Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
தொழில்நுட்பகலைஞர்கள்: ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மிரட்டல் பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களின் சாயல் தெரிந்தாலும், பாடல்களை பழைய மாதிரி ரசிக்க முடியவில்லை. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கு பெரிய ப்ளஸ். 

பலம்: வேல் ராஜின் ஒளிப்பதிவும், கார்த்தி - ரகுலின் காதல் நடிப்பும் படத்திற்கு பெரும் பலம். 

பலவீனம்: ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், நீண்டு கொண்டே போகும் திரைக்கதையும். 

ஹேட்ஸ் அப்: கார்த்தி - ரகுல் ப்ரீத் ஜோடிக்கு ஒரு ஹேட்ஸ் அப் . 

இயக்கம்: ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், என்ன செய்தால்? எப்படியெல்லாம் மகிழ்ச்சிகரமாக இருக்கலாம்? என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார்இயக்குநருக்கு பாராட்டுக்கள். 

கத்தரிக்கப்பட வேண்டிய, சில நீள நீளமான காட்சிகள் உண்டென்றாலும், வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையின் நீளத்தை மட்டும் சற்றே குறைத்திருக்கலாம். 

பைனல் "பன்ச் " : "தேவ்' -'பார்டரில் தேறி விட்டார்.பலே, பலே!'' 
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 15-02-2019, 09:33 AM



Users browsing this thread: 2 Guest(s)