16-02-2019, 10:12 AM
ம்ம் ஊருக்கே பெரியமனுஷன், தன்னோட பதினைந்து வயது மகளுக்கு பயந்து இப்படி ஓடுறதை நினைத்து சிரித்தபடி புடவையைக் கட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்
ஹாலில் அமர்ந்திருந்த மகள்கள் மூவரும் ஓடிவந்து அவள் கையைப்பிடித்து “ அம்மா வாம்மா அண்ணனை எழுப்பலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு மனுவின் அறையை நோக்கி போனார்கள்
மனுவின் அறைக்கதவு திறந்தே இருக்க, நால்வரும் உள்ளே போனார்கள், கட்டிலில் மனு படுத்திருக்க அவனுக்கு இருபுறமும் சுதாங்கனும், சுதர்சனும், படுத்துக்கொண்டு மனுவை அசையவிடாமல் அணைத்துக்கொண்டு தூங்கினார்கள்,
அந்த அறையில் அவர்களுக்கென்று தனித்தனியாக கட்டில் இருந்தாலும் அவர்களுக்கு அண்ணனை அணைத்துக்கொண்டு தூங்கினால் தான் தூக்கம் வரும், மனுவுக்கும் தம்பிகளை அணைத்து தூங்க வைக்கவேண்டும் அதில்தான் அவனுக்கு சந்தோஷம்
சுதாங்கன், சுதர்ஸன், இருவரும் இரட்டையர்கள், வயது பதினொன்று, சத்யனின் கடைசி தயாரிப்பு, இருவருமே சத்யனின் காப்பி, அண்ணன் மட்டுமே அவர்களுக்கு உலகம் என்பது அவர்கள் அணைத்துக்கொண்டு தூங்குவதிலேயே தெரிந்துவிடும்
மான்சி கட்டிலை நெருங்கி, மனுவின் நெற்றியில் முத்தமிட்டு “ இந்தமாதிரியான காலையை இன்னும் பலநூறு வருஷம் நீ அனுபவிக்க நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன் மனு” என்றாள் பூரிப்பில் கலங்கி கண்களுடன்
உடனே கண்ணைத்திறந்துப் பார்த்த மனு “ தாங்க்ஸ்ம்மா” என்றான்
மான்சி அவன்மீது கிடந்த சின்னவர்களை நகர்த்திப் படுக்கவைக்க, மனு எழுந்து அமர்ந்து “ நான் எப்பவோ முழிச்சுட்டேன்ம்மா, நான் எழுந்தா தம்பிகளும் எழுந்துக்குவாங்கன்னு அப்படி படுத்திருந்தேன்” என்று அவன் சொல்லிகொண்டு இருக்கும்போதே அவனுடைய மூன்று தங்கைகளும் அவன் கையைப் பற்றிக்கொண்டு வாழ்த்துச் சொல்ல, புன்னகையுடன் அவர்களுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டான்
அப்போது சத்யனும் அறைக்குள் நுழைய மனு கட்டிலைவிட்டு இறங்கி வந்து அப்பாவை அணைத்துக்கொண்டான், மகனை அணைத்து உச்சியில் முத்தமிட்ட சத்யன் “ இன்னைக்கு மாதிரியே எல்லா பிறந்தநாளிலும் சந்தோஷம் உன்னைவிட்டு போகாம இருக்க வாழ்த்துறேன் மனு” என்றான்
“ தாங்க்ஸ்பா” என்ற மனுவுக்கு இன்று இருபத்தியொராவது பிறந்தநாள், மித்ராவின் பாட்டி மனுவின் பெயரில் எழுதிவைத்த சொத்துக்களை அவனிடம் ஒப்படைக்க வேண்டிய நாள், அதற்காக சென்னையில் இருந்து மேனேஜரும், மித்ராவின் வக்கீலும், பாட்டி நியமித்த டிரஸ்ட் ஆட்களும் இன்று வருகிறார்கள்
அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேனேஜர் செய்துவிட்டிருந்தார்,
சட்டையின் சுருக்கங்களை சரிசெய்த சத்யன் “ மான்சி நீ எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணு, வேலைக்காரங்களை விட்டு வீட்டு சுத்தம் பண்ணச்சொல்லு” என்று மனைவிக்கு உத்தரவிட்டவன்,, மகள்கள் பக்கம் திரும்பி “ அண்ணனுக்கு பொறந்தநாளுன்னு சொல்லி லீவு போட்டுட்டு கொட்டமடிக்காதீங்க, எல்லாரும் குளிச்சுட்டு ஸ்கூலுக்கு கிளம்புங்க” என்று மகள்களுக்கு உத்தரவிட்டவன்,
மனுவிடம் “ சரி மனு, நீ குளிச்சிட்டு ரெடியாவு, நான் ஸ்டேஷன் போய் அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்துர்றேன்” என்று கூறிவிட்டு சத்யன் கதவை நோக்கித் திரும்ப,, “ அப்பாவ்” என்று கடைக்குட்டிகளின் குரல் கேட்க நின்று அவன் திரும்புவதற்குள் இருவரும் ஓடிவந்து அவன்மேல் கட்டி ஏறினார்கள்,
“ டேய் பசங்களா சட்டையை கசக்காதீங்கடா, அப்பா வெளியே போகனும்” என்று சத்யன் சொல்லி முடிப்பதற்க்குள் அவர்கள் இவனை ஒருவழியாக்கி இருந்தார்கள், சிரிப்புடன் மான்சியும் மனுவும் வந்து இரட்டையர்களை சத்யனிடமிருந்து பிய்த்து எடுத்தார்கள்,
சத்யன் தனது கசங்கிய சட்டையை குனிந்து பார்க்க, ரதி வேகமாக வந்து அப்பாவின் சட்டை சுருக்கங்களை சரிசெய்தாள்,, “ சரி விடும்மா, நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்று சத்யன் அவசரமாக வெளியே வந்தான்
காரை செட்டில் இருந்து எடுத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு மான்சிக்காக காத்திருந்தான் சத்யன், மான்சி பிள்ளைகளிடம் இருந்து நழுவி வேகமாக வாசலுக்கு வந்தாள்,, அவளுக்கு தெரியும் இவள் வந்து அனுப்பவில்லை என்றால் கார் அங்கிருந்து ஒரு இஞ்ச் கூட நகராது என்று தெரியும்
காரை நெருங்கியவள் சத்யன் இருக்கையின் ஜன்னல் வழியாக தலையை உள்ளே நீட்டி “ என்னா சத்தி கிளம்பிட்டயா?” என்றாள்,, இது ஒரு சம்பிரதாய வார்த்தைதான் இருவருக்கும், ஆனால் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும், இந்த பதினேழு வருட தாம்பத்தியத்தில் இருவருக்கும் நடுவேயேயான புரிந்துணர்வின் அடையாளங்கள் இதுபோன்ற சம்பிரதாய வார்த்தைகள்
“ ஆமாம் மான்சி நேரமாச்சுல்ல, வீட்டுக்கு ஏதாவது வாங்கனுமா மான்சி” என்று சத்யன் கேட்டான்,, இதுவும் அன்றாட வழக்கம்தான்
“ எதுவும் வேனாம் சத்தி, எல்லாம் இருக்கு” என்றவள் அவன் தலையைப் பார்த்துவிட்டு, “ என்னா சத்தி தலையில எண்ணை தடவல போலருக்கே?” என்றாள் மான்சி
“ ஆமாம், நீதான் உன் புளைய பாக்க வந்துட்டயே,, அப்புறம் நான் எப்படி தேய்ச்சுக்கறது” என்று சத்யன் சொல்ல...
“ ம்ஹூம், நீ இந்த மாதிரியே இன்னும் எத்தனை நாளுக்கு இருக்கப்போற சத்தி, குளிச்சுட்டு வந்தா தலையை நான்தான் துவட்டனும், தலைக்கு நான்தான் எண்ணை தடவனும், இதெல்லாம் மாத்திக்க மாட்டியா சத்தி, இன்னும் ரெண்டு வருஷத்துல, ரதிக்கு கல்யாணம் பண்ணி மருமகன் வந்துருவான் அவன் முன்னாடி நாம இப்புடி கொஞ்சினா நல்லாவா இருக்கும் ” என்று மான்சி உதாரணம் கூறி கூறினாலும் அவள் முகத்திலும் பெருமை பொங்கியது
அவளின் முகச் சிவப்பை ரசித்தபடி “ நான் என்ன பண்றது மான்சி, அஞ்சு புள்ள பெத்த பிறகும் இப்படி எதுவுமே சரியாம கும்முனு இருந்தா இப்படித்தான் நான் இருப்பேன்,, அதுவும் நீ கையைத் தூக்கி என் தலையில எண்ணைத் தடவும்போது கடகடன்னு ஆ.......” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் வாயை பொத்திய மான்சி
“ கொஞ்சம் விட்டா போதுமே ஒனக்கு, போ போ நேரமாச்சு” என்று சொல்ல
“ சரி சரி கிளம்புறேன்” என்று சொன்னவன், அவள் கழுத்தைச் சுற்றிவளைத்து தலையை உள்ளே இழுத்து அவளின் இதழ்களை கவ்வி அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்,
மான்சி தன் உதடுகளை துடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய,, சோபாவில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்த பிள்ளைகளில் தமிழரசி மட்டும் “ என்ன உங்க ரொமான்ஸ் முடிஞ்சுதா? அடக் கடவுளே இவங்க ரெண்டு பேரோட ரவுசு தாங்கலை, மொதல்ல என்னை ஏதாவது குழந்தைகள் காப்பகத்துல சேர்த்துடு அண்ணா” என்று மான்சியை நக்கல் செய்ய
அவள் தலையில் தட்டிய சுதாங்கன் “ உன்னையெல்லாம் குழந்தைகள் காப்பகத்துல சேர்க்கமாட்டாங்க தமிழு,, ஒன்லி முதுமலை யானைகள் சரணாலயத்தில்தான் சேர்த்துப்பாங்க” என்று கூறி அவளின் குண்டான உடலை கிண்டல் செய்ய
“ அம்மா பாரும்மா இந்த குட்டிப்பிசாசை ” என்று கண்ணை கசக்கியபடி சமையலறையில் இருந்த மான்சியிடம் புகார் வாசித்தாள் தமிழரசி
அவர்களை சமாதானம் செய்து ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்புவதற்குள் மான்சி ஒரு சுற்று இளைத்தே விட்டாள், இதுவும் அன்றாடம் நடப்பதுதான் , ஆனால் இந்த விஷயத்தில் அவளுக்கு பெரிதும் உதவுவது மனுவும் ரதியும் தான்,,