screw driver ஸ்டோரீஸ்
ஐஸ் ஹவுசை தாண்டியதும் வண்டியை வலப்புறம் திருப்பி ஓரமாக நிறுத்தினாள். நான் இறங்கிக் கொண்டதும், வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, எதுவும் பேசாமல் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். என்ன செய்வது என்று புரியாமல் நான் அவளை பின்தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் நடந்த மீனு, கடலை நெருங்கியதும், மணல் வெளியில் தொப்பென்று அமர்ந்தாள். முழங்கால்களை கட்டிக் கொண்டாள். நானும் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தேன்.

மீனு கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. பிரம்மாண்டமான கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். நுரை நுரையாய் பொங்கிய அலைகளை முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பார்த்தாள். பின்பு திடீரென தன் கால்களுக்குள் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அவளது முகுது மேலும் கீழும் ஏறி இறங்க, அவளது விசும்பல் ஒலி கடல் சத்தத்தை மீறி என் காதில் வந்து விழுந்தது. இப்போது என்னால் தாங்க முடியவில்லை. என் இதயம் வலிக்க ஆரம்பித்தது. பதறிப்போய் அவளிடம் சொன்னேன்.

"ஐயோ...!! என்ன மீனு இது..? எதுக்கு இப்போ அழுகுற..? ப்ளீஸ் மீனு... அழாத...!!"

"போடா... அழறதுயும் அழ வச்சிட்டு... இப்போ அழக்கூடாதுன்னு சொல்றியா...?" மீனு கண்ணீர் வடியும் முகத்துடன் சொன்னாள்.

"ப்ளீஸ் மீனு... கண்ணைத் தொடச்சுக்கோ... அழாத... என்னால பாக்க முடியலை.."

"ஏண்டா இப்படி பண்ணுற..? எதுக்கு என்னை சித்திரவதை பண்ணுற..? கொஞ்ச நாள் முன்னால எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..? இப்போ உன்னால தெனம் தெனம் அழுகுறேன்.. ஏண்டா இப்படி பண்ணுற..? ஏன் என்னை இப்படி உயிரோட கொல்லுற..?"

"ப்ளீஸ் மீனு... கண்ணை தொடச்சுக்கோ...?"

"ஏன் இப்படிலாம் பண்ணுறேன்னு சொல்லு..."

"நீ முதல்ல அழறதை நிப்பாட்டு.. நான் சொல்லுறேன்.. கண்ணை தொடைச்சுக்கோ..  ப்ளீஸ்.."

நான் சொன்னதும் மீனு கண்களை துடைத்துக் கொண்டாள். கர்ச்சீப்பை எடுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நிமிர்ந்து என்னை பார்த்தாள்.

"ம்ம்... சொல்லு..."

நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். பின்பு மெல்ல பேச ஆரம்பித்தேன்.

"நீ... நீ... என்னை லவ் பண்றது எனக்கு தெரியும் மீனு... கண்டுபுடிச்சுட்டேன்.."

"ஆமாம்.. பெரிய உலக அதிசயத்தை கண்டு பிடிச்சுட்டாரு..? அதான் எல்லாருக்கும் தெரியுமே..? நான் உன்கிட்ட வாய் விட்டு சொன்னது இல்ல.. அவ்வளவுதான..? அதுக்கென்ன இப்போ..?"

"இது... இந்த லவ்... இது.. வேணாம் மீனு...?"

சொல்லிவிட்டு நான் மீனுவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-02-2019, 10:51 AM



Users browsing this thread: 12 Guest(s)