15-02-2019, 11:26 AM
“ ஆமாம் சத்யன், நான் எடுத்த எல்லா டெஸ்ட்களும் அதைத்தான் சொல்லுது,, ஆனா எய்ட்ஸ் நோயோடு இருபது வருஷம் உயிரோடு வாழுறவங்களை எல்லாம் நான் பார்த்திருக்கேன்,, மித்ராவுக்கு இந்த நோய் அட்டாக் ஆகி ஒன்றரை வருஷம்தான் ஆகுது, இவங்க முறையா ட்ரீட்மெண்ட் பண்ணியிருந்தா நோயைக் ஒரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து ஆயுளை நீட்டித்திருக்கலாம், ஆனா இவங்களோட மற்ற கெட்ட பழக்கவழக்கங்கள் ஏற்கனேவே உடலுறுப்புகளை சேதப்படுத்தி இருந்ததால நோயின் தீவிரம் வெகு சீக்கிரத்தில் பரவிவிட்டது, இன்னும் சிலநாட்களே எனும் பட்சத்தில் இவங்களை ஆஸ்பிட்டல்ல சேர்பதைப் பத்தி நீங்கதான் முடிவு பண்ணனும், நான் லட்டர் எழுதி குடுத்துட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு தனது கைப்பொட்டியில் இருந்து ஒரு லட்டர் பேடை எடுத்து அதில் சிலவரிகளை எழுதி அதை மடித்து மான்சியிடம் நீட்டினார்
மான்சி அந்த பேப்பரை நடுங்கும் விரலில் வாங்கினாள், டாக்டர் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினார்
சத்யனும் மான்சியும் திக்பிரமை பிடித்து அப்படியே நிற்க்க, மித்ராவின் தீனமான கேவல் ஒலி அவர்களை உலுக்கியது, இருவரும் வேகமாக மித்ராவை நெருங்க,, சத்யன் அவள் தோளில் கைவைத்து “ மித்ரா” என்று கண்ணீருடன் அழைக்க
மித்ரா கண்ணீர் வழியும் கண்களை திறக்காமலேயே “ என்னைத் தொடாதே சத்யா,, நீ இங்கேருந்து போய்டு, உன் பொண்டாட்டி பிள்ளையை கூட்டிக்கிட்டு போய்டு சத்யா, நான் இப்படியே இருந்தா இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு முடிவு வந்துரும் , அப்புறம் ஏதாவது வண்டி வந்து என்னை எடுத்துட்டுப் போயிடுவாங்க,, என்னை அந்த ஆஸ்பத்திரியில் மட்டும் கொண்டு போய் சேர்த்துடாத சத்யா,, இது எனக்கு தேவையான ஒன்னுதான்,, நீ இங்கருந்து போயிடு சத்யா,” என்று தேய்ந்து போன குரலில் தீனமாக கூறினாள்
அவளின் வார்த்தைகள் சத்யனின் நெஞ்சை பிசைய கவலையுடன் மான்சியை நிமிர்ந்து பார்த்தான்,,
முகத்தில் ஒரு ஜொலிப்புடன் மித்ராவின் அருகே பட்டென்று குனிந்த மான்சி “ இதோபார் மித்ரா நான் போகமாட்டேன், உன்னை இப்படியே விட்டுப்போட்டு நாங்க போகமாட்டோம்,, உனக்கென்னடி குறை, கல்லு மாதிரி உன் புருஷன், அழகான மகன் மனு, உனக்கு வேலைக்காரியா இருந்து பணிவிடை செய்ய நான்னு, இத்தனைப் பேர் இருக்கும்போது நீ ஏன்டி அனாதையா சாகனும், உன்னை அந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பமாட்டேன், உன்னோட உயிர் இருக்குற வரைக்கும் நீ ராசாத்தி மாதிரி வாழ்ந்துட்டு தான் சாகனும் மித்ரா, அதுக்கு நானாச்சு” என்றாள் தீர்கமாய்
அவளின் அன்பையும் கரிசனத்தையும் தாங்கமுடியாதவள் போல மித்ரா கண்ணீருடன் தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்து “ வேனாம் மான்சி வேனாம்,, உனக்கு இந்த வேலை வேனாம், நீ உன் புருஷனை கூட்டிக்கிட்டு போயிடு, இந்த நாத்தம் புடிச்ச உடம்பை தொடாத, நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியும் மான்சி, உன்னைப்பத்தின எல்லா விஷயமும் எனக்குத் தெரியும், நீ ஒரு வாழும் தெய்வம், சத்யன் கர்ப்பக்கிரகம்னா அதுல வாழும் தகுதி உள்ள தெய்வம் நீதான் மான்சி,, நீ போய்டு, எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் வேண்டாம், இப்படியொருத்தி இருந்ததையே மறந்துடுங்க” என்று கூறிய மித்ரா சோபாவில் கையூன்றி எழுந்து அமர முயன்றாள்
உடனே அவள் தோளைத் தாங்கி தூக்கி அமர்த்திய மான்சி, “ சத்தி மித்ராவ கட்டிலுக்கு மாத்திடு சத்தி” என்று கூற
குமுறிக்கொண்டிருந்த சத்யன் மான்சியின் சொல்படி மித்ராவை கையில் ஏந்தி போய் கட்டிலில் கிடத்தினான்
மித்ராவை கட்டிலில் படுக்க வைத்து போர்வையில் அவளை மூடிவிட்டு சத்யன் சோபாவில் போய் அமர்ந்தான், அவனருகே வந்து அமர்ந்த மான்சி ” நீ வேனா போய் படு சத்தி, நான் மித்ராவை பார்த்துக்கிறேன்” என்று கூற
“ இல்ல மான்சி மனுவை திலகம் பார்த்துக்குவாங்க, நானும் இங்கேயே இருக்கேன், நீ தரையில ஏதாவது விரிச்சுப் படுத்துக்க, நான் இந்த சோபாவிலயே படுத்துக்கிறேன், பொழுதுவிடியட்டும் என்ன செய்றதுன்னு முடிவு பண்ணலாம் ” என்று சத்யன் சொல்ல,
சரியென்று தலையசைத்த மான்சி தரையில் ஒரு போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டாள், சிறிதுநேரம் உட்கார்ந்திருந்துவிட்டு மான்சி உறங்குவது போல் தெரிந்ததும் இவனும் சோபாவில் கால்நீட்டி படுத்துக்கொன்டான்
ஆனால் அவன் கண்களை உறக்கம் தழுவ மறுத்தது, மித்ராவை சந்தித்த நாள்முதல் நடந்தவை அனைத்தும் நிழல்ப் படமாய் நெஞ்சில் ஓடியது, இன்று மித்ராவை இந்த நிலையில் பார்த்ததும் சத்யனால் பொறுக்கமுடியவில்லை, எவ்வளவு தவறுகள் செய்தவளாயினும் அவளுடன் நாலு வாழ்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றவன் என்பதாலோ என்னவோ அவளின் நிலை கண்டு உள்ளம் குமுறியது, நான் மட்டும் அவளை பிரியாமல் இங்கேயே இருந்து அவளை அடித்து கண்டித்துத் திருத்தியிருந்தால் அவளுக்கு இந்த கதி நேர்திருக்காதே,, என்ற குற்றவுணர்ச்சி அவனைக்கொன்றது, கழிவிரக்கத்தில் கண்ணீர் வழிந்தது,