15-02-2019, 11:29 AM
அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த மித்ரா “ வேண்டாம் சத்யா, இந்த கேடுகெட்டவளுக்காக உன் கண்ணீரை வீணாக்காதே, நான் அதுக்கு தகுதியில்லாதவள்,, உன் கையால் எனக்கு கடைசி காரியத்தை முடிச்சுட்டு போய்டு சத்யா, மனுவோட கையால எனக்கு கொல்லி வைக்கனும் சத்யா இதுதான் என்னோட கடைசி ஆசை” என்று மித்ரா ஈனஸ்வரத்தில் பேச
படுத்திருந்த மான்சியால் இந்த உணர்ச்சிப் போராட்டத்தை தாங்கமுடியவில்லை, வாய்விட்டு அழுதபடி எழுந்தவள் சத்யனின் அருகில் வந்து அவன் தோளில் கைவைக்க,
மான்சியை திரும்பிப் பார்த்த சத்யன் “ மான்சி என்னால முடியலை மான்சி” என்று கதற,
மான்சி அவன் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டாள், “ என்னாலையும் தாங்க முடியலை சத்தி, மித்ராவை அந்த கடவுள் காப்பாத்திட்டா நம்மக்கூடயே ஊருக்கு கூட்டிட்டுப் போயிடனும் போலருக்கு சத்தி” என்று கூறிவிட்டு மான்சியும் அழுதாள்
ஆனால் நிச்சயிக்கப்பட்ட மரணத்தின் முன்னால் மூவரின் ஏக்கங்களும் எடுபடாது என்பது மூவருக்கும் புரியவில்லை, தன் கணவனுடன் ஒரு நாளாவது சந்தோஷமாக வாழவேண்டும் என்ற மித்ராவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது, நோயின் பிடியிலிருந்து மித்ராவை விடுவித்து தன்னுடன் ஊருக்கே அழைத்துச்செல்ல வேண்டும் என்ற மான்சியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது, தன்னை கணவனாக நினைத்து காதலிக்கும் மித்ராவை அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சத்யனின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது,
மறுநாள் காலையில் மித்ரா புதுப் பொழிவுடன் இருந்தாள், மித்ராவை சத்யன் தூக்கிச்சென்று ககுளியலறையில் விட மான்சி அவளை குளிக்கவைத்து, அவள் முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் குங்குமம் வைத்து, அவளுக்கு புதுப் புடவை கட்டி, தலைவாரி பின்னலிட்டு, பின்னலில் பூவைத்து, கட்டிலில் கொண்டு வந்து படுக்கவைத்தார்கள்
சத்யன் கையில் இருந்த கிண்ணத்தில் இருந்து கஞ்சியை ஸ்பூனில் அள்ளி மித்ராவுக்கு ஊட்டிவிட, மித்ரா புதியவள் போல் சிறு வெட்கத்துடன் வாயைத்திறந்து வாங்கிக்கொண்டாள், அவளைப் பார்த்து மான்சிக்கு சந்தோஷமாக இருந்தது,
மித்ரா சாப்பிட்டு முடித்ததும் சத்யன் அவள் வாயை துடைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க வைத்தான், மித்ராவை மருத்துவமனையில் சேர்த்து அவள் உடலை இன்னும் சீரழிக்காமல் அவளுக்கு நல்லதொரு மரணத்தை கொடுக்க சத்யனும் மான்சியும் முடிவுசெய்து விட்டார்கள்,
மித்ராவை சிரிக்கவைக்கும் நோக்குடன் சத்யன் நிறைய கதை பேசினான், மான்சி அவனுடன் சேர்ந்து சிரித்து மித்ராவின் முகத்தில் புத்துணர்ச்சியை வரவழைத்தார்கள்,
மான்சியை அருகில் அழைத்து அவள் அடிவயிற்றில் கைவைத்து “ இந்த நிலைமையோட எனக்கு இவ்வளவு செய்றியே மான்சி, நீ ரொம்ப நாளைக்கு சத்யனோட நல்லாருக்கனும், மறு ஜென்மத்தில் இதே வயிற்றில் மகளாக வந்து நான் பிறக்கனும் மான்சி ” என்று கூறி மித்ரா மனதார வாழ்த்தினாள்
மான்சி அலமாரியில் தேடி,, தேடியப் பொருள் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு வந்து சத்யனிடம் கொடுத்து “ இதை மித்ராவோட கழுத்துல பொடு சத்தி” என்றாள்,,
ஆமாம் மான்சி கொடுத்தது மித்ராவின் தாலிச் சங்கிலி, இத்தனை வருடங்களாக கேட்பாரற்று கிடந்ததை எடுத்து வந்து மித்ராவின் கழுத்தில் மான்சி போடச்சொல்ல, சத்யன் கலங்கிய கண்களும் நடுங்கும் நெஞ்சமுமாக அந்த தாலிச் செயினை மித்ராவின் கழுத்தில் போட்டான்,
தன் கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்துப் பார்த்த மித்ரா “ சத்யா எனக்கு எவ்வளவோ கஷ்டம் வந்து எல்லாத்தையும் வித்தேன், ஆனா இதை மட்டும் விக்கனும்னு எனக்கு தோனவேயில்லை சத்யா, அப்படின்னா இப்போ நான் நல்லவ தானே சத்யா” என்று கண்கலங்க கேட்டாள்
“ ஆமாம் மித்ரா நீ நல்லவதான், நான் இப்போ உன்னைத் தவறா நெனைக்கலை மித்ரா” என்று சத்யன் சொன்னான்
சத்யன் மான்சி இருவரிடமும் இயல்பாக இருந்த மித்ரா, மனுவை தூக்கிவந்தால் மட்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள், மான்சி அவளிடம் அதைப்பற்றி கேட்டேவிட்டாள்
“ இல்ல மான்சி மனுவோட மனசுல நான் எந்தவிதத்திலும் பதியக்கூடாது, கடைசிவரை நீதான் அவனுக்கு அம்மா,, என் சுவடே அவனுக்குள் பதியவேண்டாம், அதோட அவனைப் பார்த்து என் மனம் ஏங்க ஆரம்பிச்சுட்டா அப்புறம் எனக்கு மரணபயம் வந்துடும், மரணத்தை எதித்து போராடனும்னு நெனைப்பு வந்துரும், அதனால அவனை என்னைவிட்டு விலக்கியே வச்சுரு மான்சி” என்று மித்ரா இறைஞ்சுதலாக
அதன்பின் மனுவை அவளிடம் யாரும் அழைத்துச்செல்வதில்லை,,
மான்சியும் சத்யனும் அந்த வீட்டுக்கு வந்து ஏழு நாட்கள் முழுதாக முடிந்தது, அந்த ஏழுநாட்களும் மித்ரா இரவு பகல் பாராது நிறைய பேசினாள், சத்யனும் மான்சியும் அவளருகில் உட்கார்ந்து சலிப்பின்றி அவள் பேசுவதை கேட்டார்கள்,
எட்டாவது நாள் மித்ராவின் பேச்சு சற்று குறைந்தது, சத்யனிடம் “ எனக்கு கொஞ்சம் டிரிங்ஸ் வேனும் சத்யா” என்று கேட்டாள்,
சத்யன் மான்சியைப் பார்த்தான்,, “ ம் கொஞ்சம் ஊத்தி குடு சத்தி” என்றாள் மான்சி, அவளுக்கு தெரியும் மித்ராவின் நாட்கள் மணித்துளிகளாகி விட்டது என்று,
சத்யன் அலமாரியை திறந்து அங்கிருந்த வேட்காவை எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் சோடாவை கலந்து எடுத்து வந்து மித்ராவிடம் கொடுத்தான்,
“ தாங்க்ஸ் சத்யா என்று ஆர்வத்துடன் வாங்கி சீப்பினாள், இரண்டு மிடறுக்கு மேல் குடிக்க முடியவில்லை, நெஞ்சை அடைத்தது “ ம்ஹூம் வேனாம் சத்யா, கீழ ஊத்திடு என்று க்ளாசை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள் மித்ரா