screw driver ஸ்டோரீஸ்
"காசு இல்லைன்னா என்கிட்டே சொல்லக்கூடாதாடா?"

"ஏன் நீ தரப் போறியா? அன்னிக்கு காசு கேட்டப்ப அடிக்க வந்த?"

"ஆமாம். இவர் தண்ணியடிக்க காசு கேப்பாரு. அடிக்காம? சிரிச்சுக்கிட்டே காசு தரணுமாக்கும்? அதுவும் இதுவும் ஒண்ணா? போ. போய் ரூம்ல இரு. நான் வர்றேன்"

"காசு கொண்டு வரப் போறியா?"

"இல்லை. சாப்பாடு"

வசு தனது பெரிய கண்களால் குறும்பாய் சிரித்து விட்டு, தனது வீட்டுக்குள் புகுந்து கொண்டாள். நான் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து டிவி போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். வசு எனக்கு காதலியாய் கிடைத்தது நான் முன்பிறவியில் செய்த புண்ணியம் என்று தோன்றியது. எவ்வளவு அழகான தேவதை அவள்? அவள் நினைத்தால் எத்தனை ஆண்கள் அவள் பின்னால் ஓடி வருவார்கள்? இவளோ ஒன்றும் இல்லாதவனான என்னை மருகி மருகி காதலிக்கிறாள். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போய் விடுகிறாள்.

ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். வசு பரபரப்பாய் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தாள். நுழைந்ததும் உடனடியாய் கதவை தாழிட்டாள். திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தபடியே நடந்து வந்தாள். புடவைக்குள் மறைத்து வைத்திருந்த சாப்பாட்டு பாக்ஸை வெளியே எடுத்தாள். திறந்து என் முன்னால் வைத்தாள்.

"ம். சாப்பிடு. ரொம்ப பசிக்குதா? கொஞ்சந்தான் எடுத்துட்டு வந்தேன். பாக்ஸ் அவ்வளவுதான் புடிக்குது"

"பரவாயில்லை வசு. இது போதும். எனக்கும் ரொம்ப பசிக்கலை" பொய் சொன்னேன்.

"சாம்பாரும் சாதமும். நானே வச்சேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு"

"நீ சமச்சதா? நல்லாத்தான் இருக்கும்"

நான் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டேன். பிரம்மாதமாய் சமைத்து இருந்தாள் வசு. பசிக்கு தேவாமிர்தமாய் தெரிந்தது.

"வா...வ். சூப்பரா இருக்கு வசு. நல்லா சமைப்ப போல இருக்கே?"

"பொய்"

"நெஜமாத்தான் வசு. சாம்பார் நல்லா இருக்கு. செம டேஸ்ட்டா இருக்கு"

"ம்ம்"

"அப்பா!! எனக்கு கவலையே இல்லை. எனக்கு வொய்ஃப்பா வரப் போறவளுக்கு நல்லா சமைக்க தெரிஞ்சு இருக்கு"

"கல்யாணம் மட்டும் ஆகட்டும். உனக்கு நல்லா வித விதமா சமைச்சு போட்டு, உன்னை குண்டாக்குறேன்"

"குண்டாலாம் ஆக வேணாம்பா. நான் இப்படியே இருக்கிறேன்"

"ஹஹா. நல்லா எடுத்து போட்டு சாப்பிடுடா"

சாப்பிட்டுக்கொண்டு இருந்த நான் திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டேன்.

"நீ சாப்பிட்டியா வசு?"

"நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன். நீ சாப்பிடு"

"ப்ளீஸ் வசு. நீயும் சாப்பிடு"

"வேணாண்டா. சொன்னா கேளு. நீ சாப்பிடு"

"ஒரே ஒரு வாய் வசு. ப்ளீஸ். ஒரே ஒரு வாய்"

சொல்லிவிட்டு நான் ஒரு வாய் சோறை எடுத்து நீட்ட, வசு தன் வாயை திறந்து வாங்கிக் கொண்டாள். கண்களில் காதல் பொங்க நான் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். புரை ஏறியபோது தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தாள். சாப்பிட்டதும் பாக்ஸை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு, பாத்ரூம் சென்று கழுவிக் கொண்டாள். நானும் கைகழுவிவிட்டு வந்தேன். கை துடைக்க புடவை தலைப்பை நீட்டினாள். துடைத்துக் கொண்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 13-02-2019, 11:25 AM



Users browsing this thread: 13 Guest(s)