screw driver ஸ்டோரீஸ்
மறுநாள் பிற்பகல் மணி 3.10

வீட்டுக்குள் எரிச்சலாக நுழைந்த நான் ஷூவை உதறினேன். கழுத்தில் கட்டியிருந்த டையை அவிழ்த்து தூர எறிந்தேன். சோபாவில் உட்கார்ந்து கொண்டு தலையை பிடித்துக் கொண்டேன். இந்த வேலையும் போச்சு. இனி அடுத்த இண்டர்வியூ எப்போதோ? அருமையான வேலை வாய்ப்பு எனது சபல புத்தியால் கை நழுவிப் போனதாக தோன்றியது. ச்ச்சே. என் மேலே எனக்கு எரிச்சலாக வந்தது. மனதை அலைபாய விட்டுவிட்டு இப்போது எரிச்சல்பட்டு ஆகப் போவது என்ன? எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே நான் அமர்ந்து இருந்த சிறிது நேரத்தில் வசு உள்ளே வந்தாள்.

"இண்டர்வியூ என்னடா ஆச்சு?"

கதவை சாத்திவிட்டு எனக்கு அருகில் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள். நான் எதுவும் பேசாமல், எனது வலது கட்டை விரலை கீழே கவிழ்த்துக் காட்டினேன்.

"அப்படின்னா என்ன அர்த்தம்?"

"ம்ம்ம்...? ஊத்திக்கிச்சுன்னு அர்த்தம்"

"ஊத்திக்கிச்சா? ஏன், என்ன ஆச்சு?"

"இண்டர்வியூ சரியாப் பண்ணலை"

"ஏன்?"

"நைட்டு ஒழுங்கா படிக்கலை"

"அதான் ஏன்னு கேக்குறேன்?"

எனக்கு வசு மீது எரிச்சலாக வந்தது. நானே வேலை கை நழுவிப் போன ஆத்திரத்தில் இருக்கிறேன். இவள் வேறு துருவி துருவி கேட்டுக்கொண்டு.

"எல்லாத்தையும் உன்கிட்ட வெளக்கி சொல்லிக்கிட்டு இருக்கணுமா?"

நான் ஆத்திரத்தில் கத்தினேன். வசு எனது கோபத்தில் அதிர்ந்து போனாள். எனது முகத்தையே பயத்துடன் பார்த்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. பின்பு எனக்கு நெருக்கமாய் வந்தவள், எனது கன்னத்தில் கைவைத்தாள். எனது முகத்தை அவளை நோக்கி திருப்பினாள். என் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தமிட்டாள்.

"என்ன ஆச்சுன்னுதானடா கேட்டேன். எதுக்கு இப்படி கோவப்படுற? அது கூட நான் கேக்கக் கூடாதா?"

அவள் மெல்லிய குரலில் பரிதாபமாய் கேட்கவும், நான் இளகிப் போனேன். எனது கோபம் போன இடம் தெரியவில்லை. வசு மீது இரக்கம் வந்தது. நான் தவறு செய்து விட்டு இவள் மேல் பாய்கிறேனே?

"ஸாரி வசு" என்றேன் நான் மெல்லிய குரலில் தலையை குனிந்தவாறே.

"ம்? ஸாரிலாம் எதுக்கு? என்ன ஆச்சு. ஏன் படிக்கலை?"

"படிக்கணும்னுதான் இருந்தேன். எல்லாம் இந்த சிவா நாயால வந்தது"

"அவன் என்ன பண்ணுனான்?"

வசு குழப்பமாய் எதுவும் புரியாமல் கேட்டாள். எனக்கும் குழப்பமாய் இருந்தது. இவளிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்னை தவறாக நினைத்து விடுவாளோ?

"அது ..."

"சொல்லுடா. சிவா என்ன பண்ணுனான்?"

வசு பதில் தெரிந்து கொள்வதில் குறியாய் இருந்தாள். கொஞ்ச நேரம் தயங்கிய நான் பின்பு அவளிடம் சொல்லி விடுவதென தீர்மானித்தேன். ஒரு பெருமூச்சை வெளியிட்டு சொல்ல ஆரம்பித்தேன்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 13-02-2019, 11:27 AM



Users browsing this thread: 12 Guest(s)