13-02-2019, 05:04 PM
சிறகுகள் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் சபரிநாதன், போலீஸ் எனக்கூறியவரிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ``கால்டாக்ஸி டிரைவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. சமீபத்தில்தான் கால்டாக்ஸி டிரைவர் ராஜேஸை அண்ணாநகர் பகுதியில் போலீஸார் அசிங்கமாகப் பேசியதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார். அதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்குள் வேளச்சேரி மேம்பாலம் பகுதியில் கால்டாக்ஸி டிரைவர் ரஞ்சித் குமாரை மஹாவீர் என்ற காவலர் தாக்கியுள்ளார். மஹாவீர், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்தபோது காவலர் மஹாவீர், போதையில் இருந்தார். அவரை பள்ளிக்கரணை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். காவல்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்