14-02-2019, 09:33 AM
* ஈரோட்டில் முதல்முறையாக நடைபெறும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, அதுவே ஈரோட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
* மாலை தொடங்கவிருக்கும் நிகழ்விற்கு மதியம் முதலே மக்களின் கூட்டம் அரங்கை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியது. அரங்கம் நிறைந்த பின்பும் அரங்கத்தின் வெளியே இசைஞானியைக் காண்பதற்காகக் கூட்டம் அலைமோதியது.
* இரவு 7 மணியளவில் ராஜா மேடையேறியபோது கரகோஷம் விண்ணைப் பிளந்தது.* ராஜாவின் `ஜனனி ஜனனி' பாடலைத் தொடர்ந்து, `நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற `ஓம் சிவோஹம்' பாடலைப் பாடினாா், ஹரிசரண். பிறகு மேடையேறினார், பாடகி சித்ரா. `சித்ரா உலகமெல்லாம் சுத்தறா' என ராஜா கிண்டலடித்தார். சித்ரா, `மாலையில் யாரோ' பாடலைப் பாடினார்.
* இவர்களைத் தொடர்ந்து மனோ, மதுபாலகிருஷ்ணன், விபாவரி, இளையராஜாவின் மகள் பவதாரணி, முகேஷ், உஷா உதூப், அனிதா ஆகியோர் இளையராஜாவின் பாடல்களைப் பாடினர்.
* மனோவும், மதுபாலகிருஷ்ணனும் இணைந்து பாடிய `காட்டுக்குயிலு மனசுக்குள்ளே' பாடல்தான், நிகழ்ச்சியின் டாப் ஸ்கோரிங்.
* நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் பாடகி சித்ராவிடம், `நீ எப்போ என்கிட்ட வந்த சித்ரா?' என்று ராஜா கேட்க, `1984-ல் வந்தேன் சார்' என்றார். தொடர்ந்து, `முதலில் எந்தப் பாட்டுமா என்கிட்ட பாடின?' என்று கேட்டார். முதலில் பாடிய `எந்த செளக்ய மனிமே' என்ற மலையாளப் பாடலைப் பாடியவர், அதற்குப் பிறகு `பூஜைக்கேற்ற பூ' பாடலையும் பாடினார்.