12-02-2019, 06:28 PM
ஜாஷ்வா, "சரி, இதை சொல்லுங்க ரெண்டு பேரும். நீங்க இந்த வைரஸ் அப்பறம் பாட் நெட் விஷயத்தில் எதுக்கு புகுந்தீங்கன்னு எனக்கு தெரியாது. நான் இதுக்குள்ள வந்ததுக்கு காரணம் யாரை பழி வாங்கணும்னு தெரியாம மனசுக்குள்ள புகைஞ்சுகிட்டு இருக்கற ஒரு வெறி. அந்த வெறினால யாரையாவுது ஏமாத்தும்போது வர்ற ஒரு த்ரில். உங்களுக்கும் நிச்சயம் அந்த மாதிரி ஒரு காரணம் இருக்கும். அதே சமயம் நம்மால நல்லவங்க நஷ்டப் படக்கூடாதுன்னு நினைக்கறீங்க இல்லையா? அதனால தானே உங்க பாட் நெட்டை வேற எந்த விதத்திலும் இதுவரைக்கும் உபயோகப் படுத்தலை?" சக்திவேல், "நடுவில் இருக்கற கம்பெனியை ஏமாத்தி அவங்க அக்கௌண்ட் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா அவங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஒத்துக்கறேன். ஆனா, ஒரு வேளை டீ.ஈ.ஏ (DEA) அவங்களை கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவாங்க. மாட்டிக்குவாங்கதானே?" ஜாஷ்வா, "நான் சொல்ல போற ப்ளான்ல யாரும் மாட்ட மாட்டாங்க. ஒவ்வொருத்தரும் மத்தவங்க மேல பழியை போடுவாங்க. யாருக்கும் ஒண்ணும் புரியாது" நித்தின், "சரி உன் ப்ளான் என்னன்னு சொல்லு. அதுக்கு அப்பறம் நாங்க யோசிச்சு முடிவு பண்ணறோம். என்ன சொல்றே சக்தி?" சக்திவேல், "நீ சொல்றது சரி. முழு விவரம் தெரிஞ்சதுக்கு அப்பறம் யோசிச்சு முடிவு பண்ணலாம்" ஜாஷ்வா, "பரவால்லை. இந்த அளவுக்கு உங்களோட நம்பிக்கையை முதல் சந்திப்பிலயே சம்பாதிப்பேன்னு நான் நினைக்கலை. ஏற்கனவே மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே. நாளைக்கு என் வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டிட்டு போறேன். அப்ப உங்களுக்கு விளக்கமா சொல்றேன்" சக்திவேல், "உன் மனைவி முன்னால இந்த மாதிரி விஷயத்தைப் பத்தி பேசலாமா?" ஜாஷ்வா, "நாம் அவ முன்னாடி பேசப் போறது இல்லை. அப்படி பேசினாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. என் மனைவிக்கு இந்த மாதிரி விஷயமெல்லாம் ஜுஜுபி (உண்மையில் அவன் சொன்னது chicken shit!)" அடுத்த நாள் சந்திப்பதாகக் கூறி ஜாஷ்வா அவர்களிடமிருந்து விடை பெற்றான். இருவரும் திரும்ப மௌனமாக வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்தனர். ஜாஷ்வா சொன்ன வாக்கியங்களில் ஒன்று இருவர் மனதிலும் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருந்தது.. "யாரை பழி வாங்கணும்னு தெரியாம மனசுக்குள்ள புகைஞ்சுகிட்டு இருக்கற ஒரு வெறி. அந்த வெறினால யாரையாவுது ஏமாத்தும்போது வர்ற ஒரு த்ரில். உங்களுக்கும் நிச்சயம் அந்த மாதிரி ஒரு காரணம் இருக்கும்"Shakthivel Muthusamy - An Introduction சக்திவேல் முத்துசாமி -