14-02-2019, 09:34 AM
* `மாயா பஜார்' படத்தில் வாத்தியங்கள் ஏதுமின்றி உருவாக்கப்பட்ட ட்ராக்கை இசைக்குழு பாடியது.
* நிகழ்வு முழுவதும் ராஜாவின் டியூன்களை இசைச்சுவை குறையாமல் வாசித்த ஹங்கேரியைச் சேர்ந்த லாஸ்லோ கோவாஜின் இசைக்குழுவினர், ஒன்றரை மாதங்களுக்கு மேல் இளையராஜாவின் 150-க்கும் மேற்பட்ட பாடல்களை வாசித்துப் பயிற்சி பெற்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.
* நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரனின் மகள் மதுவந்தி பேசுகையில், ``எனது அப்பா இளையராஜா அங்கிளோட 45 வருட கால நண்பர். நான், எனது மகன் என மூன்று தலைமுறை ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே ஒரு இசையமைப்பாளர், ராஜா அங்கிள் மட்டும்தான்" என்று கூறி, அவருக்கு மூகாம்பிகை புகைப்படத்தையும், ஏலக்காயால் செய்யப்பட்ட செங்கோலையும் பரிசாகக் கொடுத்தார்.
தனது இசையின் மூலம் ஒவ்வொருவரின் நெஞ்சங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் ராஜா, அப்போதும் இப்போதும் எப்போதும் ராஜாதான்!