screw driver ஸ்டோரீஸ்
"வே....வேணாம் மீனு.." நான் பலவீனமாக தலையாட்டி மறுத்தேன்.

அவள் அவ்வளவு சொல்லியும் நான் அவளது காதலை மறுக்க, மீனு துடித்துப் போனாள். முட்டிக்கொடிருந்த கண்ணீர் இப்பொது அவளது முகம் நனைத்து ஓட ஆரம்பித்தது. 

"இன்னும் உனக்கு புரியலைல..? நான் உன்னை எந்த அளவு லவ் பண்ணுறேன்னு உனக்கு புரியலைல..? எப்போடா புரிஞ்சுக்கப் போற..? சொல்லு... எப்போ புரிஞ்சுக்கப் போற..? ஒரு வேளை நான் என் உயிரை விட்டா...?"

அவள் சொல்லி முடிக்கும் முன்னே, நான் அவள் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தேன். மீனு அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடி விழுந்த கன்னத்தை பிடித்தவாறு என்னை நிமிர்ந்து பார்த்தாள். நான் பட்டென்று அவளை இழுத்து என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.  மீனுவும் இரண்டு கைகளாலும் என் இடுப்பை இறுக்கிக்கொண்டு, சுகமாக என் மார்பில் புதைந்து கொண்டாள். இப்போது என் கண்களிலும் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது.

"என்ன வார்த்தை சொல்ற மீனு.. நீ போய்ட்டா.. அப்புறம் நான் மட்டும் எப்படி இருப்பேன்..? எனக்கும் உன்னை புடிக்கும் மீனு.. என் உயிரை விட ரொம்ப புடிக்கும்.. என்னைக் கட்டிக்கிட்டு நீ கஷ்டப்படக்கூடாதுன்னுதான் நான் இப்படிலாம் நடந்துக்குட்டேன்.."

சொல்லிவிட்டு நான் அவளை மேலும் இறுக்கிக்கொண்டேன். மீனு சத்தம் போடாமல் என் மார்புக்குள் அடங்கியிருந்தாள். இருவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். எனது கண்ணில் இருந்து வடிந்த நீர் மீனுவின் நெற்றியை சுட்டிருக்க வேண்டும். மீனு பட்டென்று எழுந்து கொண்டாள். என் கண்ணீரை ஒற்றை விரலால் துடைதெடுத்தாள். என் முகத்தை இரு கையாளும் தாங்கிக் கொண்டாள். காதல் பொங்க என்னை பார்த்தாள்.

"உன்னை கட்டிக்கிட்டா நான் கஷ்டப்படுவேனா..? நீ இல்லாட்டாதாண்டா என் உயிரே போய்ட்ட மாதிரி கஷ்டப்படுவேன்.."

சொன்ன மீனு பட்டென்று தன் சிவந்த உதடுகளை என் உதடுகளோடு வைத்து பொருத்திக் கொண்டாள். என் மேலுதடு அவளது இதழ்களுக்குள் மென்மையாக அகப்பட்டுக் கொண்டது. நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மீனுவின் மேலிருந்து வந்த இனிய நறுமணமும், மெத் மெத்தென்ற அவளது உதடுகளின் மென்மையும், தேன் போல் இனித்த அவளது உதட்டு ஈரமும் என்னை அசையவிடாமல் செய்தன. நான் விலகத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

மேலே வானம் இருட்டிவிட்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி யாருமில்லை. கடலலைகள் மட்டும் அடங்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. நானும் மீனுவும் எங்கள் உதடுகள் சிக்கிக்கொண்ட நிலையில், உலகை மறந்து அமர்ந்திருந்தோம். எனது தடித்த உதடுகளை, மீனுவின் மெல்லிய பட்டு உதடுகள் உரசி தீமூட்டின. அவளுடைய எச்சில் துளிகள் தேனாய் என்னுள் பாய்ந்தன. தீயும், தேனும் ஒன்றாய் என்னை தாக்க, நான் மெய்மறந்து சிலையாக அமர்ந்திருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்று எனக்கு நினைவில்லை.

"இங்கே பாரு மாமு.. சூப்பர் பிட்டு ஓடினிகிது.."

என்று எங்கள் பின்னால் இருந்து வந்த சத்தத்தை கேட்டதும் இருவரும் விலகிக் கொண்டோம். நான் பின்னால் திரும்பி பார்த்தேன். ஒரு மூன்று பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் முகத்தையும், உடையையும் பார்த்தால் யோக்கியமானவர்களாக தெரியவில்லை. நான் எழுந்து கொண்டேன்.

"வா மீனு... கெளம்பலாம்.." நான் கைகளை நீட்டிக் கொண்டே சொன்னேன்.

மீனு என் கைகளை பற்றி எழுந்தாள். மணலை தட்டிவிட்டுவிட்டு, இருவரும் மெயின் ரோட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம்.

"இன்னா மாமு.. அவ்வளவுதானா...? சூப்பர் பிகரு... கொடுத்து வச்சவன்மா நீ..."

பின்னால் இருந்து அவர்கள் கேலி பண்ணி சிரித்ததை கண்டுகொள்ளாமல் நாங்கள் நடந்தோம். மீனு தன் விரல்களை என் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள். என் தோளில் சாய்ந்தவாறே என்னோடு சேர்ந்து நடந்து வந்தாள். வண்டி நிறுத்தியிருந்த இடத்தை அடைந்ததும்,

"வீட்டுக்கு போயிரலாமா மீனு..?" என்றேன்.

"ம்ம்ம்... இந்தா நீ வண்டி ஓட்டு..." மீனு சாவியை என்னிடம் கொடுத்தபடியே சொன்னாள்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-02-2019, 10:52 AM



Users browsing this thread: 6 Guest(s)