13-02-2019, 10:47 AM
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 6
சத்யன் தனது வீட்டின் முன்பு கார் வந்து நின்றதை நிலத்தில் இருந்துப் பார்த்துவிட்டு குழப்பத்துடன் வீட்டை நோக்கி வந்தான், மேஸ்திரியிடம் வேலை செய்தவர்களுக்கான கூலியை கணக்கு பார்த்து கொடுத்துக்கொண்டிருந்த மான்சியும் கார் வந்ததை கவனித்துவிட்டாள்
அவள் நெஞ்சில் திக்கென்று நெருப்பு பற்றியது, இரவு பேசிய பேச்செல்லாம் நினைவில் வந்து வானுயரத்திற்கு உயர்ந்து நின்று பயமுறுத்தியது, தலைசுற்றுவது போல் இருக்க அங்கிருந்த தண்ணீரை முகத்தில் வாறியடித்து முகத்தை கழுவி தனது பலகீனத்தை போக்கியவள் நிமிர்ந்து வேதனையுடன் சத்யனை பார்த்தாள்
காரை நோக்கி போன சத்யன் ஏதோவொரு நினைவில் அப்படியே நின்று திரும்பி மான்சியைப் பார்த்தான், அவளும் அவனையே துயரத்துடன் பார்த்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் சத்யன் நெஞ்சில் கோவென்று இரைச்சல் எழுந்தது, வா என்பது தனது இருகைகளையும் அவளை நோக்கி விரித்து நீட்டினான்,
அடிபட்ட குழந்தை தனது தாயை நோக்கி அழுகையுடன் ஓடுவதைப் போல மானசி அவனை நோக்கி வேகமாக ஓடினாள், மான்சி போய் அவன் கைகளுக்குள் போய் சரணடைந்ததும் இருவருக்குமே சற்று நிம்மதியாக இருக்க இருவரும் எதுவுமே பேசாமல் காரை நெருங்கினர்
காரில் இருந்து இறங்கி பாட்டியிடம் விசாரித்துக்கொண்டு இருந்த மேனேஜர், சத்யனைப் பார்த்ததும் வரவழைத்த புன்னகையுடன் அவனைப்பார்த்து “ எப்படி இருக்கீங்க சத்யன்?” என்ற சம்பிரதாய கேள்வியுடன் அவனை நெருங்கியவர், அவனுடன் இருந்த மான்சியையும் அவர்களின் நெருக்கத்தையும் பார்த்து ஒரு விநாடி தயங்கி நிற்க்க..
அவரின் பார்வையை புரிந்து மான்சி சத்யனிடமிருந்து விலகி நிற்க, சத்யன் அவள் விலகாதவாறு தோளைப்பிடித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு “ வாங்க சார்,, நான் நல்லாருக்கேன், இவ என்னோட மனைவி,, பெயர் மான்சி” என்று மனைவியை அறிமுகம் செய்தவன் மான்சியிடம் திரும்பி, “ மான்சி பால் இருந்தா காபி போட்டு எடுத்துட்டு வா,, நான் இவர்கூட பேசிகிட்டு இருக்கேன்” என்று சொல்லி அவளை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு மேனேஜருடன் வீட்டுக்குள் போய் கூடத்தில் அமர்ந்தான்
“ சொல்லுங்க சார் என்ன விஷயமா வந்துருக்கீங்க” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்
மேனேஜர் அவனையும் அந்த வீட்டையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு “ சிறிய வீடுதான், ஆனால் ரொம்ப நிறைவாக வாழுறீங்கன்னு தெரியுது சத்யன், உங்க வாழ்க்கை மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் சத்யன்” என்று மேனேஜர் அக்கரையுடன் சொன்னதுதான் சத்யனுக்கு மூச்சே வந்தது,
மேனேஜர் பெரியதாக எந்த பிரச்சனையையும் சுமந்து வந்திருக்க மாட்டார் என்ற நிம்மதி வர “ உங்களோட ஆசிர்வாதத்திற்கு நன்றி சார், என்ன விஷயம் சொல்லுங்க, என்னால எதுவும் ஆகவேண்டுமா? ” என்று சத்யன் கேட்டான்
ஒரு நீண்ட பெருமூச்சுடன் தான் சொல்ல வந்ததை ஆரம்பித்தார் மேனேஜர் “ சத்யன் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்ச விஷயம்தான் , மேடத்தோட அலட்சியத்தால் கம்பெனியில் பயங்கர நஷ்டம், அவங்க அப்பாவும் உதவமாட்டேன்னு சொல்லிட்டார், ஏற்கனவே மேடத்தோட தேவைகளுக்கு பணம் பத்தாமல் நிறைய கடன் வாங்கியிருந்தாங்க, அது உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை, ஆனா இப்போ அந்த கடனுக்காக வீட்டை அடமானம் போட்டுட்டாங்க, இப்போ கம்பெனி ஸ்டாப்ஸ்க்கு சம்பளம் ரெண்டு மாசமா பாக்கி இருக்கு, மேடம் போன வாரம் மங்களூர் போய் அவங்களோட தாய்வழிப் பாட்டிக்கிட்ட கம்பெனியை ரன் பண்ண பணம் கேட்டாங்களாம்,, அவங்க தரமறுத்துட்டாங்க, அதோட கோபமா வந்துட்டாங்க, ஆனா இப்போ கம்பெனியை கைமாத்த வேண்டிய நிலைமை சத்யன், அதுக்கு உங்க பேர்ல இருக்கும் உங்களோட ஏழு பர்ஸன்ட ஸேர்ஸை நீங்க மேடத்துக்கு எழுதி குடுக்கனும், அதுக்காகத்தான் வந்தேன் சத்யன்” என்று மேனேஜர் சொல்லவந்ததை சரியாக சொல்லி முடித்தார்
சத்யன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான், அப்போது மனுவை இடுப்பில் வைத்துக்கொண்டு மான்சி ஒரு தட்டில் வைக்கப்பட்ட காபி டம்ளரோடு வர,, சத்யன் மகனை அவளிடமிருந்து வாங்கி மடியில் வைத்துக்கொள்ள மான்சி காபியை இருவருக்கும் கொடுத்தாள்