Romance ஓகே கண்மணி
#54
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பிரெண்ட்ஸை பார்க்க சென்றான் கார்த்திக்.அப்படியாவது மனதுக்கு கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று.ஆனால் அங்கும் அவன் மனம் ராஜியையே சுற்றி வந்தது.

இதற்கு ஒரே வழி சரக்குதான் என்று முடிவெடுத்து கடைக்கு சென்று பீர் வாங்கிக்கொண்டான்.

பின் வீட்டிற்கு சென்று ஓபன் செய்து வாயில் வைக்கும் முன் ஆரம்பிச்சிட்டியா.ஒருநாள் வீட்டில் இல்லனா குடிக்க ஆரம்பிச்சிடுவியா.குடிகாராகுடிகாரா என்று ராஜி சொன்னாள்.

டேபிளுக்கு அருகில் கைகளை கட்டிக்கொண்டு கோவமாக அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால் ராஜி.

இல்லை இல்லை.உன்னை விட்டுட்டு வந்ததுல இருந்து உன் நியாபகமாவே இருக்குது.எங்க பாத்தாலும் நீதான் தெரியுற.அதான் லைட்டா பீர் சாப்பிடலாம்னு.நீ வந்துட்டல்ல இப்பவே கீழ ஊத்திடுறேன்.

எனக்காக ஒன்னும் ஊத்த வேணாம்.குடிக்கணும்னா குடிச்சு தொலை.

இப்ப பாரு ஒன் sec.வேகமாக சென்று அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கை கழுவிக்கொண்டு எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சிட்டேன் போதுமா.ஹாப்பியா.என்று சொல்லிக்கொண்டே வர அங்கு யாரும் இல்லை.

அஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்று தலையை பிடித்துக்கொண்டு சோபாபில் விழுந்தான் கார்த்திக்.

ராஜி அழுது முடிக்கும் வரை அவள் தலையை கோதி விட்டு அவளை சமாதானம் செய்தாள் ஷக்தி.

பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு தலையை நிமிர்த்திய ராஜியை பார்த்து அக்கா என்னக்கா ஆச்சு.ஏன் இப்படி அழகுற.

எனக்கு வாழவே பிடிக்கலடி.

அக்கா என்னக்கா சொல்ற.கார்த்திக் உன்ன சந்தோசமா தான வச்சிருக்கான்.

எனக்கு அவன்கூட இருக்கவே பிடிக்கல.ஏன் அவனையே பிடிக்கல

அக்கா என்ன சொல்ற நீ.

ஆமாம்.அவனை நான் எப்போதுமே ஹாஸ்பேன்டா நினைச்சு பாத்ததே இல்லடி.அவன்கூட இருக்கும் போதெல்லாம் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் நியாபகத்துக்கு வருது.

அக்கா என்ன சொல்ற.அவன் உனக்கு துரோகம் செஞ்சானா.

நான் ரமேஷை லவ் பண்ணும்போது எங்க ரெண்டு பேரையும் பிரிச்சது அவன்தான்.அக்கா கிட்ட எங்க ரெண்டு பேரையும் போட்டு கொடுத்தான்.அப்புறம் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு நான் அவன்கிட்ட சொல்லி அவன்கிட்ட கேட்டேன்.

அந்த நேரம் உனக்கு விருப்பம் இல்லனா இந்த கல்யாணம் நடக்காது.இதை நிறுத்த வேண்டியது என் பொறுப்புன்னு சொன்னான்.ஆனால் அப்பவும் என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான்

நீ கல்யாணம் பிடிக்கலைன்னா அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே.அத விட்டுட்டு ஏன் கார்த்திக் கிட்ட சொன்ன

எப்படிடி சொல்ல முடியும்.நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நா இன்னும் ரமேஷதான் மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு அம்மா என்ன நினைக்க மாட்டாங்க.அதான் கார்த்திக் கிட்ட கேட்டேன்.

எல்லாம் இருக்கட்டும் இதெல்லாம் கார்த்திக் தான் பண்ணினானு நீ எதவச்சி சொல்ற.

அவன்தானே நான் ரமேஷ லவ் பன்றேன்னு தெரிஞ்சும் என்ன லவ் பண்ணான்.நான் அவனுக்கு கிடைக்கணும்.அவன் ஆசை பட்டது நடக்கணும்.அதுக்கு தான இதெல்லாம் செஞ்சான்.

அப்படி நீ நினைச்சா அது உன்னோட முட்டாள்தனம்.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியாம நீயா ஒன்ன கற்பனை பண்ணிக்கிட்டு அதுதான் நிஜம்னும் நினைச்சுட்டு இப்ப உன் வாழ்க்கையே நாசமாகிட்டு இருக்க.

என்னடி சொல்ற.

ஆமா.என்னைக்காவது நீ அவனை புரிஞ்சிக்கிடனும்.அவனை பத்தி தெரிஞ்சுக்கிடணும்னு ட்ரை பண்ணிருக்கியா.

இப்ப எதுக்கு நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற.

இப்பவும் நீ லூசு மாதிரி பேசுற.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா. . . . . . . . . . . . . .
என்ன நடந்துச்சுன்னு சொன்னா உனக்கு புரியவா போகுது விடு.ஆரம்பத்துல எனக்கும் கோவமாத்தான் இருந்துச்சு.அவன் லவ் பண்ணறேன்னு சொன்னப்ப எல்லாம் பிரியவைதான் லவ் பண்ணிட்டு இருக்கான்னு நானும் அவளும் நினைச்சோம்.அப்பகூட அவன்மேல எனக்கு கோவம் இல்ல.உன்ன லவ் பண்ணறேன்னு சொன்னப்ப தான் எனக்கு பயங்கர கோவம் வந்துச்சு.அவன்கூட பேசாம கூட இருந்தேன்.ஆனா இப்ப உன்ன ரொம்ப லவ் பண்ரான்னு எனக்கு தோணுது.அவன்மேல் எனக்கு எந்த கோவமும் இல்லை.நீ புரிஞ்சிக்கோ அக்கா.

நான் யாரையும் புரிஞ்சிக்க வேண்டாம் சக்தி.நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனாவே இருக்கட்டும்.ஆனால் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம.அவ வேண்டாம்னு சொல்லியும் அவ கழுத்துல தாலி கட்டினவன என்ன செய்ய சொல்ற.

இந்த நேரடி கேள்வியில் சற்று நிலை தடுமாறித்தான் போனாள் சக்தி.ஆனால் அவளுடைய கோவத்திற்கு காரணம் வெளிப்பட்டு விட்டது.

அது மட்டும் தான் அவன் செஞ்ச பெரிய தப்பு.அதுக்கு பதில் அவனுக்கு தான் தெரியும்.அவனுக்கு மட்டும் தான் தெரியும்.அதுக்கு நீ அவன்கிட்ட மனசு விட்டு பேசினாத்தான் பதில் கிடைக்கும்.இல்லனா இந்த விஷயத்தை நான் அம்மாகிட்ட சொல்றத தவிர எனக்கு வேறு வழி தெரியல.

ஹேய் லூசு மாதிரி பண்ணாத.அம்மாக்கும்,வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது.நீ யாருகிட்டயும் இதை பத்தி சொல்லாத.எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்.

நல்ல யோசி.நீ இங்க இருந்து போறதுக்குள்ள ஒரு நல்ல பதிலா சொல்லு.இல்ல அம்மாகிட்டதான் சொல்லுவேன்

சரி.நீ இப்ப கிளம்பு.எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு.நான் கொஞ்சம் தூங்கணும்.

சரி அக்கா.நீ ரெஸ்ட் எடு அப்புறமா பேசலாம்.

ஹே ஹே ஒரு நிமிஷம் ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்ட போல.எனக்கே அட்வைஸ்லாம் பண்ற சக்தி.

ஹலோ அப்படிலாம் ஒன்னும் இல்ல.என் அத்தானுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப்.அவ்ளோதான்

அப்ப நீ அக்காவுக்காக பேசல.

அப்படில இல்ல.ரெண்டு பேருக்காகவும் தான்.தூங்குக்கா.அப்பறம் பேசலாம்.என்று ராஜியின் நெற்றியில் முத்தமிட்டு சென்றாள் சக்தி.

சக்தி சென்றவுடன் ராஜிக்கு திரும்ப திரும்ப அந்த வார்த்தை ஓளித்தது.அத்தானுக்காக அத்தானுக்காக.

பெட்டில் படுத்த ராஜிக்கு சிந்தனை மொத்தமும் கார்த்திக் பற்றியே இருந்தது.

இன்னைக்கு சக்தி பேசினதை வச்சி பார்க்கும் போது எல்லா விஷயமும் அவளுக்கு தெரிஞ்சிருக்கு.கார்த்திக் தான் எல்லாத்தையும் அவகிட்ட சொல்லி என் மனச மாத்த ட்ரை பன்றானோ என்று தப்பு கணக்கு போட்டாள்.

பொதுவாக ஒரு மனுஷனுக்கு ரெண்டு மனசு இருக்கும்.ஒன்னு எப்போதும் நல்லதையே யோசிக்கிற,பாஸிட்டிவா பேசுற மனசு.அது எப்போதும் இதயத்துக்கு பக்கத்துல இடது பக்கம் இருக்கும்.

இன்னொன்னு இதயத்துக்கு எதிர் பக்கத்துல நுரையீரல் பக்கத்துல இருக்கும்.இதயத்தை விட்டு தள்ளி இருக்குறதால என்னவோ அது எப்போதும் தப்பாவே நினைக்கும்,நெகடிவ்ஆன விஷயங்களையே சொல்லும்.

ஆனா நம்ம புத்தி அந்த நெகட்டிவ்ஆன மனசையே நம்பும்.அது சொல்ற படி தான் நடக்கும்.ஏன்னா அது சொல்றது ரொம்ப ஈஸியா இருக்கும்.சுலபமாவும் இருக்கும்.

வலது பக்கம் இருக்க மனசு சொல்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.ஆனால் அது கண்டிப்பா நல்லதுல போய்த்தான் முடியும்.

உதாரணத்துக்கு நீங்க ட்ரிங்க்ஸ் பண்றிங்கன்னு வைங்க.அது ரொம்ப ஹெல்த்தை பாதிக்கும்னு நமக்கு தெரியும்.உங்க நல்ல மனசு வேண்டாம்.இனி குடிக்க கூடாது.இதை குடிக்கிறதுக்கு பதிலா இந்த காசை வேற எதுக்காவதுஸ் செலவழிக்கலாம்னு சொல்லும்.

ஆனா அந்த கெட்ட மனசு அதுக்கான அல்டெர்னட்டா யோசிக்கும்.இந்த ஒரு தடவை மட்டும்,இந்த வருஷத்தோட நிறுத்திக்கலாம்.இப்படியான சாதகமான பதிலை சொல்லும்.

ராஜியும் இப்படிதான் இரு மனதிடமும் போராடி கொண்டிருந்தாள்.இறுதியில் இது கார்த்திக்கின் வேலை தான் என்று உறுதியாக நம்பினாள்.

அன்று நல்லவநாட்டும் பேசிட்டு இன்னைக்கு என் தங்கச்சியவே தூது அனுப்பிரியா.உன்னை கடைசி வரைக்கும் நான் நம்ப மாட்டேன் என்று மனதிடம் சொன்னாள்.
[+] 4 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:50 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:57 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:06 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 04-11-2019, 02:04 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 04-11-2019, 03:54 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:01 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:03 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:11 PM
RE: ஓகே கண்மணி - by Kedibillaa - 06-11-2019, 09:02 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 06-11-2019, 09:06 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 06-11-2019, 09:13 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 06-11-2019, 11:00 PM
RE: ஓகே கண்மணி - by Northpole7 - 04-12-2019, 08:10 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 05-12-2019, 08:51 AM
RE: ஓகே கண்மணி - by krishkj - 05-12-2019, 03:05 PM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 05-12-2019, 03:13 PM
RE: ஓகே கண்மணி - by opheliyaa - 08-12-2019, 11:23 PM
RE: ஓகே கண்மணி - by Krish126 - 10-12-2019, 04:07 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:27 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 24-02-2020, 02:36 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 25-02-2020, 12:00 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 25-02-2020, 03:45 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 26-02-2020, 05:41 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 28-02-2020, 10:27 AM
RE: ஓகே கண்மணி - by Remoella - 29-02-2020, 08:48 AM
RE: ஓகே கண்மணி - by Sri tamil - 29-02-2020, 12:20 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 01-03-2020, 04:12 AM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 06-03-2020, 04:05 PM
RE: ஓகே கண்மணி - by Yesudoss - 07-03-2020, 10:04 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:28 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 07-03-2020, 11:57 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 07-03-2020, 01:23 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 07-03-2020, 04:34 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:41 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:43 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 07-03-2020, 06:57 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 07-03-2020, 10:22 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 07-03-2020, 10:57 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 07-03-2020, 11:22 PM
RE: ஓகே கண்மணி - by Karmayogee - 07-03-2020, 11:43 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 07-03-2020, 11:47 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 07-03-2020, 11:52 PM
RE: ஓகே கண்மணி - by Dorabooji - 08-03-2020, 06:39 AM
RE: ஓகே கண்மணி - by Vettaiyyan - 08-03-2020, 11:12 AM
RE: ஓகே கண்மணி - by mulaikallan - 08-03-2020, 10:27 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 09-03-2020, 07:44 AM
RE: ஓகே கண்மணி - by Mech3209 - 09-03-2020, 05:48 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 13-03-2020, 04:05 AM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-03-2020, 05:19 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-03-2020, 06:55 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 16-03-2020, 08:50 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 20-03-2020, 02:01 PM
RE: ஓகே கண்மணி - by Kanakavelu - 21-03-2020, 09:08 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 21-03-2020, 10:35 PM
RE: ஓகே கண்மணி - by Thangaraasu - 21-03-2020, 11:46 PM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 27-03-2020, 12:42 AM
RE: ஓகே கண்மணி - by zulfique - 28-03-2020, 11:02 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 30-03-2020, 11:44 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 05-04-2020, 09:37 AM
RE: ஓகே கண்மணி - by Dumeelkumar - 06-04-2020, 07:03 AM
RE: ஓகே கண்மணி - by kangaani - 14-04-2020, 07:57 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-04-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by jiivajothii - 13-05-2020, 09:08 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 13-05-2020, 09:53 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:42 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:45 AM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 13-05-2020, 01:56 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-05-2020, 08:47 PM
RE: ஓகே கண்மணி - by zulfique - 13-05-2020, 09:03 PM
RE: ஓகே கண்மணி - by adangamaru - 13-05-2020, 10:01 PM
RE: ஓகே கண்மணி - by kramuram - 13-05-2020, 10:37 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 08:00 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:18 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 14-05-2020, 07:30 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 14-05-2020, 10:02 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 10:54 PM
RE: ஓகே கண்மணி - by Remoella - 19-05-2020, 08:57 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 21-05-2020, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Charles - 25-05-2020, 02:32 AM
RE: ஓகே கண்மணி - by Mahesh111 - 16-06-2020, 12:56 PM
RE: ஓகே கண்மணி - by dharmarajj - 20-07-2020, 12:10 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 20-07-2020, 07:41 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 20-07-2020, 11:48 AM
RE: ஓகே கண்மணி - by kathalrani - 20-07-2020, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 15-08-2020, 06:45 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 16-08-2020, 08:23 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 27-08-2020, 02:34 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 28-08-2020, 09:13 AM
RE: ஓகே கண்மணி - by praaj - 09-11-2020, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by Mottapayyan - 26-12-2020, 06:04 PM
RE: ஓகே கண்மணி - by Mood on - 06-07-2021, 11:19 PM
RE: ஓகே கண்மணி - by manigopal - 07-07-2021, 11:51 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-07-2022, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by NovelNavel - 09-07-2022, 09:52 AM
RE: ஓகே கண்மணி - by sasi sasi - 04-12-2022, 08:17 PM



Users browsing this thread: 1 Guest(s)