Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`நான் போலீஸ், அப்படித்தான் ஓட்டுவேன்' - கால்டாக்ஸி டிரைவருடன் மல்லுக்கட்டிய காவலர்

[Image: CALL_TAXI__12308.jpg]
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நள்ளிரவில் கால்டாக்ஸி டிரைவருக்கும் காவலர் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், கால்டாக்ஸி டிரைவரை அடித்ததால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 
சென்னைப் பழவந்தாங்கலிருந்து மேடவாக்கம் செல்வதற்காக வேளச்சேரி மேம்பாலம் அருகில் பைக்கில் ஒருவர் இரவு 11 மணியளவில் சென்றார். அப்போது, அவ்வழியாக கால்டாக்ஸி ஒன்று வந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வளைவில் காரும் பைக்கும் திரும்பும்போது ஒன்றோடு ஒன்று மோதுவதுபோல சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் சென்றவர், கால்டாக்ஸியை வழிமறித்தார். பிறகு கால்டாக்ஸி டிரைவருடன் அந்த நபர் வாக்குவாதம் செய்தார். 


 வாக்குவாதம் முற்றிய நிலையில் கால்டாக்ஸி டிரைவரை, பைக்கில் வந்தவர் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அவ்வழியாக வந்த இன்னொரு கால்டாக்ஸி டிரைவர், நடந்த சம்பவத்தைப் பார்த்து பைக்கில் வந்தவரை தட்டிக் கேட்டுள்ளார். அவரையும் பைக்கில் வந்தவர் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, `நான் போலீஸ், நீ எப்படி என்னுடைய பைக்கில் மோதுவதுபோல காரை ஓட்டலாம்' என்று கூறியுள்ளார். அதற்கு கால்டாக்ஸி டிரைவர் `நான் சரியாகத்தான் காரை ஓட்டினேன். நீங்கள்தான் போதையில் காருக்குள் விழுவதைப்போல வந்தீர்கள்' என்று பதிலளித்துள்ளார். அதற்கு பைக்கில் வந்தவர்,` நான் அப்படிதான் வண்டி ஓட்டுவேன்' என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் கால்டாக்ஸி டிரைவரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் கால்டாக்ஸி டிரைவர்கள் வாட்ஸ்அப்பில் பரவியது. இதனால் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட கால்டாக்ஸி டிரைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 13-02-2019, 05:03 PM



Users browsing this thread: 26 Guest(s)