Checkmate ... A cybercrime thriller dreamer
#18
பெண்களுக்கு கடைசி முப்பதுகளிலும் ஆண்களுக்கு நாற்பதுகளிலும் காமம் ஒரு புது அனுபவம். அதை முழுவதுமாக அனுபவித்த இன்பக் களைப்பில் திளைத்த இருவரும் வாய் திறக்காமல் படுத்து இருந்தனர். அவர் தோளில் தலை வைத்து படுத்து இருந்த மனோகரி முகத்தை உயர்த்தி, "போன வேலை என்னாச்சு?" "ஓ, நல்ல படியா முடிஞ்சுது. இந்த கன்ஸைன்மென்ட் நான் நினைச்சதுக்கும் பெருசா இருக்கு. அந்த பையர் (BUYER) கிட்ட இருந்து பணத்தை சீக்கரம் வசூல பண்ணனும். இல்லைன்னா டேஞ்சர்"onday, December 17, 2001 6:30 PM திங்கள், டிசம்பர் 17, 2001 மாலை 6:30 சக்திவேல் படித்துக் கொண்டு இருந்த போது அவன் தந்தை வெகு நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்ததை கவனித்தான். அவர் பேசியதில் இருந்து ஒரு பெரிய வாக்கு வாதம் என்று அவனுக்கு தோன்றியது. பேசி முடித்து சில நிமிடங்களுக்கு பிறகு அவனது அறைக்கு முத்துசாமி வந்தார். அவன் படித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, "படிச்சுட்டு இருக்கியா? சரி, நான் அப்பறம் வர்றேன்" என்ற வாறு திரும்பி செல்ல எத்தனித்தார். அதற்குள் சக்திவேல், "என்ன சொல்லுங்கப்பா. நான் சும்மா ரிவைஸ்தான் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை" என்ற பிறகு அவனது கட்டிலுக்கு வந்து அமர்ந்தார். "உனக்கு இந்த ஏஸோ (AZO) அப்படின்னா என்னன்னு தெரியுமா?" "வெறும் ஏஸோ அப்படின்னா என்னன்னு தெரியலப்பா. ஆனா ஏஸோ காம்பௌண்ட்ஸ் (Azo Compounds) அப்படின்னா என்னன்னு தெரியும். ஒரு வித கெமிக்கல்ப்பா அது. வெவ்வேற காம்பௌண்ட்ஸ் இருக்கு. அதுல சில காம்பௌண்ட்ஸை மஞ்சள் , ஆரஞ்ச், சிவப்பு மாதிரி கலருக்கு சாயமா உபயோகிக்கலாம். நம்ம ஊர்ல அப்பறம் குமாரபாளயத்தில இருக்கற சாயப் பட்டறைங்களில உபயோகிக்கறாங்கப்பா" "பரவால்லை இவ்வளவு தெரிஞ்சு வெச்சு இருக்கே?" "எனக்கு பாடத்துல வந்துது. அப்பறம் ஸ்கூலுக்கு போற வழியில இருக்கற சாயப் பட்டறைக்கு போய் அவங்க ஆரஞ்ச் கலர் சாயம் வாங்கின பழைய டப்பா ஒண்ணை அவங்க கிட்ட கேட்டு வாங்கி அதுல என்ன எழுதி இருக்குன்னு பாத்தேன். என்ன காம்பௌண்ட் உபயோகிச்சு இருக்காங்கன்னு அதுல போட்டு இருந்துச்சு. அப்பறம் அந்த டப்பாவில அந்த சாயத்தை இன்னர் கார்மெண்ட்ஸுக்கு உபயோகப் படுத்த கூடாதுன்னு போட்டு இருந்துச்சுப்பா" "அப்படியா? " என்று அவர் கேட்டுக் கொண்டு இருந்த போது உள்ளே நுழைந்த மனோகரி, "அட, அவன் பாடத்தைப் பத்தி கேட்டுட்டு இருக்கற மாதிரி இருக்கு?" "ஒண்ணுமில்லைம்மா," என்ற வாறு அவர் அவசரமாக புறப்பட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றார். மனோகரி சக்திவேலிடம், "உன் கிட்ட அப்பா என்னடா கேட்டாரு?" "ஏஸோ காம்பௌண்ட்ஸ் (Azo Compounds) அப்படின்னு நான் ஆர்கானிக் கெமிஸ்ட்ரில படிக்கறதை பத்தி எனக்கு தெரியுமான்னு கேட்டாரரும்மா" என்றவன் தொடர்ந்து தன் தந்தையிடம் சொன்ன விளக்கங்களை சொன்னான். மனோகரி முகத்தில் குழப்ப ரேகைகள் படர, "அப்படியா?" என்றாள் சக்திவேல், "ஏம்மா அப்பாவோட பிஸினஸ்ல எதாவுது பிரச்சனையாம்மா?" மனோகரி, "எனக்கு தெரிஞ்சு ஒண்ணும் இல்லைடா கண்ணா. ஏன் கேக்கறே?" "இன்னைக்கு ரொம்ப நேரம் ஃபோன்ல பேசிட்டு இருந்தாரும்மா. எனக்கு அவரு யார் கூடவோ சண்டை போட்டுட்டு இருந்த மாதிரி தோணுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு எங்கிட்ட வந்து ஏஸோ (Azo) அப்படீன்னா என்னன்னு தெரியுமான்னு கேட்டார்" அருகில் வந்து அவன் உச்சி முகர்ந்து தலையை வருடியாவாறு "ஒரு பிரச்சனையும் இருக்காது. நீ உன் படிப்பில கவனமா இரு" என்று அவனுக்கு ஆறுதல் அளித்தாள். அன்று இரவு படுக்கையில் மனோகரி, "என்னங்க எதாவுது பிரச்சனையா?" முத்துசாமி, "இல்லைம்மா. எதுக்கு கேக்கறே?" "நீங்க சக்திகிட்ட எதோ கெமிகலைப் பத்தி கேட்டீங்களாமா?" "ம்ம்ம் ... அவனுக்கு தெரிஞ்சு இருக்கற அளவு எனக்கு தெரியலை" "ஆமா! அவனுக்கு பரிட்சைக்கு படிக்கற பாடம். உங்களுக்கு என்ன தலை விதியா அதை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு" "படிச்சதோட இல்லம்மா. பக்கத்துல இருக்கற சாயப் பட்டறைக்கு போய் அவங்க கிட்ட ஒரு காலி டப்பா வாங்கி அதுல என்ன போட்டு இருக்காங்கன்னும் பாத்து இருக்கான்" என்றபடி அதில் போட்டு இருந்த எச்சரிக்கையை பற்றி சொன்னார். "நம்ம கன்ஸைன்மெண்ட் எதுலயாவுது உபயோகிச்சு இருக்கமா?" "எதுலயாவுது இல்லை. எல்லாத்துலையும் உபயோகிச்சு இருக்கோம். அதான் அவசரமா ஆஃபீஸுக்கு போய் அங்க இருந்த லாப் ரிப்போர்ட்டை எல்லாம் பாத்துட்டு வந்தேன். ஆனா கவலை படறதுக்கு ஒண்ணும் இல்லை. நாம பெட்ஷீட் மாதிரி துணியைதான எக்ஸ்போர்ட் பண்ணறோம்? அந்த சாயத்தை உபயோகிச்சு திருப்பூர்காரங்க மாதிரி இன்னர் கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட் பண்ணி இருந்தாதான் பிரச்சனை" "அப்பறம் ஏன் சாங்காலம் ஃபோன்ல அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்களாமா?" "அனுப்பின கன்ஸைன்மென்ட் இன்னும் கஸ்டம்ஸ் க்ளியர் ஆகாம இருக்கு. இன்னும் பையர் (BUYER) கைக்கு போய் சேருல. அதை நாம் அனுப்பின க்ளியரிங்க் அண்ட் ஃபார்வர்டிங்க் (Clearing and Forwarding) ஏஜண்டு கிட்ட ஏண்டா க்ளியர் ஆகுலேன்னு கேட்டா மண்டையை சொறியறான். அதான் புடிச்சு திட்டிட்டு இருந்தேன்" "இந்த கன்ஸைன்மென்ட் எவ்வளவு மதிப்பு?" "அது இருக்கும். பத்து கோடிக்கு பக்கம். நாம் கொள்முதல் செஞ்சதே ஆறு ஏழு கோடிக்கு மேல ஆச்சு" "எதாவுது பிரச்சனையின்னா நாம் கொள்முதல் பண்ணினதை திருப்பி எடுத்துக்கு வாங்க இல்லை?" "அங்க இருந்து கை காசு போட்டு திருப்பி கொண்டு வந்து கொடுத்தா திருப்பி எடுத்துக்குவாங்க. ஆனா அங்க இருந்து திருப்பி எடுத்துட்டு வர்றதுக்கு எக்கச் சக்கமா செலவாகும். அதுக்கு திருப்பி எடுத்துட்டு வராமயே விட்டறலாம்" "அப்ப போட்ட பணம்?" "கோவிந்தோ, கோவிந்தா!" "என்ன இப்படி சாதாரணமா சொல்லறீங்க?" "இந்த தொழில் அப்படித்தாம்மா" "அப்பறம் எப்படி சமாளிப்பீங்க?" "இந்த கன்ஸைன்மென்ட்டுக்கு அப்படி ஆச்சுன்னா சமாளிக்க ஒரு வழியும் இல்லை. சப்ளையருங்களுக்கு ஏற்கனவே பாதி பணத்துக்கு மேல கொடுத்தாச்சு. ஆனா கவலை படாதே. ஒரு பிரச்சனையும் வராது" என்று அவளுக்கு ஆறுதலளித்தார்
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 14-02-2019, 06:54 PM



Users browsing this thread: 1 Guest(s)