screw driver ஸ்டோரீஸ்
"நைட்டு நெறைய படிக்கனும்னு ப்ளான் வச்சிருந்தேன் வசு. இந்த சிவா நேத்துன்னு பாத்து ஒரு ப்ளூபிலிம் எடுத்துட்டு வந்தான். அதைப் பாத்துட்டு படிக்கிறதை மறந்துட்டேன்"

வசு கொஞ்ச நேரம் என்னையே வித்தியாசமாய் விழிகள் விரிய பார்த்தாள்.

"அடப்பாவி. அதெல்லாம் பாப்பியா நீ?"

"எப்போவாவது வசு"

எனது பதிலில் வசுவுக்கு கோபம் வந்தது. அது அவளுடைய குரலில் தெரிந்தது.

"எப்போவாவது பாக்குறது சரி. நாளைக்கு இண்டர்வியூவை வச்சுக்கிட்டு, இன்னைக்கு நைட்டு உக்காந்து அந்த கருமத்தை பாக்கணுமா?"

"பாக்கக் கூடாதுன்னுதான் நெனச்சேன் வசு. ஆனா கண்ட்ரோல் பண்ண முடியலை"

"கண்ட்ரோல் பண்ண முடியலையா? இதையே கண்ட்ரோல் பண்ண முடியலைன்னா, லைஃப்ல வேற எதை கண்ட்ரோல் பண்ணப் போற?"

"உனக்கு புரியாது வசு. எல்லாரும் உக்காந்து அதைப் பாக்குறப்போ என்னால ஒரு மூலைல உக்காந்து படிக்க முடியலை. நான் ஆம்பளைன்ற பீலிங் வருது. பொம்பளைன்னா எப்படி இருப்பான்னு பாக்க மனசு துடிக்குது. எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் மனசை கண்ட்ரோல் பண்ண முடியலை"

"முடியலைன்னா செருப்பால அடிக்கணும். நீ.. நீ... போடா. நீ இப்படியே பண்ணிட்டு திரி. உனக்கு ஒரு வேலையும் கெடைக்காது. இப்படியேதான் இருக்கப் போற"

வசு ஆத்திரம் கொப்பளிக்க சொல்ல, எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. வேலை கிடைக்காத ஏமாற்றம், இயலாமை, ஆத்திரம் எல்லாம் சேர்ந்து என் கண்ணை மறைத்தது.

"ஆமாம். எனக்கு வேலையே கெடைக்காது. இப்படியேதான் இருக்கப் போறேன். நீ உன் வேலையே பாத்துட்டு போ"

நான் கோபமாய் பெருங்குரலில் கத்த வசு ஆடிப் போனாள். அவள் சற்று கோபம் தணிந்து இறங்கி வந்தாள். மெல்லிய குரலில் பேசினாள்.

"ஏண்டா புரிஞ்சிக்காம பேசுற? நான் எதுக்கு கவலைப் படுறேன்னு...."

"எனக்கு புரியுது வசு. உன் கவலை என்னன்னு எனக்கு புரியுது. என்னடா இப்படி ஒரு பொறுப்பில்லாதவனை லவ் பண்ணி தொலைச்சுட்டோமேன்னு கவலைப் படுற. நாளைக்கு இவனை கல்யாணம் பண்ணிட்டு எப்படி வசதியா வாழப் போறோம்னு கவலைப் படுற. அதானே? நீ ஒண்ணும் ரொம்ப கவலைப் பட வேணாம் வசு. நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன். இப்பக் கூட 'என்னைப் புடிக்கலை'ன்னு சொல்லிட்டு நீ கெளம்பலாம். எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. உன் அப்பா பாக்குற மாப்பிள்ளையோ, இல்லை உனக்கு புடிச்ச மாதிரி நல்...ல வேலைல இருக்குற மாப்பிள்ளையோ கல்யாணம் பண்ணிக்கோ. நான் எதுக்கு உனக்கு?"

நான் படபடவென்று பொரிந்து தள்ள, வசு பேச்சிழந்தவள் ஆனாள். எல்லாம் நான்தான் பேசுகிறேனா என்று நம்ப முடியாதவள் போல, என் முகத்தையே விழிகள் விரியப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்து ஒரு துளி நீர் ஓடி வர ஆரம்பித்தது. பின்னர் நிறைய துளிகள். கண்ணீர் ஆறாய் ஓட ஆரம்பித்தது. அவளது உதடுகள் துடித்தன. விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

அவள் அழ ஆரம்பித்ததும்தான் நான் செய்த தவறு எனக்கு உரைத்தது. இவள் என்ன தவறு செய்தாள்? என்னை காதலித்ததை தவிர. எனக்காக எவ்வளவு உருகுகிறாள்? எனக்காக எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் மனதுக்குள்? எனது நலனுக்காகத்தானே கோபப்பட்டாள்? அதைக்கூட புரிந்து கொள்ளாமல் இப்படி காயப் படுத்திவிட்டேனே? எப்படி துடித்து போய் இருப்பாள்? எனக்கு வசு மீது கோபம் இருந்த இடத்தை இப்போது காதல் வந்து நிறைத்துக் கொண்டது. நான் அவளது கையை பிடித்து எனது கைகளுக்குள் வைத்துக் கொண்டேன்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 13-02-2019, 11:28 AM



Users browsing this thread: 9 Guest(s)