Checkmate ... A cybercrime thriller dreamer
#14
சில விளக்கங்கள்: நாம் ஒரு ப்ராட் பாண்ட் இணைப்பை BSNLலிடமிருந்து பெறுகையில் நமது இணைப்பிற்கு என்று ஒரு தனி இணைய விலாசம் கொடுக்கப் படுவது இல்லை. நமது கணிணி நமக்கு அருகே இருக்கும் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் (telephone exchange) இருக்கும் ஒரு கணிணியை தொடர்பு கொள்ளுகிறது. ஒவ்வொரு முறை நாம் இணையத்தில் இணைக்கும் போதும் அந்த கணிணிக்கு என்று ஒதுக்கி வைத்து இருக்கும் விலாசங்களில் அச்சமயம் உபயோகத்தில் இல்லாத ஒரு விலாசத்தை உங்கள் கணிணிக்கு இடுகிறது. அதன் பிறகு உங்களது தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் அந்த விலாசத்தில் இருந்து தொடங்கி இணையத்தில் இருக்கும் மற்ற விலாசங்களுடன் நடக்கின்றன. ஆகவே யாராவது ஒரு தகவல் பரிமாற்றத்தை மோப்பம் பிடித்து (உண்மையில் இச்செயல் ஆங்கிலத்தில் sniffing என்றே அழைக்கப் படுகிறது!) எங்கிருந்து வருகிறது என்று கண்டு பிடிக்க முயன்றால் அவர்களின் தேடல் BSNL எக்ஸ்சேஞ்சில் முடியும். BSNL எக்ஸ்சேஞ்சில் இருக்கும் கணிணியை DHCP சர்வர் (Dynamic Host Configuration Protocol Server) என்று பெயர். ப்ராக்ஸி சர்வர் எனப்படுவதும் ஒரு வித கணிணியே. அதன் வழியாக இணையத்தை தொடர்பு கொண்டால் நமது இணைய விலாசத்தை அது மறைத்து வைக்கும். பல இணைய தளங்களில் இத்தகைய கணிணிகள் இருக்கின்றன நாம் அவை மூலம் இணையத்தை தொடர்பு கொண்டால் நமது இணைய விலாசம் வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கப் படும். சக்திவேல் சிரித்த முகத்துடன், "ரொம்ப நன்றி மிஸ்டர் எட்வர்ட்ஸ். நான் உங்களோட அல்காரிதம் நிறைய பாத்து இருக்கேன். ஒரு தடவை உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சேன். பதில் வரலே அதனால அதுக்கு அப்பறம் தொடர்பு கொள்ளவில்லை" ஜாஷ்வா, "நீங்க என்கூட தொடர்பு கொள்ள பாத்தீங்களா? எந்த ஐடில இருந்து மோர்லா(m0rla) விலிருந்தா?" சக்திவேல், "இல்லை, வேற ஒரு ஐடில இருந்து" ஜாஷ்வா, "நானே உங்களை இன்னும் சில நாட்களில் தொடர்பு கொள்ளனும்னு இருந்தேன்" நித்தின், "எதுக்கு? ஏன் எங்க பாட் நெட்டை மோப்பம் பிடுச்சுட்டு இருந்தீங்க மிஸ்டர் எட்வர்ட்ஸ்?" ஜாஷ்வா, "முதல்ல இந்த மிஸ்டர் எட்வர்ட்ஸ் வேண்டாம். நான் உங்களை விட ரெண்டு மூணு வயசுதான் பெரியவனா இருப்பேன். ஜாஷ்வா இல்லைன்னா ஜாஷ்ன்னு கூப்பிடுங்க. சரி, நான் உங்க நிஜப் பெயரை தெரிஞ்சுக்கலாமா?" சக்திவேலும் நித்தினும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். ஜாஷ்வா, "சோ, நீங்க ரெண்டு பேரும் இண்டியாவா?" என்ற பிறகு சக்திவேலை காண்பித்து "உன்னைப் பாத்து ஒரு வேளை ஸ்ரீலங்காவோன்னு நினைச்சேன்" நித்தின், "ஸ்ரீலங்காவுக்கு ரொம்ப பக்கத்தில! தமிழ் நாடுன்னு ஒரு மாகாணம் அதுல இருந்து வந்து இருக்கான்" ஜாஷ்வா, "ஓ, நீ தமிழ் பேசுவையா?" என்றபடி உடைந்த தமிழில், "நல்லா இருக்கீங்களா?" சக்திவேல், "அமேஸிங்க்! உனக்கு எப்படி் தமிழ் தெரியும்?" ஜாஷ்வா, "ஏன்னா, என் மனைவி தமிழ் பேசுவா. அவ ஸ்ரீலங்கால இருந்து வந்தவ" நித்தின், "வாவ், எப்படி? அவங்க இங்க வந்தாங்களா? இல்லை நீ அங்க போனப்ப பழக்கமா?" ஜாஷ்வா, "அவ இங்க வந்தா" சக்திவேல், "சரி, இப்ப சொல்லு எதுக்கு எங்க பாட் நெட்டை மோப்பம் பிடிச்சே" ஜாஷ்வா, "அது எந்த தாக்குதலுக்கும் விழாம ஓடிட்டு இருக்கான்னு பாக்கத்தான். ரியலி இம்ப்ரெஸிவ்! அருமையான வேலை செஞ்சு இருக்கீங்க" சக்திவேல், "உன் பாராட்டுக்கு நன்றி. ஆனா அது மட்டும் தான் காரணம்ன்னு எனக்கு தோணலை. ப்ளீஸ் உண்மையை சொல்லு" நித்தின், "நீயே எங்களுடன் தொடர்பு கொள்ளனும்னு இருந்தேன்னு சொன்னியே. அது எதுக்கு? அதுவும் எங்களை பாராட்டவா?" ஜாஷ்வா, "நீங்க ரெண்டு பேரும் நான் நினைச்சதை விட புத்தி சாலிங்க. சொல்றேன். வெளியில எதாவுது ஒரு பப்புக்கு (pub) போய் உக்காந்து பேசலாமா?" அடுத்து அவர்களது உரையாடல் பப்பில் தொடர்ந்தது. ஜாஷ்வா, "உங்க பாட் நெட்டில இருந்து உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருது?" நித்தின், "லுக் ஜாஷ்வா, எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்களில் நாட்டம் இல்லை. சோ, வேற எதைப் பத்தியாவுது பேசு" சக்திவேல், "இரு நித்தின், அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு முடிவு பண்ணலாம்" நித்தின், "என்ன சொல்லப் போறான்? பாட் நெட்டுல இருக்கற க்ரெடிட் கார்ட் விபரங்களை ஒரு சர்வருக்கு அனுப்பிச்சா ஒரு கார்டுக்கு பத்து டாலர் அப்படீம்பான். இது நமக்கு ஏற்கனவே வந்த ஆஃபர் தானே?" ஜாஷ்வா, "நீ என்னை ரொம்பவும் கம்மியா எடை போட்டு இருக்கே. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்பறம் சொல்லு" சக்திவேல், "சரி, ஜாஷ்வா. சொல்லு" ஜாஷ்வா, "உங்களுக்கு கொலம்பியன் ட்ரக் கார்டல் (Columbian Drug Cartel) அப்படின்னா என்னன்னு தெரியுமா?" நித்தின், "கொலம்பியன் ட்ரக் லார்ட்ஸ் (Columbian Drug Lords) அப்படின்னு ஒரு டாம் க்ளான்ஸி (Tom Clancy) எழுதின புக்ல படிச்சு இருக்கேன். அவங்களை தானே சொல்றே?" ஜாஷ்வா, "அவங்க தான். நீ அந்த புக்ல படிச்சதும் ஓரளவு உண்மைதான். அப்படி பட்ட போதைப் பொருள் முதலாளிகள் நிறைய பேர் இருந்தாங்க. ஸீ.ஐ.ஏ (CIA)வும் அமெரிக்க ராணுவமும் கொலம்பியன் போலீஸ்கூட சேர்ந்து நிறைய ட்ரக் தயாரிக்கறவங்களை தீத்து கட்டிட்டாங்க. இப்ப அரசாங்கம் மாறினதுக்கு பிறகு மிச்சம் இருக்கறவங்க க்ரூப் க்ரூப்பா சேந்து கோக்கேயின் (Cocaine) உற்பத்தி செஞ்சு வினியோகம் செய்யறாங்க. கொலம்பியாவுக்கு உள்ள யாரும் அவங்களை அசைச்சுக்க முடியாது" சக்திவேல், "சரி, அவங்களுக்கு என்ன இப்ப?" ஜாஷ்வா, "சொல்றேன். ஒரு காலத்துல அந்த கொலம்பியன் ட்ரக் லார்ட்ஸ் (Columbian Drug Lords - போதைப் பொருள் முதலாளிகள்) கொலம்பியாவில் கோக்கேயின் உற்பத்தி செஞ்சு அமெரிக்காவில இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் வந்து வாங்கிட்டு போற வாடிக்கையாளர்களுக்கு வித்துட்டு இருந்தாங்க. அப்படி அங்க இருந்து வாங்கிட்டு வர்றவங்களை இறக்குமதியாளர்கள்ன்னு சொல்லுவாங்க. அங்க இருந்து வாங்கிட்டு வர்றவங்க அதை கடத்திட்டு அமெரிக்காவுக்குள்ள கொண்டு வந்து இங்க இருக்கற மொத்த விலையில் விற்கும் வினியோகஸ்தர்களுக்கு விப்பாங்க. வினியோகிஸ்தர்கள் தெருவில் விற்கும் டீலர்களுக்கு விப்பாங்க. டீலர்கள் கோக்கேயின் உபயோகிக்கறவங்களுக்கு விப்பாங்க. இப்படித்தான் ரொம்ப வருஷமா கோக்கேயின் வியாபாரம் நடந்துட்டு இருந்தது. ஒவ்வொருத்தரும் வாங்கின விலைக்கு மேல லாபம் வெச்சு அடுத்தவங்களுக்கு விப்பாங்க. இந்த ட்ரக் கார்டல் வந்தப்பறம் இறக்குமதியாளர்களை முழுக்க நீக்கிட்டாங்க. அவங்களே அமெரிக்காவுக்குள்ள கொண்டு வந்து வினியோகஸ்தர்களுக்கு விக்க ஆரம்பிச்சாங்க"நித்தின், "அந்த ஊர்ல இருந்து அவங்க ஏன் அப்படி ரிஸ்க் எடுத்துக்கணும்?" ஜாஷ்வா, "ஏன்னா அங்க வாங்கி இங்க வினியோகஸ்தர்களுக்கு விக்கறவங்கதான் அதிக பட்சம் லாபம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்க" சக்திவேல், "எவ்வளவு லாபம்?" ஜாஷ்வா, "கோக்கேயின் உற்பத்தி செய்யறவங்க கார்டல்காரங்களுக்கு ஒரு கிலோ இருநூற்று ஐம்பது டாலருக்கு (USD 250) விக்கறாங்க. அதை கார்டல்காரங்க இறக்குமதியாளர்களுக்கு ஆயிரத்து பத்து (USD 1,010) டாலருக்கு வித்துட்டு இருந்தாங்க.
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 12-02-2019, 06:25 PM



Users browsing this thread: 1 Guest(s)