Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
புல்வாமா தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
[Image: cfnjpg]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது தற்கொலைப்படை வீரர் நடத்திய தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இக்கோரச் சம்பவத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், இந்திய ராணுவத்தினர் சென்ற பேருந்துமீது 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன அவை பின்வருமாறு
சீன வெளியுறவுத் துறை அமைச்சகம்: தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், அமைதி ஏற்படவும்  பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.
ரஷ்ய அதிபர் புதின்: இது கொடுமையான குற்றம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
சவுதி அரேபியா : இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு உறுதுணை இருப்போம்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 16-02-2019, 09:16 AM



Users browsing this thread: 83 Guest(s)