Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கரு: வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைக்கும் ஹீரோவுக்கும், சின்ன வயதிலேயே தந்தையை இழந்து, அவரது தொழில் நிறுவனத்தை கவனிக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... உடைய ஆண்களை கண்டாலே வெறுக்கும் இளம் பெண் தொழில் அதிபர் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதல், மோதல், பிரிதல், சேர்தல்... டிராமா தான் "தேவ்" படத்தின் கரு மொத்தமும். 

கதை: கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூவரும் பள்ளிப் பருவம் தொட்டே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்லும் வழக்கமுடையவர் நாயகர் கார்த்தி. இந்நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார். 

ஜாலிப் பேர்வழியான கார்த்தியின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை எப்படியாவது, யார் மீதாவது காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக பேஸ்புக் உள்ளிட்ட வலை தளங்கள் வாயிலாக, தீவிரப்பெண் தேடலில் இறங்கி, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்த்ததும் அவரிடம் கார்த்தியை கோர்த்து விட்டு சேர்த்து வைத்து, சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே, கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் காதல் பித்து பிடித்து விடுகிறது. எதிர்பாராமல் சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார். 

ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையே ஏற்படும் நட்பு, காதலாக எப்படி கசிந்து உருகியது ? அதன்பின் அந்த காதல் , அடுத்தடுத்து எற்பட்ட மனக் கசப்பால் எப்படிப்பட்ட பிரிவு கண்டு கசந்து போனது? கசந்த காதல், மீண்டும் இனித்ததா? இணைந்ததா? இல்லையா..? என்பது தான் "தேவ்" படத்தின் மீதிக்கதையும், களமும்! 

காட்சிப்படுத்தல்: ஆர்.வேல்ராஜ் ஓளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, வம்சி கிருஷ்ணா... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் "தேவ்" படத்தில்நீள நீளமாக காட்சிப்படுத்தியிருக்கும் காட்சிகள் சிலவற்றை, மட்டும் இயக்குனரும், எடிட்டரும் சேர்ந்து ஷார்ப்பாக வெட்டி வீசியிருந்தால் "தேவ் "இன்னும் தேவாமிர்தமாக இருந்திருக்கும்.. மற்றபடி, வழக்கமான காதல் கதையில், வித்தியாசமான காட்சிப்படுத்துதல்... படத்திற்கு பெரும் பலம். 

கதாநாயகர்: நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் வித்தியாச விறுவிறுப்பு படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் நன்கு தேறியிருக்கிறார். 

கதாநாயகி: ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு சும்மா நச்' சுன்னு இருக்கு. தன்பாத்திரத்தின் கனம் உணர்ந்து அதற்ககேற்ப அம்சமாக நடித்திருக்கிறார் அம்மணி என்பது இப்படத்திற்கும், ரகுலுக்கும் பலம். 

பிறநட்சத்திரங்கள்: விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைப்பதை விட சற்று ஜாஸ்தியாக கடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் ஓ.கே. 
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 15-02-2019, 09:32 AM



Users browsing this thread: 7 Guest(s)