14-02-2019, 09:40 AM
யானையை ஏன் முகாம் யானையாக மாற்ற வேண்டும் என விரிவான அறிக்கையினை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்ததின் பேரில் இன்று , யானை ஆய்வாளர் அஜய் தேசாய் தயாரித்த ஆய்வறிக்கை தமிழ அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், தற்போது சின்னத்தம்பி யானை காட்டு யானையைப் போல் நடந்து கொள்வதில்லை.
மேலும், விளைநிலங்களில் உள்ள பயிர்களை சாப்பிட்டு நன்றாக பழகிவிட்டது. அதனை வனப்பகுதிகளுக்கு விரட்டினாலும், மீண்டும் விளை நிலங்களை நோக்கி வந்து விடும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் முகாமுக்கு கொண்டு செல்வதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது