14-02-2019, 11:22 AM
சத்யமூர்த்தி என்பது நீங்களா?” என்று சத்யனைப் பார்த்து நீதிபதி கேட்க..
“ ஆமாம் சார்” என்றான் சத்யன்
மேசைக்கு இடதுபுறம் இருந்த சேரை அவனுக்கு உட்காரும்படி காட்டிவிட்டு “ ஏன்பா விவாகரத்து ஆகி ரெண்டாவது கல்யாணம் ஆனவன் பிள்ளையை அதோட தாய்கிட்ட ஒப்படைக்கனும்னு உனக்கு தெரியாதா” என்று நீதிபதி தனது கேள்வியை ஆரம்பித்து வைக்க
சத்யனுக்கு பதிலாக அவனது வக்கீல் பேச,, மித்ராவுக்கு பதிலாக அவளது வக்கீல் வாதம் செய்தார், சத்யனுடைய வக்கீல் மித்ராவின் கேவலமான நடத்தையை முன்நிறுத்தி பேச,, மித்ராவின் வக்கீல் அதை மறுத்து, சத்யனின் இரண்டாவது திருமணத்தைப் பற்றி பேசி எதிர்வாதம் செய்தார்
இரண்டு தரப்பையும் பேசவிட்டு சிறிதுநேரம் கவனித்த நீதிபதி சத்யனைப் பார்த்து “ உங்கள் முன்னால் மனைவியின் நடத்தை சரியில்லை என்று நீங்கள் சொல்லும் காரணத்தை சரிவர நிரூபித்தப் பிறகு உங்கள் மகனை அழைத்துச்செல்லாம், அதுவரைக்கும் குழந்தை தன் தாயோடு இருப்பதுதான் நன்று” என்றவர் சத்யனின் வக்கீலிடம் திரும்பி “ இவர் தரப்பு எதிர் நோட்டீஸ் தாக்கல் பண்ணிருக்கீங்களா?” என்று கேட்க
அவர் பணிவுடன் வணங்கி “ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துவிட்டேன் ஐயா,, வரும் வழக்கு பதிமூன்றாம் தேதி விசாரனைக்கு வருகிறது” என்று பதில் சொன்னார்
“ அப்ப சரி நீங்க பிள்ளையை அழைத்துப்போய் உங்க பாதுக்காப்பில் வச்சுக்கலாம், இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்வரை சத்யன் குழந்தையைப் பார்க்க நீங்க அனுமதிக்கனும்” என்று மித்ராவைப் பார்த்து கூறிவிட்டு நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள..
சத்யனின் வக்கீல் அவசரமாக அவரை நெருங்கி “ ஐயாகிட்ட இன்னோரு அனுமதி கேட்டு ஒரு மனு குடுத்திருக்கோம், அதை கொஞ்சம் பார்த்து அனுமதி வழங்கனும்” என்று கூற
நீதிபதி தனது உதவியாளர் போன்ற ஒருவரை பார்க்க, அந்த நபர் மேசையில் இருந்த கத்தைப் பேப்பர்களில் இருந்து தேடியெடுத்து ஒத்தைப் பேப்பரை எடுத்து அவரிடம் கொடுக்க, நீதிபதி அதை மேலோட்டமாக படித்துவிட்டு, மித்ராவைப் பார்த்து “ குழந்தை தன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டான் என்பதால் இந்த வழக்கு முடியும்வரை குழந்தையுடன் தங்குவதற்கு தனக்கு அனுமதி வேனும்னு சத்யன் கேட்டுருக்கார், முறையா இதுக்கு நாங்க ஒப்புதல் கொடுத்துதான் ஆகனும், ஆனாலும் உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று கேட்க
மித்ரா தனது வக்கீலைப் பார்த்தாள், அவர் மித்ராவின் காதருகே குனிந்து ஏதே ரகசியமாக சொல்ல, மித்ரா நிமிர்ந்து நீதிபதியிடம் “ சரி வந்து தங்கட்டும்,, நான் என் வீட்டில் அனுமதிக்கிறேன்” என்று சொன்னாள்
உடனே நீதிபதி எழுந்து தனது உதவியாளரிடம் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார், அவரின் உதவியாளர் சத்யன் மித்ரா இருவரிடமும் சில கையெழுத்துக்களை வாங்கிக்கொண்டு அவரும் போய்விட,
அதுவரை எல்லாவற்றையும் விழிவிரிய வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மான்சியிடம் வந்த மித்ராவின் வக்கீல் “ குழந்தையை குடும்மா” என்று கையை நீட்ட,, மானசி கலவரத்தோடு சத்யனைப் பார்த்தாள்
உடனே அவளருகே வந்த சத்யன் “ சார் நாங்களும் அங்கேதானே வரப்போறோம்,, அதனால குழந்தையை நாங்களே அழைச்சிட்டு வர்றோம், நீங்க வற்புறுத்தாதீங்க குழந்தை அழப்போறான்” என்று சொல்ல, அவனுக்கு உதவியாக அவனது வக்கீலும் வந்தார்
மித்ரா எதுவும் சொல்லாமல் அந்த அறையைவிட்டு வெளியேற, பிறகு சத்யன் தன் மனைவி மகனுடன் வெளியே வந்து வக்கீலின் காரில் மித்ராவின் வீட்டுக்கு போனான்
மித்ரா வீட்டுக்கு வெளியே கார் நிறக்க, சத்யனும் மான்சியும் இறங்கிக்கொண்டார்கள், அவர்களுடன் இறங்கிய மேனேஜர் “ எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளுங்க சத்யன், குழந்தையையும் முக்கியமா உங்க மனைவியையும் இங்கே தனியா விட்டுட்டு ஒரு நிமிஷம் கூட எங்கேயும் போகாதீங்க, எது வேண்டுமானாலும் எனக்கு கால் பண்ணுங்க நான் வந்து பார்த்துக்கிறேன்,, நான் போய் உங்களோட பெட்டியை எடுத்துட்டு வர்றேன் சத்யன்,, டேக் கேர் சத்யன் ” என்று ஒரு தகப்பனைப் போல் அக்கரையுடன் பேசிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி கிளம்பிவிட்டார்
சத்யன் கால்கள் கூச மான்சியுடன் அந்த வீட்டின் வாசற்படியில் காலைவைத்தான், அங்கிருந்து வெளியேறிய நாள் அவன் கண்முன் நிழல் படமாக ஓடி மறைந்தது, மகனை தோளில் தாங்கி மனைவியின் தோளை அணைத்து சத்யன் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்களை வரவேற்க அங்கே யாருமில்லை, சத்யன் வாசற்படியிலேயே நின்றான்
அப்போது உள்ளேயிருந்து ஓடிவந்த, சத்யனிடமிருந்து திலகம் மனுவை வாங்கிக்கொண்டு “ வாங்கய்யா, நேத்தே வந்து வேலையில சேர்ந்துட்டேன்,, வேலைக்கு யாருமே இல்லாததால நான் வந்து கேட்டவுடனே சேர்த்துக்கிட்டாங்க” என்றவள் மான்சியிடம் திரும்பி “ மகாலட்சுமி மாதிரி இருக்கீங்கம்மா,, நீங்களும் சத்யன் அய்யாவும் பலநூறு வருஷம் நல்லாருக்கனும்” என்று வாழ்த்தினாள்