மான்சி கதைகள் by sathiyan
#59
மான்சி கையில் வெண்ணீர் பாத்திரத்துடன் வந்தவள் சத்யனின் நிலையைப் பார்த்து பாத்திரத்தை தரையில் வைத்துவிட்டு அவனருகே வந்து “ சத்தி நீ வேனா போ சத்தி, நான் தொடச்சி சுத்தம் பண்ணி வேற துணி மாத்தி வைக்கிறேன், நீ போய் மறுபடியும் டாக்டருக்கு போன் பண்ணு சத்தி” என்று ஆறுதலாக கூறினாள்

“ இல்ல மான்சி நீ இருக்குற நிலையில் உன்னால தனியா எதுவும் பண்ணமுடியாது நானும் கூட இருந்து எல்லாத்தையும் பண்றேன், நீ கதவை சாத்திட்டு வா” என்றான்

அவன் சொல்படி மான்சி கதவை மூடிவிட்டு வர, இருவருமாய் சேர்ந்து மித்ராவின் உடையை களைந்துவிட்டு கட்டிலில் ஒரு விரிப்பைப் போட்டு அவளை கட்டிலில் கிடத்தினார்கள், டெட்டாயில் கலந்த மிதமான வென்னீரில் டவலை நனைத்து சத்யன் கொடுக்க மான்சி மித்ராவுக்கு வலிக்காமல் இதமாக துடைத்தாள்
துடைத்து முடித்து பிறகு சத்யன் கொடுத்த பவுடரை மித்ராவின் உடலில் கொட்டி பூசினாள், பிறகு சத்யன் எடுத்துவந்து கொடுத்த புது நைட்டியை இருவருமாய் மித்ராவுக்கு உடுத்தினர், சத்யன் மித்ராவை தூக்கி கட்டிலில் இருந்து இறக்கி சோபாவில் படுக்கவைத்தான், மான்சி உடனே கட்டிலில் இருந்த விரிப்புகளை எடுத்து பாத்ரூமில் கொண்டு போய் போட்டுவிட்டு வேறு புது விரிப்பை விரித்தாள், தலையணை உறைகளை மாற்றினாள், பின்னர் சத்யனிடம் வந்தாள்

“ தூக்கிட்டுப் போய் கட்டில்லயே படுக்க வைக்கலாமா சத்தி?” என்று கேட்க

“ இல்லம்மா டாக்டர் வர்ற வரைக்கும் இப்படியே இருக்கட்டும், அப்புறமா கட்டில்ல படுக்க வைக்கலாம்” என்றான் சத்யன்


சத்யன் எதிர் சோபாவில் அமர்ந்து தலையை கைகளில் தாங்கி தலை கவிழ்ந்தான், மான்சி மித்ரா படுத்திருந்த சோபாவில் ஓரமாக அமர்ந்தாள்

மித்ராவுக்கு முழு நினைவும் எப்பவோ திரும்பிவிட்டது, ஆனால் கண்களை விழிக்காமல் கிடந்தாள், அடிக்கடி விழியோரம் நீர் மட்டும் கசிந்தது, அவள் உள்ளுக்குள் விம்முகிறாள் என்பதன் அடையாளமாக தொண்டைக்குழி ஏறி இறங்கியது

மான்சிக்கு சத்யனைப் பார்க்க கவலையாக இருந்தது, அவன் முகம் இறுகிப்போய் இருந்தது, மான்சியால் அவன் மனநிலையை புரிந்துகொள்ள முடிந்தது, மெதுவாக எழுந்து அவனருகில் வந்து அமர்ந்து அவன் தோளில் கைவைத்தாள்

தலைகுனிந்திருந்த சத்யன் படக்கென்று நிமிர்ந்து மான்சியைப் பார்த்தான், அவன் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது, அவன் எதிர்பாராத தருணத்தில் கன்னத்தில் உருண்டு வழிந்தது சத்யனின் கண்ணீர்,

மான்சி பதட்டமாக அவன் கண்ணீரைத் துடைத்து “ என்ன சத்தி சின்னப் புள்ளையாட்டம் கண்ணுல தண்ணி வச்சுகிட்டு,, ம்ஹூம் நீயே இப்படி இருந்தா எப்படி ஆவுறது, அவங்ககிட்ட நாலு வார்த்தை ஆறுதலா பேசு சத்தி” என்றாள்

வேகமாக தலையசைத்து மறுத்த சத்யன் “ இல்ல மான்சி இவளை என்னால இந்த நிலையில பாக்கமுடியலை, எப்படி கர்வத்தோட தலைநிமிர்ந்து வாழ்ந்தவ தெரியுமா, இப்போ அழகு, அந்தஸ்து, பணம், சொந்தம், பந்தம்னு, எல்லாம் போய் இப்படி அனாதை மாதிரி கிடக்குறாளே, எல்லாம் இவளோட தவறான நடத்தையால தானே?,, அதனாலதானே நானும் மனுவும் இவளை விட்டுட்டு போனோம், இப்போ யாருமே உதவமுடியாத இந்த நிலையில கெடக்குறாளே இவளுக்கு தேவையா இதெல்லாம்?, அப்படி என்னதான் இவளுக்கு ஆச்சுன்னு தெரியலையே?, இப்படி உடம்பெல்லாம் சீரழிஞ்சு போகிற அளவுக்கு அப்படி என்னதான் வியாதின்னு தெரியலையே,, இவளைவிட்டு பிரிஞ்சு போன அன்னிக்குத்தான் என் மனசார இவளை முழுசா வெறுத்துட்டு போனேன் மான்சி,, அதுக்கு முன்னாடி இவளை எப்படியும் திருத்தி சேர்ந்து வாழனும்னு தான் ஆசைப்பட்டேன் ” என்று தொண்டை அடைக்க கூறிவிட்டு சத்யன் குமுற

அவன் தோளில் ஆறுதலாக கைவைத்த மான்சி “ நீ சொன்ன எல்லாமே இவங்களை விட்டு போகலை சத்தி,, சொந்தமா நாமெல்லாம் இருக்கோம், பந்தமா மனு இருக்கான்,, சத்தி தயவுசெஞ்சு பழசை பேசி நேரத்தை வீணாக்காத, இனி ஆகவேண்டியதை பார்க்கலாம்” என்றவள் “ என்னா சத்தி இன்னும் டாக்டரை காணோம்,, பேசாம நம்ம மேனேஜர் அய்யாவுக்கு போன் போட்டு ஒரு கார் எடுத்துட்டு வரச்சொல்லு, நாமலே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்” என்று கூற..

அப்போது கதவை திறந்துகொண்டு திலகமும் அவள் பின்னால் மித்ராவின் குடும்ப டாக்டரும் வந்தனர், டாக்டரின் முகத்தில் ஒரு எரிச்சல் ஒரு அலட்சியம் இருந்தது,

சத்யனைப் பார்த்த டாக்டர் “ என்ன சத்யன் நீங்க எப்போ வந்தீங்க,, என்று ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டுவிட்டு மித்ராவின் அருகே வந்து அவளை தலை முதல் கால்வரை பார்த்துவிட்டு “ நான்தான் அப்பவே சொல்லிட்டேனே, இவங்களை கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகச்சொல்லி,, மேலும் மேலும் குடி, சிகரெட், போதைன்னு இருந்தா எந்த மருந்து கொடுத்தாலும் ஒரு பர்ஸன்ட் கூட இவங்க உடல்நிலையில் முன்னேற்றம் வராது சத்யன், தாம்பரம் சாண்டோரியத்தில் இருக்கும் மருத்தவமனைக்கு ஒரு லட்டர் எழுதி தர்றேன், அதை அங்கே குடுத்து இவங்க அட்மிட் பண்ணிடுங்க இவங்க இருக்கும் வரை அங்கே பாத்துக்குவாங்க” என்று கூறிவிட்டு மித்ராவை தொட்டுக்கூட பார்க்காமல் டாக்டர் அங்கிருந்து நகர்ந்து நிற்க்க..

சத்யன் குழப்பத்துடன் “ ஏன் சார் பிரைவேட் ஆஸ்பிட்டல்ல வச்சு ட்ரீட்மெண்ட் பண்ணக்கூடாதா,, எவ்வளவு பண்ம் வேணும்னாலும் நான் செலவு பண்றேன் சார்” என்று டாக்டரிடம் கூறினான்


அவனை பரிதாபத்துடன் ஏறிட்டுப் பார்த்த டாக்டர் “ எவ்வளவு பணம் செலவு பண்ணாலும் பிரயோஜனம் இல்லை சத்யன், இவங்களை கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்ல சேர்கறது தான் நல்லது” என்று சொல்ல

அவரை புரியாமல் பார்த்த சத்யன் “ அப்படியென்ன வியாதி சார் இவளுக்கு வந்திருக்கு?” என்று கேட்டான்

அவனை ஆச்சர்யமாக பார்த்த டாக்டர் “ என்ன சத்யன் இன்னும் உங்களுக்கு தெரியலையா? இவங்களுக்கு ஹெச் ஐ வி வந்திருக்கு” என்று கூற

“ என்னது” என்று அதிர்ந்து போய் கேட்டான் சத்யன், மான்சியும் கண்ணீருடன் ஓடிவந்து சத்யன் கைகளை பற்றிக்கொண்டாள்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)