Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
``இளையராஜா குழுவில் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர்...." - 'எப்போதும் ராஜா' நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

ஈரோட்டில் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சுவாரஸ்யங்கள்.
[Image: 149593_thumb.jpg]
``என் வயதினருக்குத் தெரியும், தமிழில் உள்ள இசைப்பிரியர்கள் வடக்கே நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணைபுரத்திலிருந்து  ஆர்மோனியத்துடன் ஒரு புயல் வந்து, `அன்னக்கிளி'யில் அடித்தது. இளையராஜாவின் இசையில் நடனம் ஆடியவர்கள், பாடலைப் பாடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவரது இசைக் கச்சேரியில் வாத்தியம் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகன் நான்தான்!" - இவை ஈரோட்டில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் `எப்போதும் ராஜா' நிகழ்ச்சியில் நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரன் பேசியவை.

பல கோடி மக்களின் நெஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு குரல், பல இசையமைப்பாளர்களுக்கு எழுச்சியாக இருக்கும் ஒரு குரல், அதுதான் இளையராஜாவின் குரல். வெகு நாள்களாக ரேடியோவில், தொலைக்காட்சியில் மட்டுமே இளையராஜாவை ரசித்து வந்த ஈரோடு மாநகர மக்கள், சமீபத்தில் நடைபெற்ற `எப்போதும் ராஜா' இன்னிசை நிகழ்ச்சியில் அவரை நேரில் கண்டு இசை மயக்கத்தில் ஆழ்ந்தனர். ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்த இந்த இசைநிகழ்ச்சி இரவு 7 மணியளவில் ராஜாவின் `ஜனனி ஜனனி’ பாடலுடன் தொடங்கியது. தொடக்கத்திலேயே ஜனனத்தைக் கொள்ளை கொண்ட பின்பு, பாடல் முடிந்தவுடன் பேசிய இளையராஜா, ``ஒருமுறை ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தபோது என் காலடித்தடம் படாத பட்டி தொட்டி இருக்காது. அப்படியாக உங்கள் ஊரிலும் இசை நிகழ்ச்சியை நடத்துவேன் என்று கூறினேன். அன்று உங்களிடம் கொடுத்த வாக்கை இன்று காப்பாற்றியுள்ளேன்" என்றார். விழாவின் ஹைலைட்ஸ் இதோ...
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 14-02-2019, 09:32 AM



Users browsing this thread: 12 Guest(s)