Checkmate ... A cybercrime thriller dreamer
#11
 மேற் கொண்டு அவள் மன நிலையை திடப் படுத்தும் பயிற்சிகளுக்காக அடுத்த இரண்டு மாதங்கள் தினமும் காலையில் அலுவலகத்திற்கு செல்லுமும் அவளை அம்மையத்தில் விடுத்து அவளை மதியம் அழைத்து வந்து தன் ஃப்ளாட்டில் உறங்க வைத்த பின் திரும்ப அலுவலகம் சென்றான். சுருக்கமாக சொன்னால் அவளை ஒரு தாயை போல பார்த்துக் கொண்டான். மூன்று மாதங்களும் அவள் சுய நினைவோடு அவனுடம் இருக்கும் போது அவளிடமிருந்து அவளுக்கு நடந்தவைகளை அறிந்து கொண்டான். பார்த்த முதல் நாளே அவள் இருந்த நிலையிலும் வெளிப்பட்ட அழகில் மயங்கியவன் அவளது வரலாற்றை அறிந்தபின் தீவிரமாக காதலிக்க தொடங்கினான். மனதுக்குள் இவளை தன்னவளாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். அவன் அன்பிலும் பண்பிலும் லயித்து மனதுக்குள் இவனைப் போல் ஒருவனைத்தானே என் பெற்றோரோ அண்ணனோ எனக்கு மணமுடித்து வைத்து இருப்பார்கள் என்று நினைத்தாலும் தன்னை அவனுக்கு தகுதியற்றவளாக கருதினாள். பல நாள் வாக்கு வாதங்களுக்கு பிறகு அவன் காதலுக்கு ஒப்புதல் அளித்தாள். சர்ச்சில் நண்பர்கள் புடை சூழ சஞ்சனா பார்த்திபனாக இருந்தவளை சஞ்சனா எட்வர்ட்ஸாக ஆக்கி பிறகு பிள்ளையார் கோவிலில் தாலியும் கட்டினான். அடுத்த மூன்று வருடங்களில் தாம்பத்தியத்துடன் அவளை மேலும் படிக்க வைத்தான். பிறந்தது முதல் தாயின் அன்புக்கு ஏங்கியவனை தாயாகவும் படுக்கையில் தாரமாகவும் சஞ்சனா தன் அன்பினால் குளிப்பாட்டினாள். படித்து முடிக்கும் வரை மகப்பேறு வேண்டாமென்று இருந்தவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே குடும்பத்தை பெரிது படுத்த முடிவெடுத்து இருந்தனர்.Creation of Monks BotNet Sep-2003 to May-2008 IIT-Mumbai, IIT-Madras till New York மாங்க்ஸ் பாட் நெட் உருவாக்கம் செப்டம்பர்-2003ல் இருந்து மே-2008 வரை ஐஐடி-மும்பை மற்றும் ஐஐடி-மெட்ராஸ், சென்னையில் தொடங்கி நியூ யார்க் நகரம் வரை நித்தினும் சக்திவேலும் பி.டெக் இரண்டாம் வருடத்தில் இருக்கும் போது முதலில் மும்பை ஐ.ஐ.டி நடத்தும் டெக்ஃபெஸ்ட் (TechFest) வருடாந்திர தொழில்நுட்ப விழாவில் நடந்த மென்பொருள் எழுதும் போட்டியின் போது சந்தித்தனர். இருவரின் சிந்தனைகளிலும் கருத்துக்களிலும் இருந்த ஒற்றுமையால் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். முதன் முதலில் அவர்கள் சட்ட விரோத ஹாக்கிங்க் செய்தது இன்னொரு ஹாக்கிங்க் போட்டியில். தென் கொரியாவில் இருக்கும் ஒரு கணிணி பாதுகாப்பு நிறுவனம் ஒரு ஹாக்கிங்க் போட்டி அறிவித்து இருந்தது. இணையத்தில் இணைக்கப் பட்டு இருக்கும் அந்நிறுவனத்தினுடைய ஒரு கணிணிக்குள் நுழைந்து அதில் ஒரு தகவலை பதிப்பதே அப்போட்டியின் குறிக்கோள். ஆனால் அந்த கணிணி மிகுந்த பாதுகாப்பான ஒரு அமைப்புக்குள் இருந்து இணைக்கப் பட்டு இருந்தது. நித்தின், சக்தி உட்பட அப்போட்டியில் கலந்து கொண்டோரில் சிலரும் அதனை கண்ட பிறகு அப்போட்டி ஒரு கண் துடைப்பு என்று அறிந்தனர். வெறுப்படைந்த நித்தினும் சக்தியும் சேர்ந்து அந்நிறுவனம் போட்டியில் கலந்து கொண்டோரின் பட்டியலை சேமித்து வைத்து இருந்த கணிணிக்குள் நுழைந்து தங்களின் பெயர்களை முதலாக வந்ததாக மாற்றி பதித்து அது பற்றி மற்ற போட்டியாளருக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஒரு அறிக்கை விட்டனர். இதனால் kill9 (நித்தின்) மற்றும் m0rla (சக்தி) என்ற பெயரால் அவர்களை அறிந்த ஹாக்கர் உலகத்தில் மிக பிரபலம் அடைந்தனர். மூன்றாம் வருட கடைசியில் இருவரும் சேர்ந்து ஒரு பாட் நெட் (Bot Net) அமைக்க திட்ட மிட்டனர். பாட் நெட் என்பது ஒரு வைரஸ் மூலம் உடமையாளருக்கு தெரியாமல், ஏவி விட்டவரின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் கணிணிகளின் குழுமம் (group or network). ஆக்கிரமிக்கப் பட்ட கணிணிகளில் இருக்கும் தகவல்களை சேகரிக்கவும், அந்த கணிணிகளில் இருந்து ஈமெயில் அல்லது சாட் மூலம் தகவல் அனுப்பவும், குறிப்பிட்ட வலை தளங்களை தாக்கவும் பாட்நெட்கள் பயன் படுத்த படுகின்றன. சில சமயம் பாட்நெட்டை உருவாக்கியவர்கள் (அதாவது அதன் வைரஸை ஏவி விட்டவர்கள்) அதில் உட்பட்ட கணிணிகளை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் வேறு ஒரு கணிணியில் புகுத்தப் பட்ட ஒரு சர்வர் (வழங்கி) எனப்படும் ஒரு மென்பொருள் மூலம் தொடர்பு கொள்வார்கள். பாட்நெட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அவைகள் இருப்பதை வெளியுலகம் அறிவது இல்லை. அதில் உட்பட்ட கணிணிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஹாக்கர்கள் (hackers) மத்தியில் ஒரு பாட்நெட் பிரபலம் அடைகிறது. உண்மையில் ஸ்டார்ம் வர்ம் (storm worm) எனப்படும் வைரஸால் கைப்பற்றப் படும் கணிணிகளை கொண்டு ஸ்டார்ம் பாட் நெட் (Storm Bot Net) என்ற பெயரில் அழைக்கப் படும் ஒரு பாட் நெட் பல சட்ட விரோத செயல்களில் இன்று வரை ஈடு பட்டு வருகிறது. அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ (FBI) அந்த பாட் நெட்டை கைப் பற்றும் முயற்சியில் இதுவரை வெற்றி காணவில்லை. மற்ற பாட் நெட்களை போல் அடிமையாக்கப் பட்ட கணிணிகளில் இருக்கும் தகவல்களை திருட நித்தினுக்கும் சக்திக்கும் விருப்பம் இல்லை. 
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 12-02-2019, 06:22 PM



Users browsing this thread: 1 Guest(s)