள் நுழைந்தோம். நான் ஒரு பீர் மட்டும் வாங்கிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் சிப்பினேன். அன்பு விஸ்கி வாங்கி தொண்டைக்குள் சரித்துக் கொண்டான். நான் குடிப்பது முக்கியமல்ல.. அவன் நன்றாக குடிக்க வேண்டும்..!! இரண்டாவது ரவுண்டு முடிந்தபோது, அவனிடம் இருந்து வார்த்தைகள் குழறலாய் வெளிப்பட்டன.

"பூ...பூந்தமல்லில சைக்யாட்ரி சி..சிம்போஸியம் நடக்குறது.. நீ சொல்லி எனக்கு தெரியுது பாரு.."

"ந்யூஸ் பேப்பர்ல பாத்தேன்.. நீ அட்டன்ட் பண்ண ஆசைப்படுவேன்னு தோனுச்சு.. அதான் சொன்னேன்.."

[/url]
[Image: image004.jpg]
[size][url][/size]
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 16-02-2019, 10:41 AM



Users browsing this thread: 12 Guest(s)