screw driver ஸ்டோரீஸ்
அவள் வாய்விட்டு என்னிடம் 'ஐ லவ் யூ' சொல்லாவிட்டாலும் என்னால் யூகிக்க முடிந்திருந்தது. நான் கொஞ்ச நாளாக அவளை அவாய்ட் பண்ணுவதற்கும் அதுதான் காரணம். அவளை பிடிக்காதா என்று கேட்கிறீர்களா? இந்த உலகத்திலேயே அவளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். பின்பு  ஏன் அவாய்ட் பண்ணுகிறேன் என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

மீனலோசனி மிக அழகாக இருப்பாள். 'மிக அழகு' என்றால்  நான் பார்த்த பெண்களிலேயே மிக அழகு. சந்தனத்தையும் ரோஜாவையும் கலந்து பூசியது போல ஒரு நிறம். பவுர்ணமி நிலவுக்கு பவுடர் போட்டு விட்டது போல ஒரு முகம். பளிங்கில் செய்த கோலி குண்டுகள் போல உருளும் இரண்டு விழிகள். ஆரஞ்சு சுளைகளில் தேனை ஊற்றியது போல இரு இதழ்கள். கோவில் சிற்பத்துக்கு புடவை கட்டிவிட்டது போல ஒரு தேகம். வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி ஒரு மீனலோசனி.

இன்னும் கேளுங்கள். அழகு மட்டும் இல்லை. நிறைய படித்திருக்கிறாள். வசதியான வீட்டுப் பெண். எக்கச்சக்க சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனால் தான் பெரிய பணக்காரி என்ற திமிர் துளியளவும் அவளிடம் இராது. அவளிடம் குறை என்று என்னால் ஒன்றை கூட சுட்டிக் காட்ட முடியவில்லை. நான் அவளை அவாய்ட் பண்ணுவதற்கு இதுதான் காரணம். ஒன்றுமே இல்லாத நான் எங்கே? எல்லாம் நிறைந்து  இருக்கிற அவள் எங்கே?

மீனுவின் நினைவுகள் என்னை வேலையில் கவனத்தை செலுத்தவிடாமல் இம்சை செய்தன. தவறு செய்ய வைத்தன. வேலையில் ஈடுபாடு இல்லாததால் அன்று சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பி விட்டேன். வீட்டை அடையும்போது மணி ஆறு ஆகப் போனது. வீட்டை நெருங்கிய போதுதான் அன்று இந்தியா கிரிக்கெட் மேட்ச் என்று ஞாபகம் வந்தது. இந்நேரம் முடிந்திருக்கும். ரிசல்ட் தெரியவில்லை.

"மச்சான்... மேட்ச் என்னாச்சுடா...?" என்று நான் உற்சாகமாக கத்திக்கொண்டேதான் கதவை திறந்தேன்.

கதவை திறந்ததும், ரவியுடன் எதிரே உட்கார்ந்து கேரம் ஆடிக் கொண்டிருந்த மீனுவை பார்த்ததும் நான் அப்படியே ஆஃப் ஆனேன். அமைதியாக தலையை குனிந்தபடி என் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மீனு ஓரக்கண்ணால் என்னையே பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அறைக்குள் நுழைந்தேன். கண்ணன் கட்டிலில் அமர்ந்து எதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். மகேஷ் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. நான் என் பேக்கை அறையில் வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டேன். முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். தலை வாரிக் கொண்டேன். மீண்டும் மெல்ல நடந்து வாசலுக்கு சென்றேன். செருப்பு மாட்டிக் கொண்டு,

"ரவி.. எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்குடா.. போயிட்டு வர்றேன்.." என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே,

"இப்போ ஒருத்தனுக்கு செருப்படி விழப் போவுது.."

என்று பின்னால் இருந்து மீனு சொல்ல, நான் திரும்பி பார்த்தேன். அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று எனக்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் எதுவும் புரியாதவன் மாதிரி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன்.

"யாருக்கு மீனு செருப்படி விழப் போவுது..?"

"ம்ம்ம்ம்... எதுவும் புரியாதவன் மாதிரி நடிக்கிறான் பாத்தியா.. அவனுக்கு.." என்று என்னை முறைத்தபடி சொன்னாள்.

"எ....என்ன சொல்ற மீனு..? எ....எனக்கு எதுவும் புரியலை.." 

அவ்வளவுதான்.. மீனு பட்டென சேரில் இருந்து எழுந்தாள். நேரே என்னை நோக்கி வந்தவள், "நடிக்காதடா.. நடிக்காதடா.." என்றவாறு என் கன்னத்தில் 'சப்.. சப்..' என்று அறைய ஆரம்பித்தாள். நான் இரண்டு கையாளும் அவள் அடிப்பதை தடுக்க முயன்றேன். ஆனால் அவள் அறைவதை நிறுத்தவில்லை. நான் என் முகத்தை மூடிக்கொள்ள, மீனு என் முதுகிலும் ரெண்டு அடி போட்டாள். ரவிதான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, ஆத்திரத்துடன் இருந்த அவளை பிடித்து தடுத்தான்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-02-2019, 10:49 AM



Users browsing this thread: 8 Guest(s)