Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: _105630980_41e9aaef-53fd-4dfa-977e-609c87b54ace.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சின்னத்தம்பியினை கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. மேலும் , முகாமில் யானை எந்த வித துன்புறுத்தலுக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக இருக்கும் என்று தமிழக வனத்துறை உறுதி அளித்தது.
இதன் அடிப்படையில். விவசாயிகள் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு யானையினை பிடிக்க உத்தரவு அளிக்கப்படுகிறது. அதே சமயம் யானைக்கும் எந்த பாதிப்பும், காயங்களும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவினை பிறப்பித்தனர்

சென்ற முறை சின்னத்தம்பியை பிடிக்கும் பொழுது அதன் தந்தம் உடைந்து, பின்புறம் காயங்கள் ஆகின. யானையினை பராமரிப்பது குறித்த முடிவுகளை தலைமை வனப் பாதுகாவலர் எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது.
வனத்துறையினரிடம் விசாரித்த பொழுது , யானையினை பிடிப்பதற்கான குழு தயாராக உள்ளது, உத்தரவு நகல் வந்தவுடன் பணிகளை ஆரம்பிப்போம். நீதிமன்றம் அளித்திருக்கும் விதிகளையும் கவனத்தில் கொண்டு இந்தப் பணிகள் நடக்கும் என்று தெரிவித்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 14-02-2019, 09:41 AM



Users browsing this thread: 89 Guest(s)