14-02-2019, 10:50 AM
"நீ சொன்னதுதான் ஈயத்தை காய்ச்சி ஊத்துன மாதிரி என் காதுல விழுந்துச்சே.. அதான் அவ சொல்றதுக்கு முன்னால நானே கட் பண்ணிட்டேன்.."
நான் அதற்கு மேலும் நடிப்பதில் அர்த்தமில்லை என்று அமைதியானேன். ரவி எதையும் நம்பமுடியாமல் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணன் அறைக்குள் இருந்து தலையை நீட்டி, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மீனு அடிப்பதை நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்தாள். அவளது பளிங்கு கண்களில் இருந்து முத்து முத்தாய் கண்ணீர் துளிகள் கிளம்பி, கன்னம் நனைத்து ஓட ஆரம்பித்தன. அவ்வப்போது மூக்கை உறிஞ்சி விசும்பினாள். நான் தொப்பென்று அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.
"ஏண்டா அசோக் இப்படிலாம் பண்ணுற..? சொல்லுடா... கேக்குறேன்ல...?" ரவி என்னை கொஞ்சம் அதட்டி கேட்டான்.
"ஒன்னும் இல்லைடா.. எல்லாம் சும்மாதான்..." என்றேன் நான் என்ன சொல்வதென்று புரியாமல்.
மீனு திரும்பி என்னை முறைத்தாள். ரவி சூழ்நிலையை சுமுகமாக்கும் நோக்கத்தோடு சொன்னான்.
"சரி மீனு.. அவன் எதுக்கோ அப்படி பண்ணிட்டான்... இனிமே அப்படிலாம் பண்ண மாட்டான்.. விடு... நீ தேவையில்லாம எமொஷனலாகாத.."
மீனு தன் கண்களை துடைத்துக் கொண்டாள். லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். மெல்ல நடந்து என் அருகில் வந்தாள். குனிந்திருந்த என் முகத்தை அவளுடைய வலது கையால் பிடித்து நிமிர்த்தினாள்.
"சரி.. வா.. போலாம்.." என்றாள் சாந்தமாக.
"எங்கே..?" நான் புரியாமல் கேட்டேன்.
"வான்னு சொன்னா வா.. கெளம்பு..." அவள் குரலில் கோபம் அதிகரித்தது.
"எனக்கு வேலை இருக்கு.."
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் மீனு "பளார்" என்று அறைந்தாள். ரவி ஓடிவந்து தடுத்தான்.
"என்ன மீனு..? இப்போதான சொன்னேன்..?" என்றான்.
"அவனை ஒழுங்கா என் கூட வர சொல்லு ரவி.. இல்லைனா நான் என்ன பன்னுவேன்னே எனக்கே தெரியாது.." மீனு ஆத்திரத்துடன் சொன்னாள்.
ரவி இப்போது என்பக்கமாக திரும்பினான்.
"ஏய்... எழுந்திரிடா.. கெளம்பு.. அவகூட போ.. போடா.. போய் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க.. இப்படி மனசுல இருக்குறதை சொல்லாம வச்சிக்கிட்டு.. எங்க உசுர வாங்காதீங்க..." ரவி எரிச்சலுடன் சொல்லியவாறு என்னை கிளப்பிவிட்டான்.
"நீ நட மீனு.. அவன் வருவான்..." என்று மீனுவை பார்த்து சொன்னான்.
மீனு மறுபடியும் ஒரு முறை என்னை முறைத்து பார்த்துவிட்டு, வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல் நானும் அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். வெளியில் வந்த மீனு அங்கு நிறுத்தியிருந்த அவளது ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள். ஸ்டார்ட் செய்தாள். நான் அருகில் சென்றதும்,
"ம்ம்.. உக்காரு.." என்றாள். நான் அமைதியாக பின் சீட்டில் அமர்ந்தேன்.
"இப்போ எங்க போறோம்..?" என்றேன் நான்.
"வாயை மூடிக்கிட்டு கம்முனு வா..." என்றாள் மீனு, கோபம் கொப்பளிக்கும் குரலில்.
சாலையில் ட்ராபிக் குறைவாகவே இருந்தது. சர்தார் படேல் ரோட்டில் ஏறியதும், மீனு வண்டியை விரட்டினாள். என் மேல் இருந்த கோபத்தை அவள் ஆக்ஸிலரேட்டர் மேல் காட்ட, ஸ்கூட்டி பறக்க ஆரம்பித்தது. அவளை கொஞ்சம் மெதுவாக ஓட்ட சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் நான் ஏதாவது பேசினால், நடுரோட்டிலேயே வண்டியை நிறுத்தி என்னை அடிப்பாள் போல தோன்றியது. அதனால் அமைதியாக பின்னால் உட்கார்ந்திருந்தேன்.