13-02-2019, 10:53 AM
“ இல்ல மான்சி நாம என்ன தப்பு செய்தோம்,, ஏன் பயந்து ஓடனும்,, அவளை எதிர்த்துப் போராடுவோம் மான்சி, எப்பவுமே உண்மையும் நேர்மையும் தான் ஜெயிக்கும்,, கோர்ட் கொடுத்துள்ள கெடு இன்னும் ஐஞ்சு நாள் இருக்கு நான் அதுக்குள்ள யாராவது நல்ல வக்கீலா பார்த்து என்ன செய்யலாம்னு ஆலோசனை கேட்டு வர்றேன்,, இன்னிக்கு நைட் சென்னைக்கு கெளம்புறேன் மான்சி” என்ற சத்யன் மனைவியை அணைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தான்
அன்று முழுவதும் மான்சி பச்சைத்தண்ணி கூட குடிக்கவில்லை, ரதிக்கு பசியாற்றவில்லை, தன் வயிற்றில் இருக்கும் கருவுக்கு உணவளிக்கவில்லை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மனுவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்காமல் பித்துப்பிடித்தவள் போல் அப்படியே அமர்ந்திருந்தாள் , அவள் அம்மாவும் பாட்டியும் கூறிய ஆறுதல் மொழிகள் எதுவுமே அவள் காதுகளில் விழவில்லை
தனக்கு தெரிந்த ஒருவரிடம் சென்று கோர்ட் நோட்டீஸ் விஷயமாக ஆலோசனை கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்த சத்யன் மான்சியின் நிலையைப் பார்த்து கலங்கினான், அவளை எவ்வளவு அணைத்து ஆறுதல் படுத்தினாலும் கண்ணீர் நிற்க்கவில்லை
திடீரென்று ஏதோ யோசனை தோன்றியவள் போல முகம் பளிச்சிட “ ஏன் சத்தி இப்போ நம்மகிட்ட எப்படியும் இருபது லட்சரூபாய்ககு சொத்து இருக்குன்னு அன்னிக்கு சொன்னியே, அதையெல்லாம் அவளுக்கு குடுத்துடு சத்தி, அவதான் பணமில்லாம கஷ்டப் படுறான்னு அந்த மேனேஜர் சொன்னாரே, அதனால பணத்தை வாங்கிக்கிட்டா புள்ளைய கேட்கமாட்டா சத்தி” என்று மித்ராவின் குணத்தை முழுவதும் தெரியாமல் உற்சாகமாய் பேசினாள் மான்சி
அவளின் பரிதாபமாகப் பார்த்த சத்யன் “ இந்த பணம் அவளோட ஒரு மாச செலவுக்கு ஆகாது மான்சி,, நிச்சயம் அவ வேற எதுக்கோதான் இந்த பிரச்சனையை கிளப்பியிருக்கா,, மொதல்ல அது என்னன்னு பார்க்கலாம்,, நீ கொஞ்சம் தைரியமா இருந்தாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும் மான்சி, நீ அழாம தைரியமா இரும்மா ப்ளீஸ் ” என்று சத்யன் வேண்டிக் கேட்க
அதற்கும் கண்ணீருடனே தலையசைத்தாள் மான்சி
அன்று இரவு சத்யன் சென்னைக்கு கிளம்பினான்,, வாசல் வரை வந்த மான்சி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “ சத்தி எனக்கு என் புள்ள வேனும் சத்தி, அவனுக்காக நான் எதையும் இழக்கத் தயார் சத்தி, என் புள்ளைய யாரும் என்கிட்ட இருந்து பிரிக்காம பாத்துக்க சத்தி” என்று கண்ணீருடன் வேண்டினாள்
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று சத்யனுக்கு புரியவில்லை, சிறு வயது மகன் என்றால் தாயுடன் இருக்கும்படி தான் கோர்டில் தீர்பாகும் என்ற உண்மையைச் சொல்லி அவளை கலவரப்படுத்தாமல் “ எல்லாம் நல்லதே நடக்கும் மான்சி, நீ தைரியமா இரு ” என்றவன் அவள் வயிற்றில் கைவைத்து “ இதுக்காவது ஏதாச்சும் சாப்பிடு மான்சி” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்
அவன் கண்ணைவிட்டு மறையும் வரை அங்கேயே நின்றவள், மனு வந்து புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து “ அம்மா பசிக்குது” என்றதும், அவனை வாறியெடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்
மனுவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு,, ரதிக்கு பால் கொடுத்துவிட்டு பெரியவர்களுக்கும் சாப்பாடு கொடுத்தாள், பிள்ளைகளை பக்கத்தில் போட்டுக்கொண்டு உறங்கியவளுக்கு இரவெல்லாம் கொடும் கனவுகள், பாதி இரவில் எழுந்து அமர்ந்து மனுவைத் தூக்கி தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு தட்டியபடி விடியவிடிய விழித்திருந்தாள்
மறுநாள் மான்சிக்கு எந்த வேலையும் ஓடவில்லை,, சத்யன் கொடுத்துவிட்டு போன செல்போனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், அன்று மாலை ஆறு மணிக்கு சத்யனிடமிருந்து போன் வந்தது, அவசரமாக ஆன்செய்து காதில் வைத்தவள் “ சொல்லு சத்தி நீ பாத்த வக்கீலு என்னா சொன்னாரு?” என்று கேட்டாள்
எதிர் முனையில் சிறிதுநேர அமைதிக்குப் பிறகு “ நான் இப்போ வீட்டுக்குத்தான் வரப்போறேன் மான்சி,, ரயில்வேஸ்டேஷனில் தான் இருக்கேன், வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்றேன்,,என்றவன் “ நீ சாப்பிட்டயா மான்சி” என்று அக்கரையுடன் கேட்டான்
“ அட சாப்பாடு என்னா சாப்பாடு, ஒருநாள் சாப்பிடலைன்னா செத்தாப் போயிடுவேன்,, மொதல்ல நம்ம புள்ளைய பாதுக்குற வழியப் பாரு சத்தி,, சரிசரி நீ கிளம்பி வா,, வந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு ” என்று கூறி இணைப்பை துண்டித்தாள்
மறுநாள் காலை சத்யன் வந்து சொல்லப்போகும் செய்திக்காக இரவிலிருந்து விழித்துக் கிடந்தாள் அந்த தாய்
" அம்மா "
" இந்த வார்த்தைக்குத் தான் எவ்வளவு சக்தி"
" உச்சரிக்கும் போதே எனது உயிர் சிலிர்த்து..
" விழியோரத்தில் நீராய் கசியும் அன்பு!
" என் தாயின் வார்த்தைகளுக்கு...
" ஒரு தனி மொழியை உருவாக்கி...
"அந்த மொழிக்கு ஒரு பெயர் வைத்தால்..
" அந்த மொழியின் பெயர்தான் அன்பு!
" ஆயிரம் தலையணைகளை அணைத்துக்கொண்டு தூங்கினாலும்..
" என் தாய்மடி போல் இன்பம் எதிலும் இல்லையே!
" ஆம் நான் படுத்துக்கொண்டு சொர்கத்தை காண்பேன்"
" என் தாயின் மடியில்!