14-02-2019, 11:20 AM
“ அது வந்து மான்சி,, கோர்ட்ல தீர்ப்பு நமக்கு சாதகமா வர்ற வரைக்கும் நம்மபையன் நம்ம கண்கானிப்பில் இருக்கனும்னா, மித்ராவோட வீட்டுலயே மனுகூட யாரவது தங்கனும்னு சொல்றாரு மேனேஜர்,, ஆனா அதுக்கு மித்ரா நிச்சயம் சம்மதிக்க மாட்டா, நாம வேனா ஒரு மனு தாக்கல் பண்ணி கோர்ட்ல பர்மிஷன் கேட்கலாம்னு வக்கீல் சொல்றார், எனக்கும் அதுதான் நல்ல யோசனையா தோனுது, நம்ம வழக்கு ஜெயிச்சு தீர்ப்பு வரும்வரை நம்ம புள்ளைய பாதுக்காக்கனும் அதனால இதுதான் சரியான வழி, வக்கீலும் ரொம்ப நல்ல மனுஷன் வயசானவர், நம்ம நிலைமை புரிஞ்சு கரெக்டா எல்லாத்தையும் செயல் படுத்துறார், நேத்தே எதிர் நோட்டீஸ் தாக்கல்ப் பண்ண எல்லா ஏற்பாடும் செய்துட்டார், இன்னிக்கு தாக்கல் பண்ணிடுவாங்க, மேனேஜர் கிட்ட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கறதா சொல்லிருக்கார் மான்சி, நீ தைரியமா இரு” என்று சத்யன் மான்சியிடம் தைரியம் கூற.
மான்சி அமைதியாக இருந்தாள், அதேசமயம் பற்றியிருந்த அவன் கையை அழுத்தமாக பற்றியிருந்தாள், சத்யனுக்கு அவள் அமைதி சங்கடத்தை ஏற்ப்படுத்த “ கலங்காதே மான்சி எல்லாம் நல்லபடியா முடியும்” என்றான்
அவன் கையை விடுவித்த மான்சி ஒரு பெருமூச்சுடன் “ கலக்கம் எல்லாம் இல்லை சத்தி, அடுத்து என்னப் பண்றதுன்னு யோசிச்சுக்கிட்ட இருக்கேன் ” என்று உறுதியான குரலில் மான்சி கூற
அவளை ஆச்சரியமாக பார்த்த சத்யன் “ எல்லாம்தான் ஏற்பாடு பண்ணிட்டேனே மான்சி, ஞாயித்துக்கிழமை மனுவைக் கூட்டிக்கிட்டு செங்கோட்டை எக்ஸ்பிரஸ்ல கிளம்ப வேண்டியதுதான் பாக்கி” என்றான் சத்யன்
அவனை ஏறிட்ட மான்சி “ இன்னும் எவ்வளவோ இருக்கு சத்தி,, என் தங்கச்சி புவனாவுக்கு போன் போட்டு அவளையும் அவ புருஷன் ராமுவையும் வரச்சொல்லனும்,, அவங்க வந்தா சூளையை கவனிச்சுக்குவாங்க, என் தாய்மாமாவுக்கு தகவல் சொல்லி புவனாகூட சூளையை பாத்துக்க சொன்னா தட்டாம செய்வாரு, நான் இன்னிக்கே ரதிக்கு தாய்பாலை மறக்கடிச்சுட்டு, வேற ஏதாவது ஊட்டி விட்டுட்டு பழக்கனும், ரதிய எப்படி கவனிச்சுகறதுன்னு பாட்டிக்கிட்டயும், எங்கம்மாகிட்டயும் சொல்லிட்டா அவங்க பாத்துக்குவாங்க” என்று மான்சி ஒரு முடிவுடன் சொல்லிகொண்டே போக,
அவளை நிறுத்திய சத்யன் “ எதுக்கு மான்சி இதெல்லாம்” என்றான்
அவனை நேராக பார்த்த மான்சி “ என்னா சத்தி இப்படி கேட்குற, மனு கூட நானும் நீயும் போகனும்ல, அவ வீட்டுல தங்கனுமே சத்தி, அதுக்கு ஏத்தாப்பல எல்லா ஏற்பாடும் பண்ணாத்தான நாம அங்க போய் இருக்குறத பாக்கமுடியும்” என்று மான்சி விளக்கிச் சொல்ல
சத்யன் முகத்தில் திகைப்புடன் “ நீயும் நானும் மித்ரா வீட்ல தங்க வேண்டாம் மான்சி, நான் திலகம்மாவ பார்த்து பேசிட்டு வந்திருக்கேன், அவங்க மறுபடியும் அவகிட்ட வேலைக்கு சேர்ந்து மனுவை பார்த்துக்கிறேன்னு சொல்லிருக்காங்க, நாம அவவீட்டுல தங்கவேண்டாம் மான்சி, அவ நம்மளை ரொம்ப கேவலமா நடத்துவா மான்சி மேனேஜரும் வக்கீலும் இதைத்தான் சொல்றாங்க” என்று சத்யன் சொன்னான்
அவனை கோபமாக பார்த்த மான்சி “ என்னா சத்தி இப்புடி சொல்ற, ஒரு வேலைக்காரம்மாவோட பாதுகாப்புல நம்ம புள்ளைய விட்டுட்டு நம்மளால நிம்மதியா இருக்கமுடியுமா, மேனேசருக்கும் வக்கீலுக்கும் என்னய்யா தெரியும், நமக்கு நம்ம புள்ள வேனும்னா எல்லாத்தையும் தாங்கித்தான் ஆகனும், நீவேனா அவ வீட்டுக்கு வரவேனாம் ,, நான் அவ வீட்டுலதான் தங்கப்போறேன், என் மகனை என் பாதுகாப்புலதான் வச்சுக்குவேன், அவ வீட்டுல தங்குறது உனக்கு அவமானமா இருந்தா நீ வராதே சத்தி, எதுவானாலும் நான் சமாளிச்சுக்கிறேன், கோர்ட்டுல தீர்ப்பு வர எத்தனை வருஷமானாலும் சரி நான் என் புள்ளையோடத்தான் கடையநல்லூர் வருவேன், அவ வீட்டுல அவ என்னை செருப்பால அடிச்சு நாய்த் தட்டுல சோறு போட்டாலும் நான் என் புள்ளைய விட்டுட்டு வரமாட்டேன் சத்தி, யார் சொன்னாலும் என் முடிவ மாத்திக்க மாட்டேன், ரெண்டாவது பொண்டாட்டி தங்கக்கூடாதுன்னு கோர்ட் சொன்னா, நான் அந்த வீட்டுல கக்கூஸ் கழுவு ஒரு வேலைக்காரியா இருக்ககூட சம்மதம்னு சொல்லுவேன் சத்தி, என் புள்ளைக்காக எதையும் தாங்குவேன் சத்தி,, இதுதான் என் முடிவு” என்று முடிவாக சொல்லிவிட்டு மான்சி கட்டிலில் இருந்து எழுந்திருக்க
சத்யன் ஒரு தெய்வத்தை தரிசிக்கும் பக்தனைப் போல அவளை பயபக்தியோடு பார்த்தான், அவளுக்கு தன்மீது எவ்வளவு பாசமும் காதலும் இருக்கிறது என்று சத்யனுக்குத் தெரியும், அப்படிப்பட்ட என்னையும் அவ பெத்த குழந்தையையும் விட்டுட்டு மித்ரா வீட்டுல போய் மனுவுக்காக ஒரு வேலைக்காரியா இருக்கிறேன்னு சொல்றாளே, இவளைப் போல ஒரு தாய் இருப்பாளா? அண்ணனின் தவறுக்காக அவனை கொலையே செய்தவள், இன்று மித்ரா பணத்துக்காக செய்யும் அநீதியை பொறுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்வதற்கு காரணம் வெறும் தாய்ப்பாசம் மட்டும் தான், தாய்ப்பாசம் ஒரு பெண்ணை இப்படிக்கூட மாற்றமுடியுமா?, மகனுக்காக என்னையே வரவேண்டாம் என்கிறாளே, எவ்வளவு கோபமும் வேகமும் உள்ளவ, இன்னிக்கு மகனுக்காக இவ்வளவு பொறுமையானவளா மாறிட்டாளே, இவளைப் போல ஒருத்திக் கிடைச்சதுக்கு நான் இன்னும் எத்தனை ஜென்மத்துக்கு புண்ணியம் செய்னும்னு தெரியலை ’ என்று வியப்புடன் எண்ணியவன் கதவை நோக்கி உறுதியுடன் போன மான்சியின் கையைப் பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான்