Checkmate ... A cybercrime thriller dreamer
#13
 First Meeting with Joshua Edwards Saturday, May 3, 2008 8:30 PM ஜாஷ்வா எட்வர்ட்ஸுடன் முதல் சந்திப்பு 2008 மே 3 சனிக்கிழமை இரவு 8:30 அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்த மூன்றே நாட்களில் அவர்களுக்கு தேவையானவை எல்லாவற்றையும் அமைத்து விட்ட திருப்தியில் திளைத்தனர். அன்று, மே மூன்றாம் தேதி சனியன்று இருவரும் வெளியில் இரவு உணவை முடித்து திரும்பும் போது அவர்களது அப்பார்ட்மென்ட் வாசலில் பார்பதற்கு டென்ஸில் வாஷிங்க்டனைப் போன்ற ஒரு ஆப்ரிக்கன்-அமெரிக்க இளைஞன் நின்று கொண்டு இருந்தான். இவர்கள் அவனை நெருங்கியதும், அவசரமாக அவன் அவர்களை அணுகி பதட்டமான முகத்துடன், "kill9 and m0rla? I have something very urgent to tell you. Please open the door to your appartment. (கில்9, மோர்லா? உங்களிடம் அவசரமாக நான் ஒன்று கூற வேண்டும். சீக்கிரம் உங்கள் வீட்டு கதவை திறவுங்கள்) என்றான். முதலில் தங்களது ஹாக்கர் உலக சங்கேத பெயரில் அவன் அவர்களை அழைத்ததை கண்டு பிரமித்து நின்றனர். சக்திவேல் முதலில் சுதாரித்துக் கொண்டு சிறிது கடினமான முகத்துடன், "என்ன சொல்றே? உனக்கு யார் வேணும்?" என்று வினவ, எதிரில் இருந்தவன், "எனக்கு உங்க ரெண்டு பேரைப் பத்தி ரொம்ப நல்லா தெரியும். இப்ப பேசிட்டு இருக்க நேரம் இல்லை. உடனே கதவை திற" என்றதும் சக்திவேல் கதவை திறந்தான். இவர்களுக்கு முன் வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞன் நேராக அவர்கள் புதிதாக உருவாக்கி இணையத்தில் இணைத்து இருந்த கணிணிகளின் இணைப்பை பிடுங்கி எறிந்தான். நித்தின் சக்திவேல் இருவரும் அவன் செயலை பார்த்து பெரும் கோபத்துடன் நின்று இருக்க அந்த ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞன் தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி அவர்களிடம் , "ஹாய், நான் ஜாஷ்வா எட்வர்ட்ஸ், ஹார்ஷ்7 (harsh7) என்னோட ஜீமெயில் ஐடி" என்ற படி கை குலுக்க கை நீட்டினான். அந்த ஜீமெயில் ஐடி அவர்கள் இருவரும் மிக நன்றாக அறிந்த ஒன்று. கடந்த ஐந்து வருட காலமாக இந்த ஜீமெயில் ஐடி ஹாக்கர் உலகத்தில் மிக பிரபலமான ஒரு ஐடி. அந்த ஐடியில் இருந்து பல ஹாக்கிங்க் முறைகளும் அல்காரிதங்களும் வெளியிடப் பட்டு இருந்தன. உண்மையில் இருவரும் அந்த ஐடியின் உரிமையாளனுடன் தொடர்பு கொள்ள முயன்று இருந்தனர். ஒரு பதிலும் வராததில் மற்ற ஹாக்கர்களிடம் விசாரிக்க அந்த ஐடியின் உரிமையாளன் வெளி உலகில் எவருடனும் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்று அறிந்தனர். அந்த சங்கேத பெயரைக் கேட்ட சக்திவேல் முதலில், "நீதான் ஹார்ஷ்7 அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்?" ஜாஷ்வா, "நான் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். உங்க ரெண்டு பேர் லாப்டாப்புலையும் உங்க பாட் நெட் பத்தி எதுவும் இருக்காதுன்னு நம்பறேன. நெட்டுல கனெக்ட் பண்ணி மெயில் ஓபன் பண்ணி பாருங்க" சட்டென்று நித்தின் தன் லாப்டாப்பை இணையத்தில் இணைத்து ஜீமெயிலை திறக்க அதில் ஹார்ஷ்7இடமிருந்து "ஹாய் கில்9, உங்களுடைய சர்வரின் இணைய முகவரி (Server's IP Address) எளிதில் கண்டு பிடிக்க கூடிய ஒரு நிஜ முகவரியை குறிக்கிறது. உடனே அதன் இணைப்பை துண்டிக்கவும்" என்று ஒரே ஒரு வரி ஈமெயில் வந்து இருந்தது. அதைப் பார்த்து விட்டு நித்தின், "எப்படி எங்க வைரஸ் சர்வர் (வழங்கி மென்பொருள்) இங்க இருக்குன்னு கண்டு பிடிச்சே?" ஜாஷ்வா, "ஒரு இணைய முகவரி (IP Address) இருந்தா அதோட நிஜ முகவரியை கண்டு பிடிக்கறது இங்க இண்டியா மாதிரியோ ஸ்ரீலங்கா மாதிரியோ அவ்வளவு கஷ்டம் இல்லை. அதுவும் நீங்க எடுத்து இருக்கற இண்டர்நெட் கனக்ஷனுக்கு ஃபிக்ஸ்ட் ஐ.பி அட்ரெஸ் (fixed IP Address) கொடுத்து இருக்காங்க. அதுல இருந்து நேரடியா ஃபோன் கம்பெனி காரங்களோட சர்வருக்கு கனெக்ட் ஆகி இருக்கு. நடுவுல ஒரு ப்ராக்ஸி சர்வரோ DHCP சர்வரோ இல்லை. எஃப்.பி.ஐயும் (FBI), என்.எஸ்.ஏ (NSA)வும் போற வர்ற எல்லா இண்டர்னெட் மெஸ்ஸேஜையும் மோப்பம் பிடுச்சுட்டு இருப்பாங்க. அதே மாதிரி ஒரு சில பாட் நெட்டை நானும் மோப்பம் பிடிச்சுட்டு இருந்தேன். அதுல உங்களோடதும் ஒண்ணு. நான் எஃப்.பி.ஐ(FBI), என்.எஸ்.ஏ(NSA) பத்தி கவலைப் படலே. ஏன்னா உங்களோடது விளம்பர ஈமெயில் அனுப்பறதை தவிற யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத ஒரு பாட் நெட். ஸைபர் கள்ளச் சந்தையில இருக்கற மத்தவங்களைப் பத்திதான் கவலை பட்டேன். அவங்க கைக்கு உங்க பாட் நெட்டோட கண்ட்ரோல் சிக்குச்சுன்னா அதை வெச்சுகிட்டு நிறைய சம்பாதிக்கலாம். இதுவரைக்கும் உங்க பாட் நெட்டுக்கு நிறைய ஸைபர் தாக்குதல் வந்து இருக்கும். ஆனா இப்படி உங்க நிஜ விலாசம் தெரிஞ்சா நிஜத் தாக்குதல் வரும்"
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 12-02-2019, 06:24 PM



Users browsing this thread: 1 Guest(s)