14-02-2019, 11:21 AM
அதுவரை உறுதியாக இருந்த மான்சி அவன் நெஞ்சில் விழுந்ததும், கோழையாகி குலுங்கினாள், சத்யன் அவளை அணைத்து ஆறுதல் படுத்தி “ என்னை வரவேண்டாம்னு சொல்றியே மான்சி, உன்னையும் மனுவையும் அங்க விட்டுட்டு நான் எப்படி நிம்மதியா இருப்பேன் மான்சி, எந்த கஷ்டமானாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே அனுபவிப்போம், அதுவும் நீ இருக்குற நிலைமையில என்னால உன்னை ஒருநாள் கூட அங்க தனியா விடமுடியாது கண்ணம்மா,, ஞாயித்துக்கிழமை கெளம்புறதுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் பண்ணிடு மான்சி, ஆனா ரதிக்கு ஆறுமாசம் தான் ஆகுது, அதுக்குள்ள அவளுக்கு தாய்ப்பாலை மறக்க வைக்குறதுதான் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு மான்சி” என்று சத்யன் வருத்தமாக சொல்ல
“ அதுக்கு என்னப் பண்றது, எப்புடி இருந்தாலும் நான் இருக்குற நிலைமையில இன்னும் ரெண்டு மூனு மாசம்தான் குடுக்க முடியும்” என்றவள் அவனிடமிருந்து விலகி, “ சத்தி உன் போனை குடு புவனாவுக்கு போன் பண்ணலாம்” என்று கேட்க
“ இல்ல மான்சி இங்க இருக்குற சிவகிரி தான நானே நேர்ல போய் விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வர்றேன், நீ வேனா முத்துமாரிக்கு போன் பண்ணி அவ புருஷனையும் வரச்சொல்லு எல்லாரும் இங்கே இருந்து ஏவாரத்த பாக்கட்டும், நான் பார்ட்டிக்கிட்ட சென்னையில இருந்து போன் பேசிக்கிறேன்” என்றவன் புவனாவின் வீட்டுக்கு கிளம்ப தயாரானான்
சத்யன் மான்சியின் ப்ளான் படி எல்லாமே சரியாக நடந்தது, ஊரிலிருந்து வந்த புவனாவும் ராமுவும் தாங்கள் இருந்து சூளையை பார்த்துக்கொள்வதாகவும் தைரியமாகப் போய் மனுவுடன் வீடு திரும்புமாறு சொன்னார்கள்,
ஆனால் மான்சியின் நிலைமைதான் மோசமானது, ஆறுமாத குழந்தைகளுக்கு பாலை மறக்க வைத்ததன் பலன், இவளுக்கு பால் கட்டிக்கொண்டு கடுமையான காய்ச்சலில் போய் முடிந்தது, கழுத்துக்கு கீழே பாரமாய் வலியெடுக்க, அவள் அம்மாவும் பாட்டியும் ஏதேதோ கைவைத்தியம் செய்து அவளை எழுந்து உட்கார வைத்தார்கள்,
கிளம்பும் நாளன்று கடையநல்லூரில் பாதி மக்கள் ரயில்நிலையத்திற்கு வந்து சத்யன் மான்சி மனு ஆகிய மூவரையும் வழியனுப்பி வைத்தார்கள்,காய்ச்சலால் துவண்டு போன மனைவியை அழைத்துக்கொண்டு மகனுடன் ரயிலில் கிளம்பினான் சத்யன்,
அன்றைய பயணம் முழுவதும் மனைவியை மடியிலும், மகனை தோளிலும் படுக்க வைத்துக்கொண்டு விடியவிடிய கண்மூடாமல் விழித்து கிடந்தான் சத்யன், மான்சிக்கு மித்ரா வீட்டில் ஏற்படும் அவமரியாதையை அவள் பொறுத்துக்கொள்வாள், ஆனால் என்னால் எப்படி தாங்கமுடியும்?, என்ற கேள்வி அவனுக்குள் மறுபடியும் மறுபடியும் எழுந்தது
சென்னையில் இறங்கியதும், மான்சியின் உடலில் ஒரு நடுக்கம் பரவ, சத்யன் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு ரயிலைவிட்டு இறங்கினான், முதல்நாளே போன் செய்து மேனேஜர்க்கு தகவல் சொல்லியிருந்ததால், அவரும் வக்கீலும் இவர்களை அழைத்துச்செல்ல காரில் வந்திருந்தனர்
மான்சியைப் பார்த்து இருவருமே கையெடுத்துக் கும்மிட்டனர்,, பணத்துக்காக பெற்ற பிள்ளையை தத்து கொடுக்கும் இந்த காலத்தில், மூத்தாள் மகனுக்காக போராடும் இப்படியொரு தாயா என்ற வியப்பு அவர்களின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது
மேனேஜரின் வீட்டில் இவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு, இருவரும் குளித்து சாப்பிட்டு முடிக்கவும், வக்கீல் காரோடு வரவும் சரியாக இருந்தது, அனைவரும் காரில் ஏறி கோர்ட்டுக்கு போனார்கள்
மான்சி மனுவை மடியைவிட்டு இறக்கவில்லை, காரில் இருந்து இறங்கும்போது மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு இறங்கினாள், மனுவுக்கு என்ன புரிந்ததோ அவள் கழுத்தை விடாமல் கட்டிக்கொண்டான்,
கோர்ட் வளாகத்தில் இருந்த பெஞ்சில் சத்யன் மான்சி மனு மூவரும் அமர, மேனேஜரும் வக்கீலும், ஒரு அறைக்குள் நுழைந்தனர், நிறைய மக்கள் இப்படியும் அப்படியுமாக பரபரப்பாக போய் வந்தனர், மான்சி குனிந்த தலை நிமிரவில்லை,
அவள் முகத்தையே பார்த்த சத்யனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, மான்சியிடமிருந்து மனுவை வாங்கிக்கொண்டு நடுங்கும் அவள் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான், மான்சி தனது இரண்டு கைகளுக்குள் அவன் கையை வைத்து அழுத்திக்கொண்டு தனது பதட்டத்தை தணிக்க முயன்றாள்
அவள் தோள் பக்கமாக சரிந்த சத்யன் “ மான்சி பதட்டப்படாதே, நாம நம்மளோட மகனுக்காக வந்திருக்கோம், வேற எதைப்பத்தியும் யோசிக்காதே, பழசையெல்லாம் மறந்துடு மான்சி, தைரியமா இரு” என்று சத்யன் தைரியம் கூறி அவளுடைய பதட்டத்தை தணிவிக்க முயன்றான்