Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சம்பவம் நடந்தவுடன் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்தோம். ஆனால் முக்கால் மணி நேரம் கடந்தபிறகுதான் போலீஸார் அங்கு வந்தனர். கால்டாக்ஸி டிரைவர்கள் குவிந்ததால் காவலர் மஹாவீர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவரை நாங்கள் விடவில்லை. பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனடியாக சம்பவ இடத்திலேயே போலீஸார் கருவி மூலம் கண்டறிவார்கள். ஆனால், மஹாவீர், குடிபோதையில் தள்ளாடியபோதும் அவருக்கு எந்தவித பரிசோதனையும் போலீஸார் நடத்தவில்லை" என்றார். 
 [Image: CALL_TAXI_1_12414.jpg]
இதுகுறித்து கால்டாக்ஸி டிரைவர் ரஞ்சித்குமார் போலீஸாரிடம் கொடுத்த புகாரில், ``நான், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, பெரிய செவலை போஸ்ட், துளங்கம்பட்டு, பிள்ளையார்கோயில் தெருவில் குடியிருந்துவருகிறேன். சம்பவத்தன்று நான், வாடிக்கையாரை ஏற்ற பழவந்தாங்கல் யு டர்ன் அருகே காரில் வந்தபோது பைக்கில் சென்ற நபர், காரின் மீது மோதுவதுபோல வந்தார். பிறகு அந்த நபர் காரின் முன்னால் பைக்கை நிறுத்திவிட்டு என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். காரின் கதவைத் திறந்து என்னைத் தாக்கினார். குடிபோதையில் இருந்த அந்தநபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 
 இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கால்டாக்ஸி டிரைவரை காவலர் மஹாவீர் தாக்கியதாகக் கூறி கால்டாக்ஸி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிரைவர் ரஞ்சித்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 13-02-2019, 05:05 PM



Users browsing this thread: 98 Guest(s)