Checkmate ... A cybercrime thriller dreamer
#15
ஆனா வினியோகஸ்தர்கள் அவங்க கிட்ட இருந்து வாங்கற விலை என்ன தெரியுமா? கிலோ பதினைந்து ஆயிரம் (USD 15,000) டாலர்! வினியோகஸ்தர்கள், அவங்களுக்கு ரிஸ்க் கம்மி, அவங்க டீலர்களுக்கு இருபத்து ஒரு ஆயிரத்துக்கு (USD 21,000) விக்கறாங்க. கஸ்டமர்கள் தெருவில கோக்கேயின் வாங்கற விலை கிலோவுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்துக்கு (USD 1,07,000) . டீலர்களுக்கு இடையேயும் நிறைய கை மாறி கஸ்டமர்கள் கைக்கு போகுது. இந்த சங்கிலியில பாத்தா இறக்குமதியாளர்கள் வாங்கின விலையை விட பதினைந்து (15) மடங்கு விலை வெச்சு விக்கறாங்க. அதனால அவங்க பண்ணற வேலையை கார்டல்காரங்களே பண்ணினா அவங்க லாபம் இன்னும் அதிகரிக்கும்ன்னு முடிவெடுத்து இறக்குமதியாளர்களை ஒழிச்சு கட்டிட்டாங்க" நித்தின், "ஒரு வருஷத்துக்கு எத்தனை கிலோ அமெரிக்காவுக்கு கடத்திட்டு வர்றாங்க?" ஜாஷ்வா, "என்னோட தகவல் படி சுமார் எட்டு லட்சம் கிலோ (8,00,000 Kg) அமெரிக்காவுக்கு உள்ள வருது. நியூ யார்க்கில இருக்கற வினியோகஸ்தர் வாங்கறது சுமார் அறுபத்து ஆறாயிரம் கிலோ (66,000 Kg). அவன் கொடுக்கற பணம் சுமார் ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலர். இப்ப அதுல மட்டும் நம்ம கவனம் செலுத்தலாம்" சக்திவேல், "இதெல்லாம் எதுக்கு சொல்றே. புரியலை" ஜாஷ்வா, "வெயிட் வெயிட் சொல்றேன் .. 
பொறுமையா கேளு. அந்த கார்டல்காரங்க ஒரு கிலோ கோக்கேயினை விக்கற விலை பதினைந்து ஆயிரம் டாலர். பணத்தை கேஷா மட்டும்தான் வாங்கிப்பாங்க. பதினைந்து ஆயிரம் டாலரோட எடை என்ன தெரியுமா? சுமார் நூற்றி ஐம்பது கிராம். அதுவும் புது நோட்டா இருந்தா!!. ஆனா இவங்க புழங்கறது பழைய நோட்டுதான். பழைய நோட்டுன்னா இன்னும் ஏறக்குறைய ரெண்டு மடங்கு வெயிட் அதிகமாகும். சோ அவங்க ஒரு கிலோ கோக்கேயினை உள்ள கடத்திட்டு வந்தா குறைஞ்சது கால் கிலோ பணத்தை வெளியே கடத்திட்டு போக வேண்டி இருக்கு. நியூ யார்க்குக்கு ஒரு வருஷத்தில அஞ்சு அல்லது ஆறு லோட் கோக்கெயின் கொண்டு வந்து விக்கறாங்க. ஒவ்வொரு லோடும் பத்தாயிரம் கிலோவில் இருந்து பதினஞ்சு ஆயிரம் கிலோ வரைக்கும் இருக்கும். ஒரு லோட் கோக்கெயின் வித்தா வர்ற பணத்தோட எடை மூவாயிரம் கிலோவுக்கும் அதிகம்!"நித்தின், "ஏன் எதாவுது பாங்க் மூலம் அதை ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாதா?" ஜாஷ்வா, "பண்ணறாங்க ஆனா இப்ப எல்லாம் டீ.ஈ.ஏ (DEA என்பது Drug Enforcement Administration என்ற அமெரிக்க அரசாங்கத்தின் போதைப் போருள் தடுப்பு படை) பணப் பரிமாற்றத்தையும் ரொம்ப க்ளோஸா கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் கொலம்பியாவுக்கு ஏற்றுமதி ஆகும் அமெரிக்க பொருள்கள் கூட பணத்தையும் பாக் பண்ணி அனுப்பறாங்க. வழில அடிக்கடி பிடி படறாங்க" சக்திவேல் முகத்தில் ஒரு பிரகாசத்துடன் கவனித்து கொண்டிருந்தான். நித்தின், "சரி, இதெல்லாம் நமக்கு எதுக்கு?" ஜாஷ்வா, "நீயே கேட்டியே பாங்க் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாதான்னு? அவங்க மாட்டிக்காத மாதிரி நம்ம மூணு பேரும் ஒண்ணு சேந்தா பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். அதுக்கு நாம் அவங்க கிட்ட ஒரு சதவிகிதம் (percent) கமிஷனா வசூலிக்கலாம். அவங்க எடுத்துட்டு போற பத்து பில்லியன் டாலரையும் நம்மால நிச்சயம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியாது. ஆனா ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலரை சுலபமா ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். நமக்கு லாபம் ஒரு கோடி டாலர். நாம் மூணு பேரும் அதை சரி சமமா பகிர்ந்துக்கலாம்." நித்தின், "சாரி ஜாஷ்வா, நாங்க எங்க பாட் நெட்டை சட்ட விரோதமான செயலுக்கு உபயோகிக்கறது இல்லைன்னு முடிவு செஞ்சு இருக்கோம்" ஜாஷ்வா, "சட்ட விரோதமா இருக்கலாம். ஆனா சரியா இல்லையான்னு நீ பாக்கற விதத்தில இருக்கு. உங்க ஊர்ல நீ லஞ்சமே கொடுக்கறது இல்லையா? இல்லை, வ்ருமான வரி கட்டாம இருக்கறது இல்லையா?" சக்திவேல், "இல்லை ஜாஷ்வா, இது திருடனுக்கு துணை போற மாதிரி இல்லையா?" ஜாஷ்வா, "நிச்சயம் இல்லை. நான் பாத்த வரைக்கும் அவங்க வியாபாரிங்க. இதே அமெரிக்கா அவங்களை சட்ட பூர்வமா விக்க அனுமதிச்சா சந்தோஷமா வருமான வரி கட்டி வித்துட்டு போவாங்க. அமெரிக்கா தடுக்க வேண்டியது அவங்க கொண்டு வர்றதை. அவங்க கொண்டு வந்து வித்ததுக்கு அப்பறம் அந்த பணத்தை பாங்கில போட விடலைன்னா அமெரிக்காவுக்குதான் நஷ்டம். ஒரு அமெரிக்க வங்கில போட வேண்டிய பணம் வெளி நாட்டுக்கு போய் சேருது. இங்க அவங்களை போட விட்டா யாரும் அதை அவ்வளவு சீக்கரம் எடுக்க மாட்டாங்க. ஸ்விஸர்லாந்துக்கு அப்பறம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி இந்த மாதிரி நாடுகளில் பணம் போடறது ரொம்ப பாதுகாப்பானதுன்னு அவங்களுக்கும் தெரியும்" நித்தின், "சரி, நாம் இங்க இருக்கற அவங்களோட அக்கௌண்டில் பணம் போட்டதும் அதை வெளி நாட்டில் இருக்கற ஒர் அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும் அப்படித்தானே? நம்மால எப்படி அப்படி ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். " ஜாஷ்வா, "யெஸ், முடியும். நான் விளக்கமா சொல்றேன்" சக்திவேல், "வெயிட். அவங்களா பண்ணிக்கறதுக்கு பதிலா நாம் பண்ணினா அதையும் டீ.ஈ.ஏ (DEA) பிடிப்பாங்கதானே?" ஜாஷ்வா, "அவங்க டெபாசிட் பண்ணற அக்கௌண்டில் இருந்து நேரடியா கொலம்பியாவில் இருக்கற ஒரு அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா நிச்சயம் பிடிப்பாங்க. ஆனா, அவங்க போட்ட பணத்தை இங்க இருக்கற ஒரு கம்பெனிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி அந்த கம்பெனி அதை கொலம்பியாவில் இருக்கும் அவங்க அக்கௌண்டுக்கு டரான்ஸ்ஃபர் பண்ணினா ஒரு சந்தேகமும் வராது. அதிக பணப் புழக்கம் இருக்கற அடிக்கடி வெளி நாடுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணற ஒரு கம்பெனியோட அக்கௌண்டில இந்த ட்ரான்ஸ்ஃபர் நடந்துச்சுன்னா. நிச்சயம் பிடிக்கவே போறது இல்லை. அதுவும் கொலம்பியாவில் இருக்கற வங்கிக்கே பணம் போய் சேரணும்னு அவங்க எதிர் பார்க்கறது இல்லை. ப்ரேசில், ஆர்ஜெண்டினா, வேனிஸுவேலா இந்த மாதிரி ஒரு நாட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா போதும்" நித்தின், "அவங்களே அந்த மாதிரி கம்பெனிகளை அணுகலாம் இல்லையா?" ஜாஷ்வா, "ஒரு கம்பெனியும் சட்ட பூர்வமா அதை பண்ண ஒத்துக்க மாட்டாங்க" சக்திவேல், "நாம் எப்படி பண்ண முடியும்?" ஜாஷ்வா, "அந்த கம்பெனிக்கு தெரியாமல்" நித்தின், சக்தி இருவரும் வாயடைத்துப் போய் அவனை சில கணங்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஜாஷ்வா, "உங்க ரெண்டு பேரோட முகத்தையும் பாத்தா உங்களுக்கு அது சரி இல்லைன்னு படுது. இல்லையா?" சக்திவேல், "நான் முதல்லயே சொன்னேனே ஜாஷ்வா. மத்தவங்களுக்கு எந்த கெடுதலும் நாங்க பண்ண விரும்பலை" 
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 12-02-2019, 06:27 PM



Users browsing this thread: 1 Guest(s)