Checkmate ... A cybercrime thriller dreamer
#12
மாறாக, அந்த பாட் நெட்டை அதில் உட்பட்ட கணிகளின் மூலம் ஸ்பாம் (spam) எனப்படும் விளம்பர ஈமெயில்கள் அனுப்பவதற்கு மட்டும் பயன் படுத்த முடிவெடுத்தனர். அவர்கள் திட்ட மிட்ட பாட் நெட்டை உருவாக்க தேவையான வைரஸ் (அதுவும் ஒரு மென்பொருள்தான்) எழுதும் போது ஆங்கிலத்தில் ப்ரேக் த்ரூ (break through) என்று அழைப்பது போல அவர்களின் ஒரு சிறிய, ஆனால் மிக நுட்பமான கண்டுபிடிப்பால் அவர்கள் எழுதிய வைரஸ் பொதுவான பாட் நெட் உருவாக்கும் வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்ததாய் அமைந்தது. அதன் மூலம் இணையத்தில் எந்த விதமான தகவல் பறிமாற்றமும் செய்ய முடிந்தது. அந்த வைரஸ் பாதித்த கணிணியில் இருந்து அந்த கணிணியின் உரிமையாளர் உபயோகித்தது போல் எந்த காரியமும் செய்யலாம். உதாரணமாக, அந்த வைரஸ் பாதிக்கப் பட்ட கணிணி மூலம் அதன் உரிமையாளர் செய்தது போல ரயில் டிக்கட் புக் செய்யவோ, ஒரு வலைதளத்திற்கு சென்று அதில் விற்பனை செய்யப் படும் பொருளை வாங்கவோ முடியும். கணிணித் துறையில் இதை Secured HTTP Protocol communication என்று அழைப்பர். அது மட்டும் அல்ல. அந்த வைரஸ் மூலம் அதை மற்ற கணிணிகளுக்கு பரவ வைக்கவும் முடியும். வைரஸ் எழுதி முடித்து இணையத்தில் பரவ விட்ட ஆறு மாதங்களில் அவர்களது பாட் நெட்டில் உலகில் பல மூலைகளில் இருந்த ஐம்பதாயிரம் கணிணிகளுக்கு மேல் சேர்ந்து இருந்தன. தங்களது பாட் நெட் அந்த அளவுக்கு வந்த பிறகே அதன் மூலம் பணம் சம்பாதிப்பதைப் பற்றி திட்டமிட்டனர். ஹாக்கர்கள் மத்தியில் தங்கள் பாட் நெட் இருப்பதை அறிவித்து, ஈமெயில் அனுப்புவதை தவிர தங்களின் வைரஸ் மூலம் செய்யக் கூடிய மற்றவைகளை பற்றி பறைசாற்றிக் கொண்டனர். இருப்பினும் பெரிய அளவில் விளம்பர ஈமெயில் அனுப்புவதை மட்டுமே அவர்களது பாட் நெட் மூலம் அமுல் படுத்த இருப்பதாக அறிவித்தனர். தேவை இருப்பவர்கள் அவர்களை தொடர்பு கொள்ள மாங்க்ஸ (monks) என்ற பெயரில் ஒரு ஜீமெயில் (GMAIL) ஐடியும் தொடங்கினர். அதிலிருந்து அவர்களது பாட் நெட் மாங்க்ஸ் பாட் நெட் (Monks Bot Net) என்ற பெயரில் பிரபலமானது. இதற்கிடையே இருவரும் பி.டெக் முடித்து ஒரே மென்பொருள் நிறுவனத்தில் அதன் பெங்களூர் மையத்தில் வேலைக்கு சேர்ந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில அவர்களது மாங்க்ஸ் பாட் நெட் (Monks Bot Net) மிகப் பிரபலமானது. அதில் உட்பட்ட கணிணிகள் தினமும் பல லட்ச விளம்பர ஈமெயில்களை அனுப்பிய படி இருந்தன. அமெரிக்காவில் இருக்கும் ஒரு வங்கியில் தங்களது நண்பன் ஒருவன் மூலம் சேமிப்பு கணக்கு (savings account) ஒன்று தொடங்கினர். வாடிக்கையாளரிடம் தங்களது பாட் நெட் மூலம் பலருக்கும் விளம்பர ஈமெயில் அனுப்புவதற்கான அவர்கள் வசூலித்த கட்டணத்தை அந்த சேமிப்பு கணக்கில் இட (deposit செய்ய) பணித்தனர். பிறகு அதில் இருந்து இன்டர்நெட் பாங்கிங்க் (Internet Banking) மூலம் பணத்தை மற்றவர் பேரில் தொடங்கி இருந்த இந்திய வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தி (transfer செய்து) அவைகளில் இருந்து அந்த பணத்தை உபயோகித்தனர். இருவரும் அவரவர் வேலைகளிலும் நல்ல பெயர் வாங்கினர். இரண்டு வருடம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு வருட காலம் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் இருந்த ஒரு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் பணி புரிய ஆன்-சைட் அசைன்மெண்டில் (on-site assignment) அனுப்பப் பட்டனர். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி வியாழன் காலை வேளையில் நியூ யார்க் நகரை அடைந்த இருவரும், முதல் வேலையாக இருவரும் சேர்ந்து தங்க ஒரு அப்பார்ட்மென்டை வாடகைக்கு எடுத்தனர். அடுத்து வரும் திங்கள் வரை அவர்களுக்கு ஓய்வு நேரம் இருந்தது. அடுத்த நாள் தங்களது பாட் நெட்டை பராமரிக்க தேவையான கணிணிகளை தயார் செய்ய முடிவெடுத்தனர். அந்த கணிணின் பாகங்களை தனி தனியே வாங்கி அவற்றை எல்லாம் இணைத்து ஆற்றல் மிகு இரு கணிணிகளை உருவாக்கினர்(assemble செய்தனர்). அன்றே அடுத்த வேலையாக இரு வெவ்வேறு கம்பெனிகளிடம் இருந்து இரு ப்ராட்பேண்ட் இணைப்புகளுக்கு விண்ணப்பம் கொடுத்து அன்று மாலையே அந்த இணைப்புகள் வந்ததை கண்டு வியந்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 12-02-2019, 06:22 PM



Users browsing this thread: 1 Guest(s)