14-02-2019, 09:37 AM
சூர்யாவால் விக்ரமையே தூக்கி எறிந்த பாலா – வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்.!
தமிழ் சினிமாவின் இன்று முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் விக்ரம். இன்று வரை இவர்களுக்கு இடையே ஏதோவொரு மனக்கசப்பு இருந்து வருகிறது.
இவர்கள் இருவரும் பாலா இயக்கத்தில் சேர்ந்து நடித்திருந்த திரைப்படம் பிதாமகன். இந்த படத்தில் நடித்த போது விக்ரம் சூர்யாவை விட அதிகமாக சம்பளம் வேண்டும் என பாலாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் பாலா விக்ரமையே தூக்கி விட்டு வேறொரு பிரபல நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்த நடிகருக்கு அப்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லை.
இதனால் தயாரிப்பாளர் சூர்யா, விக்ரம் நடிப்பதாக இருந்தால் நான் இந்த படத்தை தயாரிக்கிறேன் இல்லையென்றால் வேறொரு தயாரிப்பாளரை பார்த்து கொள்ளுங்கள் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார்.
இதனால் பாலா வேறு வழியில்லாமல் தான் மீண்டும் விக்ரமை அப்படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.