13-02-2019, 10:52 AM
ஒரு சிறு பதட்டத்துடன் கவரை பிரித்துப் படித்தவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, கையில் இருந்த குழந்தையை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வேகமாக சத்யனை நெருங்கி அவன் கையைப் பற்றி “ என்னா செய்தி சத்தி, ஏன் இப்படி அதிர்ச்சியா நிக்கிற எதுனா சொல்லு சத்தி” என்று அவனை உலுக்கினாள்
அதிர்ச்சியில் இருந்து மீலாதவனாய் சத்யன் மான்சியைப் பார்க்க, அவனது வெறித்தப் பார்வை வயிற்றில் கலவரத்தை ஏற்படுத்த “ என்னாச்சு சத்தி” என்றாள் தீனமாக
கையில் இருந்த பேப்பரை அவளிடம் நீட்டி “ நம்மளை வாழவிடமாட்டான்னு நெனைச்சேன் மான்சி, அது சரியாப்போச்சு, சனியன் ஏன் அமைதியா இருக்குன்னு குழம்புனேன், ஆனா அதோட வேலையை காட்டிடுச்சு ” என்றவன் கலங்கிய கண்களுடன் மான்சியை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தான்,,
இவள் எப்படி இதை தாங்குவாள் என்று சத்யனுக்கு பயமாக இருந்தது,, அன்று காலையில்தான் தன் வயிற்றில் அந்த குடும்பத்தின் மூன்றாவது வாரிசு உருவாகி வளர்வதை அழுத்தமாக முத்தமிட்டு அவனுக்கு சொல்லியிருந்தாள், இந்த சமயத்தில் இந்த பேரதிர்ச்சியை சொன்னாள் அவள் எப்படி தாங்குவாள் என்று சத்யனுக்கு வேதனையாக இருந்தது, எனக்காகவும் மனுவுக்காவும் இவள் எதையும் தாங்குவாள் தான், ஆனால் நாங்களே இல்லை என்றால் எப்படி தாங்குவாள், என்று எண்ணி குழம்பினான் சத்யன்
ஏதோ பெரிய பிரச்சனை என்று அறிவுக்கு உறைக்க,, அவனிடமிருந்து திமிறிக்கொண்டு வெளியே வந்தவள் அவன் சட்டையை கொத்தாகப் பற்றி “ என்னன்னு சொல்லு சத்தி, எனக்கு ஒன்னுமே புரியலை,, அவளுக்கும் நமக்கும் தான் ஒன்னுமேயில்லன்னு ஆயிருச்சே, நீதான் எல்லாத்துலேயும் கையெழுத்து போட்டு குடுத்துட்டியே சத்தி, அப்புறமா என்னப் பிரச்சனை” என்று மான்சி கண்ணீரை அடக்கியவாறு கேட்க
அவளிடம் இதைச்சொன்னால் தாங்குவாளா? என்ற குழப்பம் மேலிட மறுபடியும் அவளை தன் கைக்குள் இழுத்தான் “ பெரிசா ஒன்னுமில்லடா கண்ணம்மா,, எதுவாயிருந்தாலும் சமாளிப்போம், வாழ்க்கையில இவ்வளவு ஜெயிச்சோம், அந்த பேயை ஜெயிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது” என்று அவளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் தன்னை தேற்றிக்கொண்டான்
ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்த நம்பகத்தன்மை மான்சியை மேலும் கலவரப்படுத்தியது, அவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டு “ அய்யோ எனக்கு ஒன்னுமே புரியலையே,, எதுவா இருந்தாலும் தயவுசெஞ்சு சொல்லு சத்தி” கண்ணீருடன் கெஞ்சினாள்
இனிமேல் அவளிடம் சொல்லாவிட்டால் தான் ஆபத்து என்ற முடிவுடன் “ மான்சி நம்ம மகன் மனுவை கொண்டு வந்து கோர்ட்ல ஒப்படைக்கச் சொல்லி கோர்ட் நோட்டீஸ் வந்திருக்கு மான்சி” என்று சத்யன் விஷயத்தை போட்டு உடைத்தான்,
அவனை புரியாமல் பார்த்த மான்சி “ ஏன் சத்தி,, ஏன் நம்ம புள்ளய கோர்ட்ல கொண்டு போய் ஒப்படைக்கனும்” என்று அடைத்தக் குரலில் கேட்டாள்
அவளுக்கு விளக்கிச் சொன்னால் தான் புரியும் என்ற எண்ணத்தில் அவளை அணைத்தபடியே திண்ணையில் வந்து அமர்ந்த சத்யன் அவள் கைகளை இறுக்கமாகப் பற்றி “ மான்சி நீ மொதல்ல ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கனும்,, உலகத்தில் தீர்வு இல்லாத பிரச்சனைன்னு எதுவுமில்லை, எல்லாத்துக்கும் ஒரு வழியிருக்கும்,, அதனால நான் சொல்லப் போறதை கேட்டு மனசு குழம்பாதே,, நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு மகனை கடத்தி வந்து நீயும் நானும் கொடுமை பண்றதாகவும், தன்னோட மகனை கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லி மித்ரா சென்னை ஐகோர்ட்ல ஆட்கொணர்வு மனு தாக்கல் பண்ணிருக்கா, அதனால வர்ற பத்தாம் தேதி மனுவை கொண்டு வந்து கோர்ட்ல ஒப்படைக்கச் சொல்லி கோர்ட்ல இருந்து நோட்டீஸ் வந்திருக்க, இவ்வளவு தான் விஷயம்” என்று சத்யன் சொல்லி முடிக்கும் போது அவனது கண்ணீர் கன்னத்தில் வழிய அதை மான்சி பார்ப்பதற்குள் அவசரமாக சட்டையில் துடைத்தான்
இப்பவும் புரியாமல் அவனைப் பார்த்த மான்சி “ என் புள்ளைய வா சத்தி கொண்டு வந்து ஒப்படைக்க சொன்னாக” என்றாள்
‘ஆமாம்’ என்று தலையசைத்து சத்யன் அவளை தன் தோளில் சாய்த்தான் “ ஆனா பிள்ளை புருஷன் யாருமே வேனாம்னு ஒதுக்கி வச்சவ இப்ப ஏன் இப்படி ஒரு நோட்டீஸ் குடுக்கனும், அதுதான் எனக்கு குழப்பமா இருக்கு” என்று சத்யன் கூற
“ ஏன் சத்தி நாம புள்ளைய குடுக்கலைன்னா கோர்ட்ல என்ன செய்வாங்க” என்றாள் மான்சி புரியாக் குழந்தையாக
“ கோர்ட்டை அவமதிச்ச குற்றத்துக்காக அபதாரம் போட்டு பிடிவாரண்ட் போடுவாங்க மான்சி” என்றான் சத்யன்
“ அப்படின்னா புள்ளைய தூக்கிகிட்டு இப்பவே நாம எங்கயாவது போயிடலாம் சத்தி” என்றாள் மான்சி குரலில் உறுதியுடன்
அந்த சூழ்நிலையிலும் சத்யனுக்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது,, இத்தனை நாள் உழைத்து சம்பாதித்த அத்தனையையும் விட்டுவிட்டு புள்ளைய தூக்கிகிட்டு எங்காவது போய்டலாம் என்று அவளது வார்த்தை அவனுக்கு உள்ளத்தை குளிர செய்தது, இதோ இவளோட இந்த தூய்மையான அன்பு எந்த பிரச்சனையில் இருந்தும் தன்னை வெளியே கொண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டானது