Checkmate ... A cybercrime thriller dreamer
#17
Saturday, December 1, 2001 சனிக் கிழமை, டிசம்பர் 1, 2008 "அடுத்த மாணவர் நமது பள்ளிக்கே பெருமை சேர்த்து இருக்கும் ஒரு சர்வதேச பரிசைப் பெற்றவர். சர்வதேச மேதமாடிக்ஸ் ஒலிம்பியாட் (Mathematics Olympiad) எனும் கணிதப் போட்டியில் முதல் பரிசை பெற்ற சக்திவேல் முத்துசாமியை மேடைக்கு அழைக்கிறேன்" கரகோஷத்துக்கு இடையே அந்த உயரமான மாணவன் மேடைக்கு வந்தான். மற்றவர் கைதட்டல்கள் முடிந்த பின்னரும் நடந்து வந்து கொண்டிருந்த மாணவனைப் போன்ற முகத்தோற்றத்துடன் மூன்றாம் வரிசையில் வெள்ளை வேட்டியும் சட்டையுமாக அமர்ந்து இருந்த ஒருவரின் கைகள் ஓயவில்லை. அவரருகே முகத்தில் பெருமிதம் பொங்க அமர்ந்து இருந்த பெண்ணின் முகம் தன் கணவரின் செய்கையில் சற்றே வெட்கமடைந்து சிவந்தது. அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த அறிவிப்பாளர் யாவருக்கும் கேட்கும்படி மைக்கில், "ப்ரொஃபெஸர், சாரை கொஞ்சம் நேரம் கை தட்டாம இருக்க சொல்லுங்க. சக்திக்கு சீக்கிரமா எங்க பாராட்டு பத்திரத்தை கொடுத்திடறோம் அப்பறம் வீட்டுக்கு போய் பாக்கி கைதட்டல் கொடுக்கட்டும்" என்ற பிறகு கல்லூரி கணித ப்ரோஃபெசர் மனோகரி முத்துசாமி தலை குனிந்து அருகில் இருந்த கணவரின் கையை கிள்ளிய பிறகே தன் கைதட்டலை முத்துசாமி நிறுத்தினார். அறிவிப்பாளர் மைக்கில் தொடர்ந்து, "சக்திவேலை தெரியாதவர் இந்த பள்ளியில் இல்லை. இருப்பினும் வெளியில் இருந்து வந்திருப்போருக்காகவும் மற்ற மாணவர்களின் பெற்றோருக்காகவும் அவனைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இப்போது பதினோறாம் வகுப்பில் இருக்கும் சக்திவேல் படிப்பில் முதல் வகுப்பில் இருந்து முதல் இடத்தில் இருந்து இருக்கிறான். அதுமட்டும் அல்லாது பத்தாம் வகுப்பு வரை பல விளையாட்டுக்களிலும் முதல் இடத்தை பிடித்து இருந்தான். பதினோறாம் வகுப்புக்கு வந்த பிறகே தன் விளையாட்டிற்கு நேரம் செலவிடுவதை குறைத்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு இந்த பாராட்டு பத்திரத்தை கொடுக்குமாறு நமது பள்ளி முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" பாராட்டு பத்திரத்தைப் பெற்று திரும்பிய சக்திவேலின் நெற்றியில் முத்தமிட்ட முத்துசாமி அவனை ஆரத்தழுவினார். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இரவு கணவன் மனைவி இருவரும் படுக்கைக்கு போகு முன்னர் அன்று மாலை நடந்த விழாவை திரும்ப அசை போட்டுக் கொண்டு இருந்தனர். "ஐ.ஐ.டி என்டரன்ஸ் எக்ஸாம்லயும் அவன் இந்த மாதிரி நல்லா பண்ணணும்மா" "நிச்சயம் பண்ணுவான்" "எனக்கு இன்னைக்கு எவ்வளவு பெருமையா இருந்துது தெரியுமா?" "ம்ம் ..." படுக்கை அறைக்குள் நுழைந்த மனோகரி ஒன்றும் பேசாமல் அங்கு இருந்த அலமாரி அருகே சென்று தன் கூந்தலில் இருந்த ஹேர் பின்களை நீக்கியபடி தலையை வாரத் தொடங்கினாள். அவள் அருகே சென்று நின்றவர் அவள் முகத்தை ஏந்தி, "என்ன மேடத்துக்கு என்னவோ கோவம் போல இருக்கு?" "ம்ம்ம் ... ஒண்ணும் இல்லை. மேதமாடிக்ஸ் ஒலிம்பியாட்ல ப்ரைஸ் வாங்கின பையனை இவ்வளவு பாராட்டறவருகிட்ட இருந்து அவனை கோச் பண்ணின எனக்கு ஒரு வார்த்தை கூட இல்லைன்னு நினைச்சேன்" "ஏய், பெத்த பையன் கிட்ட பொறாமை படற ஒரே அம்மா நீதான்" "பொறாமை என் பையன் மேல இல்லை. ரெண்டு வாரமா வெளியூர் போயிட்டு வந்த நிமிஷத்துல இருந்து பையன் புராணமா இருந்தா கோவம் வராதாக்கும்?" "சாரி, சாரிம்மா. " என்றபடி அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டார். முப்பத்து ஒன்பது வயதிலும் கட்டுக் குலையாத அவளது அழகு அவரது கைகளுக்குள் மெழுகாக உருகத் தொடங்கியது.. தூரத்து உறவான மனோகரியை ஒரு திருமணத்தில் பார்த்த முத்துசாமி அக்கணமே அவள்தான் தன் வாழ்க்கை துணைவி என்று முடிவெடுத்தார். அவளிடம் தன் காதலை தெரிவித்தார். பி.எஸ்ஸி. கணிதம் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டு இருந்த மனோகரிக்கு மேல் மேலும் பி.ஹெச்.டி (டாக்டர் பட்டம்) வரை படிக்க வேண்டும் என்ற ஆர்வம். அவள் தான் மேலும் படிக்க வேண்டும் அதுவரை திருமணத்தில் விருப்பமில்லை என்றதற்கு 'நீ படிச்சு முடிக்கற வரைக்கும் காத்திருக்க தயார்' என்று வாக்களித்து இருந்தார். தனது பெற்றோரிடமும் தன் விருப்பத்தைக் கூறி அவர்கள் சம்மதமும் பெற்றார். வசதி குறைந்த அவளது தந்தை ஊரில் இருந்த பெரியவர் ஒருவரிடம் கடன் பட்டு இருந்தார். அந்த பெரிய மனிதர் கடனுக்கு பதிலாக மகளை சகல கெட்ட பழக்கங்களும் கொண்ட தன் மகனுக்கு தாரமாக கேட்டார். வேறு வழியின்றி ஒப்புதல் அளித்திருந்த தந்தையின் வார்த்தைக்கு கட்டுப் பட்டாலும் அவரிடம் மன்றாடி முத்துசாமியின் தந்தையை பார்க்க சொன்னாள். அவர் முத்துசாமியின் பெற்றோரை சென்று பார்க்க முத்துசாமி மனோகரிக்கு வரதட்சிணை கொடுத்து (அவள் தந்தையின் கடனை அடைத்து) மணம் புரிந்தார். திருமணமானாலும் அவளது பி.எஸ்ஸி முடியும் வரை காத்து இருந்து உறவு கொண்டார். அந்த முதலிரவு வரை மணவாழ்க்கையை முழுவதும் அறியாமல் இருந்த மனோகரி அந்நாளில் இருந்து தன் கணவனின் அன்பைத் தவிர காமத்திற்கும் அடிமையானாள். மற்ற மாணவ மாணவியர் மத்தியில் தான் திருமணமானவள் என்று பெருமையுடன் காட்டிக் கொண்டு தொடர்ந்து எம்.எஸ்ஸி கணிதத்தில் சேர்ந்தாள். எம்.எஸ்ஸி கடைசி வருடம் பரிட்சைக்கு போகும் போது அவள் நிறைமாத கர்ப்பிணி. முத்துசாமி ஈரோட்டை சுற்றி சிறிய அளவில் விசைத்தறி (Power loom) வைத்து தொழில் செய்து கொண்டு இருந்த பலரிடம் கொள்முதல் செய்த துணியை நியாயமான அளவு லாபம் வைத்து ஏற்றுமதி செய்து வந்தார். சிறிய அளவில் தொடங்கி இருந்த அந்த டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் (textile export) வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி இருந்தது. விவசாய நிலத்தை விற்று தொழிலில் முதலீடு செய்தார்.
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 14-02-2019, 06:53 PM



Users browsing this thread: 1 Guest(s)