screw driver ஸ்டோரீஸ்
"ஏன்...? என்னைய புடிக்கலையா..? என்னை விட நல்ல பொண்ணா எதிர்பாக்குறியோ..?"

"ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லை மீனு... உனக்கென்ன குறைச்சல்...?"

"அப்புறம் என்ன...?"

"நான்தான் உனக்கு பொருத்தமா இருக்க மாட்டேன் மீனு.. நீ வேற யாராவது உனக்கு பொருத்தமா ஒருத்தனை .."

"நீ எனக்கு பொருத்தமா இல்லைன்னு யார் சொன்னா..?"

"ஏன்..? நான்தான் சொல்லுறேன்.."

"ஏன் அப்படி சொல்லுற..?"

"என்ன மீனு நீ..? நீ எவ்வளவு அழகா இருக்குற..? எவ்வளவு படிச்சிருக்க..? கை நிறைய சம்பாதிக்கிற..? நல்ல வசதியான வீட்டுப் பொண்ணு.. உனக்கேத்த மாதிரி யாரையாவது.... நீ என்னடான்னா என்னைப் போய் லவ் பண்ணிக்கிட்டு..." நான் படபடவென சொன்னேன்.

மீனு கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பின்பு தன் வலது கையை எடுத்து என் கன்னத்தில் வைத்தாள். என் முகத்தை அவள் பக்கமாக திருப்பி காதலுடன் பார்த்தாள்.

"உனக்கு என்னடா குறைச்சல்..? இந்த உலகத்திலேயே நீதான் என் கண்ணுக்கு அழகா தெரியுற.. படிப்பு என்ன பெரிய படிப்பு..? கவுரமான வேலைல இருக்குற.. கைநெறைய சம்பாதிக்காட்டாலும் ஒரு குடும்பத்தை நடத்துற அளவு சம்பாதிக்கிற.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. எந்த பொண்ணையும் ஏறெடுத்து பாக்க மாட்ட.. ஒரு ஆம்பளைக்கு இதை விட என்ன வேணும்..?"

மீனு இந்த உலகத்திலேயே நான்தான் சிறந்த ஆண் என்பது மாதிரி பேச, நான்  சற்று திணறிப் போனேன். அவளது கையை என் கன்னத்தில் இருந்து எடுத்து, என் முகத்தை விலக்கிக் கொண்டேன். தலையை குனிந்தபடி சொன்னேன்.

"அதெல்லாம் சரியா வராது மீனு.. வேணாம் ப்ளீஸ்..."

"லவ் பண்ணாம… வாழ்ந்து பாக்காம... அது சரியா வராதுன்னு,  நீயா எப்படி சொல்லுற..?"

"சொன்னா கேளு மீனு..."

"இப்போ என்ன பிரச்னை உனக்கு..?" என மீனு திடீரென கேட்டாள்.

"பிரச்னையா...? எனக்கு என்ன பிரச்னை..? எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை.."

"உனக்குத்தான் பிரச்னை.. உன் பிரச்னை என்னனு சொல்லு.. நான் உன்னைவிட அதிகமா சமபாதிக்கிறதுதான் பிரச்னையா..? நாளைக்கே நான் வேலையை ரிசைன் பண்ணிறவா...?"

மீனு அப்படி கேட்டதும் நான் திகைத்துப் போனேன்.

"ச்சே.. ச்சே... அதெல்லாம் வேணாம் மீனு..."

"பின்ன..? நான் பணக்கார வீட்டுப் பொண்ணா இருக்குறதுதான் உன் பிரச்னையா..? எல்லாத்தயும் விட்டுட்டு நாளைக்கே உன்கூட வந்துடவா..?"

"ஐயையோ... என்ன மீனு பேசுற நீ...? எனக்காக எதுக்கு நீ எல்லாத்தையும் விட்டுட்டு..."

"சொல்லுடா... நான் என்ன பண்ணனும்..? என்ன பண்ணுனா நீ என்னை லவ் பண்ணுவ..?"

மீனுவின் குரல் இப்போது தழுதழுக்க ஆரம்பித்தது. அவள் கண்களில் கண்ணீர் துளி ஒன்று திரண்டு, வழிந்து ஓட ரெடியாக இருந்தது. என் மனதுக்குள் அவள் மீதான காதல் பொங்கி பெருக ஆரம்பித்தது. என்ன பெண் இவள்..? என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னை இப்படி காதலிக்கிறாள்..? எனக்காக எல்லாவற்றையும் விட்டு விட தயாராயிருக்கிறாளே..?  எனக்காக இப்படி ஏங்கும் இவளுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்..? இவளை கண்ணீர் சிந்த வைத்ததை விட..? நினைக்க, நினைக்க எனக்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-02-2019, 10:51 AM



Users browsing this thread: 3 Guest(s)