16-02-2019, 10:07 AM
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 9
மான்சி அவளுக்கு சோற்றை குழைத்து ஊட்டிவிட கால்வாசி சாப்பிட்டுவிட்டு வாந்தியெடுத்தாள், சத்யனும் மான்சியும் அவள் எடுத்த வாந்தியை சுத்தம் செய்தார்கள்,,
அன்று இரவு “ சத்யா என்னை கொஞ்சநேரம் கட்டிப்பிடிச்சுக்கயேன் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள், உடனே மான்சி அவளை தூக்கி அமர்த்தி சத்யனின் நெஞ்சில் சாய்க்க சத்யன் கண்ணீருடன் மித்ராவை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்
அவன் நெஞ்சை வருடிய மித்ரா “ சத்யா கல்யாணம் ஆன புதுசுல என்னைய ஒருநாள் மித்திம்மா ன்னு கூப்பிட்டுட்டு, அப்படி கூப்பிடாதேனனு நான் திட்டினதும் இனிமேல் கூப்பிடமாட்டேன்னு சொன்னியே உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டாள்
சத்யன் தொண்டை அடைக்க “ ம்ம் ஞாபகம் இருக்கு மித்ரா” என்றான்
“ இப்போ ஒரேயொரு வாட்டி அந்த மாதிரி கூப்பிடு சத்யா ப்ளீஸ்” என்று மித்ரா கெஞ்ச
சத்யன் துக்கம் தாளாமல் அழுதுவிட்டான், அவனின் முதுகுப்பக்கமாக கட்டிக்கொண்டு மான்சியும் அழ, “ மித்திம்மா,, மித்திம்மா” என்று சத்யன் கண்ணீருடன் அழைத்தான்
ஒன்பதாவது நாள் சம்மந்தமில்லாமல் எதைஎதையோ பேசினாள், எதையாவது சொல்லிவிட்டு அதற்கு சம்மந்தமேயில்லாமல் சிரித்தாள், நோய் அவள் மூளையையும் தாக்க ஆரம்பித்துவிட்டது என்று சத்யனும் மான்சியும் புரிந்துகொண்டார்கள்,
அன்று இரவு முழுவதும் மித்ராவுக்கு அடுத்தடுத்து வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட, பத்தாம் அதிகாலையில் மித்ராவின் பேச்சு சுத்தமாக நின்று கண்கள் நிலைகுத்தியது, சத்யன் அவள் தாடையைத் தட்டித்தட்டி “ மித்ரா மித்ரா, மித்திம்மா கண்ணைத்திறந்து பாரும்மா” என்று கத்தி கதற, மித்ராவிடம் எந்த அசைவும் இல்லை
அவள் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் மட்டுமே உயிர் துடித்தது, “ பால் ஊத்தலாம் ஐயா, அவ்வளவுதான்யா” என்று திலகம் கண்ணீருடன் சொல்ல
மான்சி எடுத்துவந்த பாலை சங்கில் ஊற்றி சத்யன் முதலில் ஊற்றினான், மெதுவாக இறங்கியது, மான்சி இரண்டாவதாக ஊற்ற அதுவும் இறங்கியது, மான்சி மனுவைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அவன் கையால் மித்ராவின் வாயில் பாலை ஊற்ற, கடகடவென இறங்கியது அடுத்ததாக யாரோ உறவினர் வந்து பாலை ஊற்ற உள்ளே இறங்காமல் மித்ராவின் வாயோரம் வழிந்தது பால், தொண்டையில் துடித்த உயிர் காற்று “ ஹக்” என்று ஒலியுடன் வெளியேறியது, மறுபடியும் சுவாசத்திற்காக மித்ராவின் நெஞ்சு ஏறி இறங்கவில்லை, அப்படியே நின்றுபோனது,
வாழும்போது பாவத்தை சேகரித்த அவளது ஆத்மா,, இறக்கும் போது சத்யன் மான்சி வழங்கிய மன்னிப்பால் புண்ணி ஆத்மாவானது
சத்யனும் மான்சியும் கதறியழ, அவர்கள் அழுவதைப்பார்த்து அனைவரும் அழுதனர்
முதல் நாளே மான்சி சத்யனின் போன் மூலமாக புவனாவுக்கு தகவல் சொல்லியிருந்ததால், கடையநல்லூரில் இருந்து அனைவரும் இரவே புறப்பட்டு வந்தனர்
வாழும்போது ஒரு அனாதையைப் போல் வாழ்ந்த மித்ரா, இறந்தவுடன் புருஷன், மகன், சகோதிரி, அம்மா, பாட்டி என்று அனைத்து உறவுகளின் கண்ணீரோடு எரியூட்டப்பட்டாள்