15-02-2019, 11:28 AM
சத்யனுக்கு அவள்மீது இருந்த வெறுப்பு இப்போது இல்லை, தொழிளாலர்களின் நலனை நினைத்து அவள் செய்திருந்த ஏற்பாடுகளை நினைத்து அவனுக்கு நிம்மதியாக இருந்தது , கடன்காரியாக சாகக்கூடாது என்ற அவளின் நிலைப்பாட்டை மெச்சியது அவன் உள்ளம்
அவளுக்கு அருகில் இருந்த சத்யனின் கையை வருவது போல் இருக்க, சத்யன் குனிந்து பார்த்தான், மித்ரா தனது மெலிந்த விரல்களால் அவன் விரலை வருடி “ சாகும் முன் இதையெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு நெனச்சேன் சத்யா , நீ வரலைன்னாலுன் கடிதமா எழுதி உன் வீட்டுக்கு அனுப்ப முடிவு பண்ணிருந்தேன், உன்கிட்ட மன்னிப்பை வேண்டும் அருகதை எனக்கு இல்லை, ஆனா என்னை மன்னிக்கும் நல்ல மனசு உன்கிட்ட இருக்கு சத்யா, அதனால் உன்கிட்ட என்னோட இறுதி மன்னிப்பை வேண்டுகிறேன் சத்யா” என்று அவனை நோக்கி கண்ணீருடன் கைக்கூப்பினாள் மித்ரா
சத்யனின் உள்ளம் நொந்து கண்களில் நீராய் தேங்கியது, கூப்பிய மித்ராவின் கைகளைப் பற்றி தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டான் “ என்னோட மனசுல இப்போ எதுவும் இல்லை மித்ரா, நீ இப்படி ஆயிட்டயேன்னு தான் ரொம்ப வருத்தமா இருக்கு, உன்னை அடிச்சாவது திருத்தி உன்கூட வாழாமல், உன்னைவிட்டு போனதை நெனைச்சு குற்றவுணர்ச்சியா இருக்கு மித்ரா” என்று கூறிவிட்டு சத்யனும் குமுறி தவிக்க
தரையில் படுத்து கண்மூடி இவர்களின் உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்த மான்சியின் கண்ணீரில் தரையில் விரித்திருந்த போர்வை நனைந்தது, மித்ராவின் பேச்சும் சத்யனின் ஆறுதலும் அவளை கண்ணீர் விடவைத்தது, அவர்களின் உரையாடலுக்கு நடவே போய் ஆறுதலளிக்க அவள் மனம் நாகரீகம் கருதி தடுத்தது,
“ சத்யா உன்னோட மனைவி மான்சி ஒரு பெண் தெய்வம், என்னைக்குமே அவளை துண்புறுத்தும் விதமா ஒரு வார்த்தை கூட பேசாதே, என் மகனுக்கு அவள்தான் நல்ல தாய், இது கடவுள் ஏற்படுத்திய பந்தம், உனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப புடிக்கும்ல, நீயும் மான்சியும் இன்னும் நிறைய குழந்தைங்க பெத்துக்கங்க இதுவும்கூட என் ஆசைதான் சத்யா,, இது என்னைக்கும் உனக்கு நிலைக்கனும் சத்யா”, இதுதான் கடவுளிடம் நான் இறுதியாக வைக்கும் கோரிக்கை” என்ற மித்ரா சோர்வுடன் கண்களை மூடி சரிந்து படுத்துக்கொண்டாள்
சத்யன் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான், முன்பு அழகியாக இருந்தபோது அவள் முகத்தில் இருந்த திமிறும் கர்வமும், நோயுற்று நலிந்து கிடக்கும் இப்போது இல்லை என்றாலும், அவள் மனதறிந்து திருந்தி மன்னிப்பு கேட்டப்பிறகு அவள் முகத்தில் ஒரு தேஜஸ் வந்தது போல் சத்யனுக்கு தோன்றியது,
மெதுவாக அவள் கையைப் பற்றி “ நாளைக்கு ஆஸ்பிட்டல் போகலாமா மித்ரா” என்று அன்பாக கேட்டான்
கண்களை மூடியபடி “ இல்ல சத்யா முடிவு இதுதான்னு தெரிஞ்ச பிறகு அதுக்காக நான் காத்துகிட்டு இருக்கேன், என்னோட நிலைமை இதுதான் தெரிஞ்சதும் தற்கொலை செய்துகிட்டு செத்துடனும்னு தான் நெனைச்சேன், ஆனா சபாபதியோட மகளா இல்லாம, சத்யனோட பொண்டாட்டி ஒரு கடன்காரியா சாகக்கூடாதுன்னு தான் எல்லாத்தையும் அடச்சேன் சத்யா” என்று மித்ரா குரல் கமற கூறினாள், இதைச்சொல்லும் போது உணர்ச்சிவசத்தில் அவள் நெஞ்சு வேகமாக ஏறி இறங்கியது
அவளின் வார்த்தைகளை கேட்டதும் சத்யனுக்கு நெஞ்சுக்குள் கோவென்று இரைச்சல் கேட்டது, ‘’சத்யனின் பொண்டாட்டி,, இந்த ஒரு வார்த்தைக்காக சத்யன் எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பான், “சத்யனின் பொண்டாட்டி” எந்த ஒரு வார்த்தையை கேட்க மித்ராவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நாளெல்லாம் தவமிருந்தானோ, அந்த வார்த்தையை மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு மித்ரா கூறுகிறாள்
தன் கைக்குள் இருந்த மித்ராவின் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “ மித்ரா” என்று தொண்டை அடைக்க சத்யன் அழைக்க
மித்ரா கண்ணீர் வழியும் கண்களை திறக்கவேயில்லை, அவன் பக்கம் திரும்பவும் இல்லை “ ஆமாம் சத்யா, எனக்கு இந்த நோய் வந்த பிறகு உன்மேல லவ்வும் வந்திருச்சு சத்யா, உன்முகத்தைப் பார்க்காம செத்துடுவேனோன்னு ரொம்ப ஏங்கினேன் சத்யா, இப்போ மனசுக்கு நிம்மதியா இருக்கு, மரணத்தின் வாசலில் யாருக்கும் மன்னிப்பு உண்டுன்னு நெனைக்கிறேன், முடிஞ்சா என்னை மன்னிச்சுடு சத்யா, ஆனா இப்பத்தான் உன்கூட வாழ ஆசையாயிருக்கு, இந்த கொஞ்ச நாளா உன்னை ரொம்ப லவ் பண்றேன் சத்யா, அதுவும் நீயும் மான்சியும் வாழும் வாழ்க்கையை பார்த்து உன்னை ரொம்பவே லவ் பண்ணேன் சத்யா,,நீ நம்பலைன்னாலும் உண்மை இதுதான் சத்யா ” என்று மேல செல்ல முடியாமல் மித்ரா மூச்சு வாங்க முடிக்கவும்
சத்யனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை “ மித்ரா” என்று சிறு கதறலுடன் அவள் தலையை தூக்கி தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டான்,அவன் கண்ணீர் அவள் தலையில் வழிந்தது