Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கீழ்தரமான போஸ்டர் : விஜய் சேதுபதி கோபம்

[Image: NTLRG_20190214154037810039.jpg]

சினிமா படங்களுக்கு விளம்பரம் மிக முக்கியமானது தான், ஆனால், சமீபகாலமாக தமிழ் சினிமாவிற்கு எடுக்கப்பட்டு வரும் சில படங்கள் மிகவும் கீழ்த்தரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்தேறி இருக்கிறது.

சென்னை மாநகர் முழுவதும் ஒரு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதிலம் இடம் பெற்ற வாசகம் இது தான் "----- போட பொண்ணு வேணும்". பள்ளி, கல்லூரி அருகேயும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரை பார்த்து பொதுமக்கள் பலரும் முகம் சுழித்தனர், கோபமானார்கள். 

அது என்ன போஸ்டர் என்று விசாரித்தபோது ஒரு படத்திற்கான விளம்பரம் என தெரியவந்தது. சின்னத்திரை புகழ் அசார், "கடல போட ஒரு பெண்ணு வேணும்" என்ற படத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி இன்று(பி., 14) வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தலைப்பே மோசமாக இருக்கும் ஒரு படத்திற்கான விளம்பரமாக தான் இப்படி ஒரு கீழ்த்தரமான விளம்பரத்தை நகர் முழுதும் ஒட்டியிருக்கின்றனர். இரட்டை அர்த்தம் தொணிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்ட அந்த பட பர்ஸ்ட் லுக்கை, விஜய் சேதுபதி வெளியிட போகிறார் என்றதும், அவருக்கும் கண்டனங்கள் எழுந்தன. 

பெண்களை கொச்சையாக சித்தரிக்கும் இது போன்று போஸ்டர் ஒட்டப்பட்ட படத்தை விஜய் சேதுபதி விளம்பரம் செய்யலாமா, தன்னை நேர்மையானவராக காட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்கலாமா, இது போல ஒரு தரம் கெட்ட விளம்பரத்தோடு வரும் பட போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டால், அது அவருக்கு அவமானமே அன்றி பெருமை அல்ல... என சமூக வலைதளங்களில் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. 

இந்நிலையில் இப்படி ஒரு தரம் தாழ்ந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது என தெரிந்ததும், கோபமான விஜய் சேதுபதி, பட டீசரை வெளியிட மறுத்துவிட்டார். விஜய் சேதுபதி போன்று மற்ற நடிகர்களும் இதுபோன்ற படங்களை ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும் என பலரும் பாராட்டி வருகின்றனர். 

அதேசமயம், இதுமாதிரியான தரம் தாழ்ந்த விளம்பரம் தேடும் நபர்கள் மீதும், போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர். 

பெண்களை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் படங்கள் தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டிருப்பது தமிழ் திரையுலகை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இது நல்லதா... சீரழிவா...? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 14-02-2019, 05:01 PM



Users browsing this thread: 10 Guest(s)