மான்சி கதைகள் by sathiyan
#51
இருவரின் கண்ணீர்த்துளிகளும் கீழேயிருந்த சாப்பாட்டுத் தட்டில் சொட்டியது, ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த சத்யன் தட்டை எடுத்து சாதத்தை பிசைந்து மனைவிக்கு ஊட்டினான், அவனுடைய அன்போ,, அவளின் வயி்ற்று பசியோ, எதுவோ ஒன்று அவன் கொடுத்த சோற்றை மறுக்காமல் உண்ண வைத்தது
தட்டில் இருந்த சோறு காலியாக, சத்யனே எழுந்து போய் மறுபடியும் சோற்றைப் போட்டுக்கொண்டு வர, இருவரும் மாற்றி மாற்றி சாப்பிட்டனர்,, சாப்பிட்டு முடித்து சத்யன் தன் தோளில் இருந்த ஈரத்துண்டால் மனைவியின் முகத்தை துடைத்துவிட்டு அவளை அணைத்துக்கொண்டு தன் அறைக்கு போனான்

அவளை கட்டில் அமர்த்திவிட்டு சத்யன் தரையில் அமர்ந்து அவள் மடியில் தலைசாய்த்து அவளின் இடுப்பை கைகளால் சுற்றிவளைத்துக் கொண்டான்,,
தன் மடியில் சாய்ந்த சத்யனின் தலைமுடியை தனது விரல்களால் அலைந்தவள்

“ இப்ப சொல்லு சத்தி,, என்னதான் ஆச்சு, என் சக்களத்திக்கு என்னாதான் வேனுமாம், எதுக்கு இப்ப என் புள்ள மேல குறி வைக்குறா” என்று மான்சி ஆத்திரத்தை அடக்கிய குரலில் கூறினாள்

பேசுவதற்கு வசதியாக அவள் மடியில் கவிழ்ந்திருக்கும் தலையை புரட்டி பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு “ நான்தான் முன்னமே சொன்னேனே நம்மளோட பணமோ , அல்லது நானோ மனுவோ அவளுக்கு தேவையில்லை, அதைவிட பெரிசா எதுக்கோ ப்ளான் பண்றான்னு” என்றவன் நிமிர்ந்து அமர்ந்து “ ஆமாம் மான்சி அவளுக்கு மறுபடியும் கோடிக்கணக்கில் சொத்து கிடைச்சிருக்கு, ஆனா அந்த சொத்தை அனுபவிக்க மனு அவகூட இருக்கனும்” என்று சத்யன் சொல்ல

அவனை புரியாமல் பார்த்த மான்சி “ கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு சத்தி,, அவ்வளவு பணம் எப்புடி கெடச்சுது” என்றாள்

எழுந்து அவளருகே கட்டிலில் அமர்ந்த சத்யன் “ அன்னிக்கு மேனேஜர் வந்தப்ப ஒரு விஷயம் சொன்னாரே, அவளோட தாய்வழி பாட்டிக்கிட்ட போய் மித்ரா பணம் கேட்டதும் அவங்க இல்லேன்னு சொன்னதும், இப்போ அவ பாட்டி இறந்து போய்ட்டாங்க,, ஆறு மாசம் ஆகுது, அவங்களோட சொத்துக்களில் மித்ராவோட பங்கை மனுவோடு பெயரில் எழுதி அவனுக்கு இருபத்தியொரு வயசு ஆகும்வரை கார்டியனா அவளை நியமிச்சுருக்காங்க, மனு பெரியவனா ஆகும்வரை அந்த சொத்தால வர்ற வருமானத்தை மித்ரா அனுபவிக்கலாம் ஆனா விற்க முடியாது, இந்த சொத்து விவரம் தெரிஞ்சதும் தான் இப்படியொரு வழக்கு பதிவு பண்ணிருக்கா, அவளோட குறி சொத்துதான், மனு இல்லை” என்று சத்யன் சொல்லிகொண்டு இருக்கும் போதே பாதியில் மடக்கிய மான்சி

“ இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் சத்தி” என்றாள்

“ நான் நேத்து போனதுமே நேரா மேனேஜர் வீட்டுக்குத்தான் போனேன், அவர் சொன்ன தகவல்தான் இது , அவருதான் ஒரு வக்கீல் கிட்ட ஆலோசனைக்கு கூட்டிப்போனாரு” என்றான் சத்யன்

“ வக்கீல் என்ன சத்தி சொன்னாரு” என்று மான்சி ஆர்வமாக கேட்க 

சிலவிநாடிகள் தயக்கத்துக்குப் பிறகு “ அவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன், அவர் என்ன சொல்றார்னா,, மான்சி நம்ம கல்யாணம் ஒரு மைனஸ் பாயிண்ட் நமக்கு ,எப்படின்னா அவ எவ்வளவுதான் கெட்டு சீரழிஞ்சாலும் இன்னும் வேற எவனையும் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது அவளுக்கு லாபம் , இப்போ அவ நம்ம கல்யாணத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கறதால நாலு வயது மகன் இரண்டாவது திருமணம் செய்த அப்பாகிட்ட இருக்குறதை விட அவன் அம்மாகூட இருக்குறது தான் நல்லதுன்னு கோர்ட் நிச்சயம் சொல்லும்னு லாயர் சொல்றார் ,,ஆனா அவளைப் பற்றி, அவளோட நடத்தையைப் பற்றி நாம வழக்கு போட்டு, அவகிட்ட இருந்தா அவனோட வாழ்க்கை சீரழிஞ்சு போய்டும்னு வாதாடி மகனை நம்மகிட்ட ஒப்படைக்கச் சொல்லலாம், அதுவரைக்கும் நாம பொருத்துதான் ஆகனுமாம் மான்சி” என்று சத்யன் மெல்லிய குரலில் நடந்தவற்றை சொல்ல

அவனையே கூர்ந்துப் பார்த்த மான்சி “ அப்படின்னா நம்ம புள்ளைய கோர்ட்ல ஒப்படைச்சே ஆகனுமா சத்தி?” என்று கேட்கும்போதே அவளின் கண்கள் கண்ணீரை கொட்டிவிடும் போல் இருந்தது,

அவள் முகத்தை தன் கைகளில் ஏந்திய சத்யன் “ வேற வழியில்லை கண்ணம்மா,, நாம புள்ளைய ஒப்படைக்க மறுத்தா, நம்ம மேல சீட்டிங் கேஸ் போடுவாங்க,, நாம உள்ள போய்ட்டா அத்தோட நம்ம மகனை மறந்துட வேண்டியதுதான்,, இல்ல இல்ல மனுவை ஒப்படைக்க வேண்டிய இந்த நாலு நாளைக்குள்ள எதிர் வழக்கு பதிவு செய்யலாம்னு நெனைச்சாலும் , மாத்தி மாத்தி இப்படி வழக்கு போடுறதால , வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்வரை இரண்டு தரப்புக்கும் பொதுவா பிள்ளையை ஏதாவது விடுதியில் வச்சிருக்க கோர்ட்டே ஏற்பாடு செய்யவும் வாய்ப்பிருக்குன்னு வக்கீல் சொல்றாரு மான்சி, அது இன்னும் மோசம் கண்ணம்மா, மனுவோடு மனநிலையை ரொம்ப பாதிக்கும்னு வக்கீல் சொல்றாரு, அதனால் மனுவை கோர்ட்டில் ஒப்படைச்சே ஆகனும் மான்சி, இப்போதைய சூழ்நிலைக்கு அதுதான் வழி வேறு எந்த வழியும் கிடையாது,, வக்கீலும் மேனேஜரும் ரொம்ப நேரம் அலசி ஆராஞ்சு பார்த்துட்டாங்க கண்ணம்மா ” என்று சத்யன் தனது இயலாமையை வார்த்தைகளாக சொல்ல,, அந்த வார்த்தைகள் மான்சியின் நெஞ்சில் கூர் ஈட்டியாய் குத்தியது


சிறிதுநேரம் அங்கே ஒரு மயானத்தின் அமைதி நிலவ, இருவரும் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு தங்கள் மனதின் பலகீனத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்தனர்

அந்த அமைதியை மான்சியே கலைத்து “ அப்போ மனுவை அவ வீட்டுக்கு அனுப்புறதைத் தவிர வேற வழியில்லையா சத்தி?,, அப்புறம் அவனோட வாழ்க்கை என்னாகும் சத்தி, அவளோட நடத்தை அவன் மனசுல பதிஞ்சுட்டா என்னாகும் சத்தி” என்று மான்சி கலவரமாய் கேட்க

எதையோ சொல்லவந்து மறுபடியும் தயங்கிய சத்யனைப் பார்த்து “ என்ன விஷயம் சத்தி தயங்கமா சொல்லு, இதுக்குமேல இடியே விழுந்தாலும் நான் தாங்குவேன் சத்தி” என்று மான்சி அவன் கையைப்பிடித்து கெஞ்சினாள்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 6 Guest(s)