மான்சி கதைகள் by sathiyan
#56
சென்னைக்கு வந்து முதன்முதலாக கிடைத்த வாழ்த்து மான்சி முகத்தை மலரச்செய்தது,

“ ஐயா இப்பத்தான் மித்ரா அம்மா மாடிக்கு போனாங்க, உங்களை நம்ம பழைய டிரைவர் தங்கியிருந்த அவுட்டவுஸ்ல தங்கச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளேபோய் மறுபடியும் கையில் ஒரு சாவியுடன் வந்து சத்யனிடம் கொடுத்தாள்

சத்யன் நன்றி சொல்லிவிட்டு சாவியுடன் தோட்டத்தில் இருந்த அவுட்டவுஸ்க்கு போனான், கதவை திறந்து சத்யனும் மான்சியும் உள்ளே போனார்கள், எந்த பொருளும் இல்லாமல் வீடு துடைத்து வைத்தது போல் இருந்தது,

அவர்களின் பின்னாலேயே வந்த திலகம், ஒரு பாயை விரித்துவிட்டு “ இதுல உட்காருங்க,, நான் போய் குடிக்க தண்ணி கொண்டு வர்றேன்” என்று சொல்ல

அவசரமாக அவளை தடுத்த சத்யன் “ தண்ணி எல்லாம் வேண்டாம்மா,, எங்களுக்கு தேவையானதை வெளிய இருந்து வாங்கிட்டு வந்து குடுத்தாப் போதும்” என்று சொல்லிவிட்டு இரண்டு ஆயிரம் ரூபாய் தாளை திலகத்திடம் கொடுத்து “ யாரையாவது கூட்டிட்டு போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க” என்றான்

அந்த வீட்டில் எதுவுமே சாப்பிடக்கூடாது என்ற அவனின் மனஉறுதி புரிய பணத்தை வாங்கிக்கொண்டு “ சரிங்கய்யா இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு போனாள் திலகம்

மான்சி தரையில் அமர்ந்து கொண்டு வந்திருந்த பையில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு மகனை அழைத்து மடியில் வைத்துக்கொண்டு பிஸ்கட்டை ஊட்ட ஆரம்பித்தாள்

சற்று நேரத்தில் மேனேஜர் அவர்களின் பெட்டியை எடுத்துவந்து கொடுத்துவிட்டுப் போக, அவர் போன சற்றுநேரத்தில் ஒரு ஆட்டோவில் தேவையான பொருட்களுடன் திலகம் வந்து இறங்கினாள்,, இருந்த பொருட்களை வைத்து சிம்பிளாக சமையல் செய்து சாப்பிட்டனர்

சத்யன் மான்சி எதிர்பார்த்தது போல் மித்ராவின் தரப்பிலிருந்து எந்த பிரச்சினையும் வரவில்லை,, மகனை கேட்டுகூட அனுப்பவில்லை, மனு சத்யன் மான்சியிடமே இருந்தான், அன்று இரவு இருவரும் புரியாத குழப்பத்துடனேயே தூங்கினார்கள்

மறுநாள் காலை மனுவை மித்ரா தூக்கி வரச்சொன்னதாக தோட்டக்காரன் வர, அவனிடம் கொடுக்க மறுத்து மான்சியே மகனை தூக்கிக்கொண்டு மித்ரா வீட்டுக்கு போனாள்,, ஹாலில் அமர்ந்திருந்த மித்ரா மான்சியை ஏறெடுத்தும் பார்க்காமல் திலகத்திடம் ஏதோ மெதுவாக சொல்ல, திலகம் வந்து மனுவை வாங்கிக்கொண்டு, மித்ராவின் அருகே உட்கார வைக்க, அவளின் உருக்குலைந்த தோற்றத்தைப் பார்த்து குழந்தை மிரண்டது

பக்கத்தில் இருந்த மேசையிலிருந்து புதுய உடை மற்றும் குழந்தைக்குத் தேவையான நகைகள் எல்லாவற்றையும் எடுத்து திலகம் குழந்தைக்கு போட்டுவிட ,, ஏதுமறியா குழந்தை அதை குதூகலத்துடன் கொண்டாடியது,, ஆனால் குழந்தையின் கொண்டாட்டத்தை பார்த்து கூட மித்ராவின் முகம் மாறவில்லை, சோபாவில் தலைசாய்த்து விட்டத்தை வெறித்துக்கொண்டு இருந்தாள்

எல்லாவற்றையும் போட்டுக்கொண்டு குழந்தை மான்சியை நோக்கி ஓடிவந்தது, அப்போது சத்யனும் அங்கே வர, குழந்தையின் உற்சாகம் பலமடங்காகியது,, அவர்கள் அங்கே இருக்கும் போதே ஒரு பெரிய கார் வந்து நிற்க, அதிலிருந்து நான்கைந்து ஆண்கள் இறங்கி வீட்டுக்குள் வந்தார்கள்


வந்தவர்கள் மித்ராவிடம் ஏதோ பேசிவிட்டு சிலப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அவள் கொடுத்த சில பேப்பர்களை வாங்கிக்கொண்டனர், மித்ரா திலகத்தை பார்த்து கண்ணசைக்க, திலகம் மான்சியிடமிருந்து மனுவை வாங்கி மித்ராவின் அருகில் உட்கார வைக்க, அந்த பெரிய மனிதர்களிடம் மித்ரா மனுவை அறிமுகம் செய்து வைத்தாள்,

அதில் ஒருசிலர் மனுவிடம் வேடிக்கையாய் பேச குழந்தை பதிலுக்கு பேசி சிரித்தது

வந்தவர்களில் ஒருவர் எழுந்து ஒரு லெதர் பையை எடுத்து மித்ராவிடம் கொடுத்து, “ இந்த ஏழுமாத வருமானமும் அதற்கான கணக்குகளும் இதில் இருக்கு, இனிமேல் மாதாமாதம் பணம் சரியாக உங்க கைக்கு வந்துடும்” என்று சொல்ல

மித்ரா நன்றிகூறி பெற்றுக்கொண்டாள்,, சற்று நேரத்தில் வந்தவர்கள் கிளம்பிவிட, மித்ரா பையுடன் மெதுவாக மாடியேறினாள்,, எல்லாவற்றையும் பார்வையாளர்களாக நின்று வேடிக்கைப் பார்த்த சத்யனும் மான்சியும் மகனின் உடலில் இருந்த உடை மற்றும் நகைகளை கழட்டி அங்கே சோபாவில் போட்டுவிட்டு மகனை தூக்கிக்கொண்டு தாங்கள் தங்கிருந்த அறைக்கு வந்தனர்

பெற்றப் பிள்ளையிடம் இப்படி கூட பாசம் பற்றுதலே இல்லாத ஒரு பிறவி இருக்குமா என்று இருவருக்குமே சந்தேகம் வந்தது, பணம் ஒன்றே குறிக்கோளாக வாழும் மித்ரா பெண்ணினத்திற்கே கேடு என்று எண்ணினார்கள்

அன்று முழுவதும் மித்ரா தனது அறையைவிட்டு வரவேஇல்லை என்றும்,, மாலை ஐந்து மணி வாக்கில் யார் யாரோ வந்து காலையில் வந்த பணத்தை வாங்கிக்கொண்டு போனதாகவும், பணம் பற்றாமல் மிச்சமிருந்த ஒரு காரையும் யாரோ எடுத்து போய்விட்டதாக திலகம் வந்து சொன்னாள்

அன்று இரவு மான்சியும் சத்யனும் நல்ல உறக்கத்தில் இருக்கும்போது திலகம் வந்து பதட்டமாக கதவை தட்ட,, சத்யன் தூக்கம் கலைந்து எழுந்து கதவை திறந்தான்,
அங்கே பதட்டத்துடன் திலகம் நின்றிருக்க, “ என்னாச்சு திலகாம்மா,, இந்த நேரத்துல வந்துருக்கீங்க” என்று சத்யன் குழப்பத்தோடு கேட்க

திலகம் பதட்டத்துடன் “ ஐயா மித்ராம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, நேத்து நைட்டு நெறைய குடிச்சாங்க, அப்புறமா யார் யாருக்கோ போன் பண்ணி பேசுனாங்க, அப்புறம் ரூம்ல போய் கதவை சாத்திகிட்டு எதைஎதையோ உடைச்சாங்க, நானும் தோட்டக்காரனும் போய் பார்த்தோம், கட்டிலைவிட்டு கீழே விழுந்து கிடந்தாங்க நாங்க தூக்கி தண்ணி குடுத்தோம் தண்ணி உள்ள இறங்கலை, அதான் டாக்டருக்கு போன் பண்ணிட்டு இங்க ஓடியாந்தேன்” என்று அவள் சொல்லிமுடிக்க..

சத்யனை விலக்கிக்கொண்டு மான்சி வெளியே வந்து “ அய்யோ கடவுளே, கைகாலை நல்லா சூடு பறக்க தேய்ச்சு விட்டீங்களா,, சூடா எதாச்சும் எடுத்துட்டு வாங்கம்மா நானும் கூட வர்றேன்” என்று கூறிவிட்டு பதட்டமாக மான்சி வெளியே போக..

சத்யன் அவள் கையை எட்டிப்பிடித்து தன்பக்கமாக இழுத்து “ நீ எங்கப் போற மான்சி,, எல்லாம் டாக்டர் வந்து பாத்துக்குவார், நீ உள்ள போய் தூங்கு “ என்று அதட்டி அவளை உள்ளே இழுத்தான்

அவன் முகத்தை திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்த மான்சி “ என்ன சத்தி இப்புடி பேசுற,, பாவம் சத்தி தனியா உயிருக்கு போராடிக்கிட்டு கெடக்கா,, இப்பப்போய் அலட்சியமா பேசுறயே, நீ வேனா வரவேனாம் என்னைய விடு சத்தி நான் போய் என்னாச்சுன்னு பாக்குறேன்” என்ற மான்சி அவன் கையை உதறிவிட்டு போகமுயன்றாள்

தனது பிடியை விடாமல் அவளை உலுக்கிய சத்யன் “ ஏய் மான்சி உனக்கு அவளைப் பத்தி தெரியாது, அவ எக்கேடு கெட்டா நமக்கென்ன,, இதெல்லாம் அவளா பாத்து வச்சுகிட்டது அதனால அவதான் அனுபவிக்கனும்,, நீ போகாதேன்னு சொன்னா கேளு,, என் பேச்சை மீறிப் போய்ட்டு அவமானப்பட்டு வராதே மான்சி” என்று சத்யன் கடும் கோபத்தில் வார்த்தைகளை அடக்கி பேசினான்

அவனை நம்பாமல் பார்ப்பது போல் பார்த்த மான்சி “ என்ன சத்தி இது விரோதம் பேசுற நேரமா இது, ஆயிரம் கெட்டவளா இருந்தாலும், நீ தொட்ட உடம்பு சத்தி அது, என் புள்ளைய பெத்து குடுத்தவ அவ, அவளை,, அவ உடம்பை செல்லரிக்க விட்டுட்டு நாம வேடிக்கைப் பார்க்கலாமா, என்னோட சத்தி இப்படி பேசாதே, என்னாச்சுப்பா உனக்கு?” என்று மான்சி கேட்க

அவளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று புரியாமல் தவித்த சத்யன் அவள் கையைப் பற்றி “ அவ உன்னை ஏதாவது அவமானப்படுத்திட்டா என்னால தாங்க முடியாது மான்சி,, அதனாலதான் சொல்றேன்” என்று வருத்தமாக கூறினான்

“ இல்ல சத்தி மான அவமானத்தை பார்க்குற நேரம் இது இல்லை, அப்படியே தான் நடந்தா நடந்துட்டு போகட்டும் அதைப்பத்தி எனக்கு கவலையில்லை, நான் போய் அவளுக்கு என்னாச்சுன்னு பார்த்துட்டு வர்றேன்” என்றவள் திலகத்துடன் மித்ரா வீட்டை நோக்கி வேகமாகப் போனாள்

போகும் அவளை வியப்புடன் பார்த்தான் சத்யன்,, 'தியாகம் என்பதன் பொருள் தான் மான்சியா?' என்று அவன் மனம் கேட்டது





“ எனக்காவே அவள்”

“ போலியில்லா உன் முகமும்”

“ சுயநலமில்லா உன் பேச்சும்”

“ என் நெஞ்சை வருடும் உன் சிரிப்பும்”

“ எல்லாம் எனக்காக எனும்போது”

“ உனக்காக நான் என் செய்வேன்”

“ அன்பே நீ அருகில் இல்லாத நாட்களில்”

“ ஈரமில்லா ஓர் இரவைப் போல்,

“ வரண்டது என் இதயம்!

“ உன் அருகாமை இல்லாதபோது

“ காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்,,

“ நுழைந்த வெறுமை,,

"துக்கத்தில் நான் துவளாமல் ,,

"உன் மடியில் தலைசாய்த்து,,

"என் தலை கோதும் உன் விரல்களோடு,,

"வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்!

Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)