screw driver ஸ்டோரீஸ்
"சரி. இண்டர்வியூவுக்கு ஒழுங்கா ஒக்காந்து ப்ரிப்பேர் பண்ணு. நான் வர்றேன். சரியா?"

"போறதுக்கு முன்னால ஒண்ணு கொடுத்துட்டு போகலாமில்ல?" நான் குரலை தாழ்த்தி கேட்டேன்.

"என்ன வேணும்?" என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து.

"பூஸ்ட்..." நான் ஒற்றை விரலால் எனது உதடுகளை தடவிக் கொண்டே கேட்டேன்.

"உதைதான் கெடைக்கும். அதான் நேத்து தந்தேனே? இந்த வார கோட்டா முடிஞ்சு போச்சு. இனிமே அடுத்த வாரந்தான்"

"எது? நேத்து நீ தந்ததா? வச்சதும் தெரியாம, எடுத்ததும் தெரியாம, உன் அப்பா வர்ரார்ரு ஓடிட்ட. அதெல்லாம் கணக்குல வராது"

"ம்ஹூம். அதெல்லாம் கெடயாது"

"ப்ளீஸ் வசு. ஒண்ணே ஒண்ணு"

"ம்ஹூம்"

"கெஞ்ச வைக்காத வசு. ப்ளீஸ். நீ தந்தா நான் தெம்பா உக்காந்து படிப்பேன். ப்ளீஸ். ப்ளீஸ்" நான் கெஞ்ச ஆரம்பித்தேன்.

"இல்லைன்னா இல்லைதான்"

"என் செல்லம்ல. ப்ளீஸ்டி. ஒண்ணே ஒண்...."

நான் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போதே வசு எனது உதடுகளை கவ்வியிருந்தாள். அவளது தடித்த உதடுகளுக்குள் எனது உதடுகள் அகப்பட்டுக் கொண்டன. ஈரமாய் இருந்த வசுவின் இதழ்கள் எனக்குள் தேன் பாய்ச்சின. தே...ன். இல்லை இல்லை. தேனினும் இனிய இதழ்தேன். அருந்தினேன். கண்கள் மூடி. உலகை மறந்து. எங்களது நான்கு உதடுகளும் நெடுநேரம் ஒன்றை ஒன்று மாறி மாறி உரசி காதல் கதை பேசிக் கொண்டு இருந்தன. இருவரும் சிலையாய் நின்றிருந்தோம். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. வசு சுதாரித்து தனது உதடுகளை விலக்கிக் கொள்ள முயன்றபோது, நான் அவளது உதடுகளை பிரிய மனமில்லாமல், அவளது உதடுகளோடு, எனது உதடுகளை செலுத்தினேன். வசு வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து தன் உதடுகளை காப்பாற்றிக் கொண்டாள். நான் கண்களை திறந்தேன். ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டேன். வசு கண்களில் குறும்புடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"நல்லா இருந்துச்சா?" என்றாள்.

"ம்"

"போய் படி"

"ம்"

வசு திரும்பி வாசலை நோக்கி நடந்தாள். கதவை திறந்து, தலையை மெல்ல வெளியே நீட்டி, யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் போவதையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு கதவை அடைத்து விட்டு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். வயிறும் மனதும் நிரம்பியிருக்க, பாடத்தில் எளிதாக கவனத்தை செலுத்த முடிந்தது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 13-02-2019, 11:26 AM



Users browsing this thread: 7 Guest(s)