13-02-2019, 11:25 AM
"என்னடா இப்போதான் எழுந்தியா?"
"ம்"
"சரியான கும்பகர்ணன் தம்பிடா நீ. எப்படிதான் பதினோரு மணி வரை தூங்குறியோ?"
"நைட்டு ரொம்ப நேரம் படிச்சேன் வசு. தூங்க லேட் ஆயிருச்சு. அதான் காலையில நல்லா அசந்து தூங்கிட்டேன்"
"பொய்.."
"நெஜமா.. நாளைக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அதுக்குதான் படிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த வேலையை கண்டிப்பா வாங்கியாகனும் வசு"
"ம்ம். நல்ல கம்பனியா?"
"பெரிய கம்பனி வசு. ஜாப் கெடைச்சா அங்கேயே செட்டில் ஆயிறலாம்"
"ஓஹோ. அப்ப ஒழுங்கா படி. ஊர் சுத்தாத. புரியுதா?"
"ம்ம். புரியுது. இன்னும் நெறைய படிக்க வேண்டி இருக்கு வசு. இன்னைக்குதான் படிக்கணும். அது சரி. நீ எங்க கெளம்பிட்ட?"
"மெடிக்கல் வரை போறேன். தாத்தாவுக்கு கொஞ்சம் மெடிசின் வாங்கணும்"
"ஓ. சரி வசு. நீ கெளம்பு. யாராவது பாத்துரப் போறாங்க"
நான் சொன்னதும் வசு கிளம்ப, நான் அவளுக்கு எதிர் புறம் நடந்தேன். வசு என்கிற இந்த வசுமதி என்னை காதலிக்கிறாள். உயிருக்குயிராய். எங்கள் பிளாட்டுக்கு எதிர் பிளாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறாள். என் மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு. மிக அழகாக இருப்பாள். திரைப்பட நடிகை போல கவர்ச்சியாய் இருப்பாள். என்னிடம் என்ன பிடித்து இருக்கிறது என்று என்னை காதலிக்கிறாள் என்பதுதான் எனக்கு புரியவில்லை. என்னிடம் பெரிதாய் அழகு கிடையாது. பணம் கிடையாது. நல்ல வேலை கிடையாது. சிரிக்க சிரிக்க பெண்ணிடம் இளித்துக் கொண்டு பேசத் தெரியாது. எதைப் பார்த்து என்னை காதலிக்கிறாள்? ஒரு நாள் அவளிடமே இந்த கேள்வியை கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
மேலே எங்கள் பிளாட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு எழுந்து குளித்துவிட்டு வந்தபோது பசி வயிற்றை கிள்ளியது. சரி சாப்பிட போகலாம் என்று பையை தடவியபோது, நான்கு ரூபாய்தான் கிடைத்தது. நண்பர்கள் கழட்டிப் போட்ட சட்டைகளில் துழாவிய போது, எல்லாப் பையும் காசில்லாமல் இருந்தது தெரிந்தது. எரிச்சலாய் வந்தது. இனி அவர்கள் மாலை வீட்டுக்கு வந்ததும்தான் சாப்பாடு. கீழே இறங்கி மீண்டும் ஒரு டீ, தம் அடித்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன். கொஞ்ச நேரம் பசியை தாக்கு பிடிக்கலாம். செருப்பு மாட்டிக் கொண்டு கிளம்பியபோது, வசு எதிர்ப் பட்டாள்.
"என்னடா சாப்பிட்டியா?"
"இன்னும் இல்லை வசு. சா....சாப்பிடத்தான் போ...போயிட்டு இருக்கேன்"
"என்ன இழுக்குற? சாப்பிட கைல காசு வச்சிருக்கியா?"
"ம்ம்ம். இ.....இருக்கு வசு"
"பொய். உண்மையை சொல்லு"
"காலையில சிவாகிட்ட பணம் வாங்கனும்னு நெனச்சுருந்தேன். நல்லா அசந்து தூங்கிட்டேன்"
"அப்போ கைல காசு இல்லை?"
"இ....இல்லை"
"அப்புறம் எங்க கெளம்பிட்ட?"
"கீழ போய் டீ, தம் அடிக்கலாம்ணு.."
"செருப்பால அடிக்கணும். இப்படி பசியோட போய், டீயையும் தம்மையும் அடிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?"
"காசு இல்லை வசு. என்ன பண்ண சொல்ற? டீ தம்முதான் கடனா கெடைக்கும்"
சொல்லிவிட்டு நான் பரிதாபமாய் வசுவை பார்த்தேன். வசு கண்களில் காதல் பொங்க இரக்கமாய் என்னை பார்த்தாள்.