14-02-2019, 11:19 AM
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 7
மறுநாள் காலை சத்யன் தனது வீட்டுக்கு வந்தபோது, வீடே ஏதோ துக்கம் நடந்த வீடுபோல் இருந்தது, குளித்து முடித்து எப்போதும் கூந்தலில் பூவும் முகத்தில் மஞ்சள் குங்குமமும் மிளிர நடை பயிலும் மான்சி, இன்று ஒரு சோகப் பதுமையாக காட்சியளித்தாள்
சத்யன் குளித்துவிட்டு வரும்வரை யாரும் எதுவும் கேட்கவில்லை,, ஈரத்தலையை துடைத்தபடி வந்தவனை ஏறிட்ட மான்சியிடம் “ மான்சி சாப்பிட ஏதாவது இருக்கா,, ரொம்ப பசிக்குது” என்று சத்யன் பரிதாபமாக கேட்க
பட்டென்று முகம் மாற “ சத்தி நேத்து நீ சாப்பிட்டயா?” என்று கேட்டாள் மான்சி
அவள் முகத்தைப் பார்க்காமல் வேறுபக்கம் திரும்பிய சத்யன் “ இல்லம்மா, இங்கே அங்கேன்னு அலையவே சரியா இருந்துச்சு, ரெண்டு மூணு கூல்டிரிங்ஸ் தான் வாங்கி குடிச்சேன்” என்று சத்யன் தெம்பில்லாக் குரலில் கூறிய அடுத்த நிமிடம்
அவன் நெஞ்சில் சாய்ந்த மான்சி, “ ஏன் சத்தி நமக்கு மட்டும் இப்படி நடக்குது,, நீ ஏதாச்சும் சாப்பிட்டுருக்கலாம்ல ” என்று மான்சி குலுங்கி அழுதாள்
அவள் முதுகை வருடிய சத்யன் “ இங்க நீங்க எல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டிருக்க மாட்டீங்க, அப்புறம் எனக்கு மட்டும் எப்புடி மான்சி சாப்பிட மனசு வரும்” என்று சத்யன் உருக்கமாக பேச
அப்போது “ ஏய் மான்சி மொதல்ல தம்பிக்கு சோத்தைப் போடு, மத்ததெல்லாம் பொறவு பேசலாம்” என்று மான்சியின் அம்மா அதட்டலாக சொல்லிவிட்டு இடுப்பில் பேத்தியை வைத்துக்கொண்டு கண்ணில் வழிந்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்
உடனே சுதாரிப்புடன் விலகிய மான்சி சத்யனின் கையைப் பற்றி இழுத்தபடி சமையலறைக்கு போனாள், அவன் தோளை அழுத்தி உட்கார வைத்துவிட்டு “ இரு சத்தி சோத்தைப் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று போனாள்
சில நிமிடங்களில் கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தவள் அவன் எதிரே அமர்ந்து சாதத்தைப் பிசைந்து “டிபன் எதுவும் செய்யலை, அதனால காலையில மனுவுக்கு சாப்பாடு குடுக்க சோறு குழம்பே செய்துட்டாங்க அம்மா,, ம் வாயை திற சத்தி” என்று கையில் சோற்று உருண்டையுடன் அவன் வாயை நெருங்கினாள்
மனைவியின் கைச்சோற்றுக்காக வாயைத்திறந்த சத்யன், தொண்டை அடைக்க அடைக்க சோற்றுடன் கண்ணீரையும் சேர்த்து விழுங்கினான், அவசரஅவசரமாக அவனுக்கு சோற்றை ஊட்டிய மான்சி, அவனையும் மீறி அவன் கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்த்து “ வேனாம் சத்தி நீ அழுவாத, நீ அழுதா நா சுத்தமா தாங்கமாட்டேன், வேனாம்லே” என்று சொல்லும்போதே அவளுக்கும் கண்ணீர் மடைதிறக்க, சத்யன் அவள் கைகளை எடுத்து தன் கன்னங்களில் ஒற்றிக்கொண்டு குலுங்கினான்