14-02-2019, 11:21 AM
கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ இல்ல சத்தி இந்த கோர்ட்டு, இந்த மாதிரி போலீஸ்காரவுக, கறுப்புக் கோட்டு போட்ட வக்கீலுக, இந்த பரபரப்பு எல்லாமே எனக்கு ஏற்கனவே அறிமுகமானது தான் சத்தி, அன்னிக்கு எனக்கு குற்றம் செய்த உணர்வே இல்லை, கையில விலங்கை மாட்டிகிட்டு அசால்ட்டா ஒக்காந்திருந்தேன்,, ஆனா இன்னிக்கு அதெல்லாம் என் புள்ளைய பாதிக்குமோன்னு எனக்கு ரொம்ப பயமாயிருக்கு சத்தி,, அப்போ இருந்த தைரியம் இப்ப இல்ல சத்தி, ரொம்ப கோழைத்தனமா இருக்கு என் மனசு, எதுக்கெடுத்தாலும் முணுக்குனு கண்ணுல தண்ணி வந்துடுது, நா அன்னிக்கு செய்த வதம் இன்னிக்கு பூதம் மாதிரி என்னை பயமுறுத்துது, என்னையப் பத்தி யாருக்காச்சும் தெரிஞ்சா அப்பறம் மனுகூட என்னைய இருக்க விடமாட்டாங்க சத்தி ” என்று கண்ணீர் வழியாமல் அடக்கியபடி மான்சி மெல்லிய குரலில் சொல்ல
சத்யனுக்கு,, அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, அவள் சொல்வது முற்றிலும் உண்மை மான்சியைப் பற்றிய உண்மைகள் யாராவது மித்ராவிடம் சொல்லிவிட்டால் அதன்பிறகு இந்த வழக்கின் போக்கே மாறிவிடும், மறுபடியும் மகனை மித்ராவிடமிருந்து மீட்பது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான், ஆனால் இதையெல்லாம் சொல்லி, ஏற்கனவே கலவரத்தில் இருக்கும் மனைவியை மேலும் கலவரப்படுத்த விரும்பாத சத்யன் அவள் கையை ஆறுதலாக அழுத்தி
“ அதெல்லாம் யாருக்கும் எதுவும் தெரியாது மான்சி,, தெரியவும் வாய்ப்பில்லை, அப்படி உன்னைப்பத்தி மித்ராவுக்கு ஏதாவது தெரிஞ்சிருந்தா கோர்ட் நோட்டீஸ்ல அதை பத்தி குறிப்பிட்டு இருப்பாங்க, அப்படி எதுவுமில்லை, அதனால நீ தைரியமா இரு மான்சி, நான் உன்கூட இருப்பேன், நாமதான் ஜெயிப்போம் ” என்று சத்யன் சொல்லிகொண்டு இருக்கும்போதே மேனேஜர் அங்கே வர இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை,
சத்யனின் பக்கத்தில் அமர்ந்தவர் “ மித்ரா மேடம் வந்துட்டாங்க சத்யன்,, கார்ல வெயிட் பண்றாங்க, நான் உங்களுக்கு உதவியா இருக்குறது தெரிஞ்சிருக்கும் போலருக்கு, என்னை பார்த்தும் எதுவுமே பேசலை, கார் க்ளாசை ஏத்திவிட்டுட்டாங்க” என்று மேனேஜர் சிறு வருத்தத்துடன் கூறினார்
சத்யனுக்கு அவரின் நிலைமையைப் பார்த்து சங்கடமாக இருந்தது, பலவருடங்களாக மித்ராவின் கம்பெனியில் மானேஜராக இருந்தவர், இன்று கம்பெனி கைமாறியதும் வேலையிலிருந்து நின்றுவிட்டு, வீட்டில் பிள்ளைகள் வருமானத்தில் இருப்பவர், சத்யனின் நேர்மையான குணம் கம்பெனியில் வேலை செய்யும் காலத்தில் இருந்தே பிடித்துப்போய் எப்போதும் அவனிடம் தனிப்பட்ட அன்பு வைத்திருப்பவர், மனு சத்யன் மான்சியிடம் வளர்ந்தால் மட்டுமே ஒரு நல்ல பிள்ளையாக இருக்கமுடியும் என்ற காரணத்திற்காக மனு விஷயத்தில் முழுமூச்சாக இறங்கி இருப்பவர், அதிலும் மான்சியைப் பார்த்தபிறகு அந்த தாய்க்கு உதவவேண்டும் என்று உளமார நினைப்பவர், மொத்தத்தில் ஒரு நல்ல குடும்பத்தலைவர் நல்ல மனிதர்,
“ எங்களாலதான் சார் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம், ஆனா நீங்க இல்லேன்னா இந்த பிரச்சனையை நான் எப்படி சமாளிச்சுருப்பேனோ தெரியாது” என்று சத்யன் சொல்ல
“ அதெல்லாம் ஒன்னுமில்ல சத்யன், எனக்கும் மனு வயசுல ஒரு பேரன் இருக்கான், ப்யூச்சர்ல மனுவோட லைப் நல்லாயிருக்கனும் என்ற ஒரே விருப்பம் தான், அதுவுமில்லாம ஒரு நல்ல தாய்க்கு உதவிய மனநிம்மதி கிடைக்கும் அவ்வளவு தான் சத்யன்” என்று மான்சியை பார்த்துக்கொண்டே அவர் சொல்ல,, மான்சி அவரைப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்
ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவர், சட்டென்று பரபரப்புடன் எழுந்து நின்றார்,
ஆம் மித்ரா காரைவிட்டிறிங்கி அந்த வளாகத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தாள்,, அவளின் தோற்றத்தைப் பார்த்து சத்யன் திகைத்துப் போனான், முன்பு இருந்ததை விட பாதியாக மெலிந்த தோற்றம், எலும்பெடுத்த முகம், அதை மறைக்க அளவுக்கதிகமான ஒப்பனை, உடல் மெலிவால் அவள் போட்டிருந்த சல்வார்கம்மீஸ் கொஞ்சமும் பொருந்தாது தொளதொளவென்று இருந்தது, அவள் உடலில் எப்போதும் ஜொலிக்கும் வைரங்கள் இப்போது இல்லை, பலநாள் நோய்வாய்ப்பட்டவள் போல எந்தவிதமான பரபரப்பும் இல்லாத மிகவும் தளர்ந்த நடை, ஆனால் பழைய கர்வம் மட்டும் முகத்தில் மாறவேயில்லை,, இவர்களின் அருகே வந்தபோது நடை தடைபட நின்று நிமிர்ந்து சத்யனை ஏறிட்டாள், அவள் பார்வையில் ஒரு வெறுப்பு, பிறகு மான்சியிடம் திரும்பிய பார்வையில் ஒரு அலட்சியம், சத்யன் தோளில் இருந்த மனுவை அவள் பார்க்கவேயில்லை, நிமிடநேர பார்வைக்கு பிறகு நேராக போய்விட்டாள்
சத்யனுக்கு நம்பவே முடியவில்லை ,, என்னாச்சு இவளுக்கு, ஏன் இப்படி ஆயிட்டா, குடி அதிகமாகி உள்ளுருப்புகளை பாதிச்சுருச்சா? என்று அவன் யோசிக்கும்போதே, அவன் கையை சீண்டிய மான்சி “ சத்தி இவளா மித்ரா,, ஏன் இப்படியிருக்கா, என்னமோ சீக்குப் புடிச்ச கோழி மாதிரி இருக்காளே, இவ எப்படி நம்ம புள்ளைய பாத்துக்குவா,, இவளை பாத்துக்கவே நாலு ஆள் வேனும் போலருக்கே சத்தி” என்று ஒரு பெண்ணுக்கு பெண்ணாய் மான்சி பேசினாள்
“ ஏன் இப்படியானான்னு எனக்கு தெரியலை மான்சி, நமக்கு ஏன் அந்த கதை வந்த வேலையைப் பார்ப்போம்” என்று சத்யன் விட்டேற்றியாக பேச, அவன் மனநிலை புரிந்து மான்சி வேறு எதுவும் கேட்கவில்லை
சற்று நேரத்தில் இவர்களின் வக்கீல் வந்து இவர்களை அழைத்துக்கொண்டு ஒரு பெரிய அறைக்குள் செல்ல,, அங்கே கறுப்புக் கோட் அணிந்த நான்கு பேரும், ஒரு பெரிய மேசைக்குப் பின்னால் நீதிபதி ஒருவரும் அமர்ந்திருக்க மேசைக்கு வலதுபக்கம் இருந்த சேரில் மித்ரா அமர்ந்திருந்தாள்,